பெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அவுஸ்திரேலியா தமிழர் பேரணி என்பது இலங்கைத் தமிழர் இனவழிப்பை எதிர்த்து பெப்ரவரி 5, 2009 அன்று அவுஸ்திரேலியா தலைநகரான கன்பராவில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஆகும். இதில் 4000 இற்கும் மேலான தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வை தென்துருவ தமிழ் அமைப்புக்களின் சம்மேளனம் ஒழுங்குசெய்தது.

நிகழ்வு[தொகு]

கன்பராவிலுள்ள அவுஸ்திரேலிய நடுவன் அரசின் நாடாளுமன்றம் முன்பாகக் கூடிய தமிழர்கள் இலங்கைத் தமிழருக்கு எதிரான இனவழிப்பை எதிர்த்து முழக்கமெழுப்பினர். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தை அடுத்து தமிழ் மக்களின் பேரணி முக்கிய நாடுகளின் தூதரகங்களுக்குச் சென்று அங்கு முறையீட்டு மனு கையளிக்கப்பட்டது. முதலில் ஐக்கிய இராச்சியத் தூதரகத்துக்கும் பின்னர் அமெரிக்காவின் தூதரகத்துக்கும் சென்று இறுதியில் இந்தியத் தூதரகத்துக்குச் சென்று மனு கையளிக்கப்பட்டது.