பெப்ரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெப்ரின் (Pébrine) அல்லது "மிளகு நோய்" என்பது பட்டுப்புழுகளில் ஏற்படும் நோய் ஆகும். இந்நோய் புரோட்டோசோவா எனப்படும் முதனுயிரியால் ஏற்படுகிறது. நோயுற்ற பட்டுப்புழுக்களின் மீது மிளகு போன்ற கரும்புள்ளிகள் தோன்றுவதால் இந்நோய் “பெரின்” நோய் எனப்படுகிறது. இந்நோய் நோசிமா பாம்பைசிசு எனும் முன்னுயிரியால் ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் முட்டைகளை பாதிப்படையச்செய்கிறது. எனவே இந்நோய் அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது. இந்நோய் பாதித்தப் பட்டுப்புழுக்கள் இறந்துவிடும்.[1]

லூயிஸ் பாஸ்டர் என்பவர் முதன் முதலில் பெப்ரின் நோய் உருவாவதற்கான காரணத்தை கண்டறிந்து கட்டுப்படுத்தும் முறையினை அறிமுகப்படுத்தினார். இதனால் இந்நோயின் அழிவிலிருந்து பிரான்சு பட்டுவளர்ப்பு காக்கப்பட்டது. இருப்பினும் இந்நோய் பலநாடுகளில் காணப்படுகின்றது.[2][3]

இந்நோயினை ஏற்படுத்தும் முன்னுயிரியான நோசிமா பாம்பைசிசு மைக்ரோஸ்போரிடியம் வகையினைச் சார்ந்தது. இது பாதிக்கப்பட்ட முட்டைகளிலிருந்து குஞ்சு பொரிக்கும் அனைத்து பட்டுப்புழுக்களையும் கொன்று பட்டுப்புழுக்கள் உண்ணும் உணவில் கலந்து பிற பட்டுப்புழுக்களையும் பாதிக்கும். பட்டுப்புழுக்கள் இந்த மைக்ரோஸ்போரிடிய தொற்றினை இளம் உயிரி நிலையில் பெற்றால், நோயின் அறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை. இருப்பினும், தொற்றுக்குள்ள அந்துப்பூச்சிகள் இடும் முட்டைகளில் இந்த மைக்ரோஸ்போரிடிய இனப்பெருக்க துகள்கள் காணப்படும். எனவே பாதிக்கப்பட்ட முட்டைகளிலிருந்து பொரிக்கும் அனைத்து புழுக்களும் இவற்றின் இளம் உயிரி நிலையில் நோய்த்தொற்று காரணமாக இறந்துவிடும். எனவே, முட்டை உற்பத்தி நிலையங்களில் நுண்ணோக்கி ஒன்றில் தாய் அந்துப்பூச்சியின் உடல் திரவத்தை சோதித்து, நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட அந்துப்பூச்சிகளிடமிருந்து அனைத்து முட்டைகளையும் அழித்துவிட வேண்டும்.[4]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rahul, Kamidi; Manjunatha, Gyarehalli Rangappa; Sivaprasad, Vankadara (2021-01-01). Gurtler, Volker; Subrahmanyam, Gangavarapu. eds (in en). Chapter 4 - Pebrine monitoring methods in sericulture. Methods in Silkworm Microbiology. 49. Academic Press. பக். 79–96. doi:10.1016/bs.mim.2021.04.003. https://www.sciencedirect.com/science/article/pii/S0580951721000052. 
  2. *Louis Pasteur (1870). Gauthier-Villars. Paris (ed.). Études sur la maladie des vers à soie. Moyen pratique assuré de la combattre et d'en prévenir le retour (in பிரெஞ்சு).
  3. Pasteur Valléry-Radot (Hrsg.): Œuvres de Pasteur. Band 4: Études sur la maladie des vers à soie. Masson, Paris 1926, S. 54-186.
    • Chavannes: Ueber die Krankheit des Seidenspinners und die Erziehung einer gesunden Brut desselben. In: Berliner entomologische Zeitschrift, Band 5, 1861, S. 175ff.
  4. பி. மாரியப்பன் (2017). "20 பட்டுப்புழு நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்". பட்டுப்புழு வளர்ப்பு (முதற் பதிப்பு ed.). தஞ்சாவூர்: இயல் பதிப்பகம் (published 25.08.2017). p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789385283161. {{cite book}}: Check date values in: |publication-date= (help); More than one of |at= and |pages= specified (help); More than one of |author= and |last= specified (help); Unknown parameter |மொழி-= ignored (help)

பார்வை நூல்கள்[தொகு]

  • Chavannes: Ueber die Krankheit des Seidenspinners und die Erziehung einer gesunden Brut desselben. In: Berliner entomologische Zeitschrift, Band 5, 1861, S. 175ff.
  • Nicola Williams, Miles Roddis: Languedoc-Roussillon. MairDumont, Ostfildern 2009, S. 106.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்ரின்&oldid=3526024" இலிருந்து மீள்விக்கப்பட்டது