பெப்ரவரி 2009, புதுக்குடியிருப்பு ஊடறுப்புத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுக்குடியிருப்பு ஊடறுப்புத் தாக்குதல் 2009 பெப்ரவரி 1 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பெருமளவான கனரக ஆயுதங்கள் அடங்கிய படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர்[1].

நூற்றுக்கணக்கான சிறிலங்கா சிறப்பு படைப்பிரிவினர் மன்னாகண்டல் மற்றும் கேப்பாப்புலவு ஆகிய பகுதிகளில் முகாமிலிருந்து புதுக்குடியிருப்பை பகுதியை கைப்பற்றும் நோக்கில் இறுதித் தாக்குதலுக்கு தயாராகி இருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணிகள் இராணுவத்தின் பின்வளங்களை ஊடறுத்து பாரிய முற்றுகைத் தாக்குதலை கடந்த முதலாம் திகதி மேற்கொண்டனர். நான்கு நாட்கள் தாக்குதல்கள் இடம்பெற்றன.

கரும்புலி தாக்குதல்[தொகு]

அத்துடன் பெப்ரவரி 3ம் நாள் கரும்புலி வீரர்களின் தாக்குதலினால் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட படையப் பொருட்கள்[தொகு]

81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல 120 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல 120 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 2000 81 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 8000 ஏ.கே துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில் ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல ஆர்.பி.ஜி புரொப்ளர்கள் - பல எல்.எம்.ஜி துப்பாக்கிகள் - பல

என இன்னும் பல.

கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதாகவும் புதன்கிழமை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகை தெரிவித்திருந்தது. அதில் கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் திரு. வே.பிரபாகரனுடன் நின்று எடுத்த படங்களும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tigers seize SLA arms cache in PTK