பெப்டைடு பிணைப்பு
பெப்டைடு பிணைப்பு (peptide bond) அல்லது அமைடு பிணைப்பு (amide bond) என்பது ஒரு புரதச் சங்கிலி அல்லது புரதக்கூறு ஒன்றில் காணப்படும் இரண்டு அடுத்தடுத்த அமினோ அமில ஒற்றை மூலக்கூறுகளை இணைக்கின்ற வேதியியற் பிணைப்புகளுள் ஒன்றான சகப்பிணைப்பு ஆகும்.[1][2][3][4][5]
தொகுப்பு முறை
[தொகு]இரண்டு அமினோ அமிலங்கள் ஒரு டைபெப்டைடை ஒரு பெப்டைடு பிணைப்பின் வழியாக உருவாக்கினால் அது குறுக்க வினை என அழைக்கப் படுகிறது. இந்தக் குறுக்க வினையில், இரண்டு அமினோ அமிலங்களில் கார்பாக்சிலிக் அமில வேதி வினைக்குழு மூலமாக ஒரு மூலக்கூறும் அமீன் வேதி வினைக்குழு மூலமாக மற்றொரு மூலக்கூறும் ஒன்றை ஒன்று நெருங்குகின்றன. ஒரு மூலக்கூறானது அதன் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியிலிருந்து (COOH) ஒரு ஐதரசன் மற்றும் ஆக்சிசனையும், மற்றொரு மூலக்கூறானது, அமீன் தொகுதியிலிருந்து (NH2) ஒரு ஐதரசனையும், இழந்து ஒரு நீர் மூலக்கூற்றினை (H2O) உருவாக்குகின்றன. இதன் காரணமாக, இரண்டு அமினோ அமிலங்களும் ஒரு பெப்டைடு பிணைப்பின் (-CO-NH-) மூலம் இணைந்து ஒரு டைபெப்டைடினை உருவாக்குகின்றன.பெப்டைடு பிணைப்பானது ஒரு அமினோ அமிலத்தின் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதி மற்றும் மற்றொரு அமினோ அமிலத்தின் அமினோ தொகுதி ஆகியவற்றிலிருந்து ஒரு நீர் மூலக்கூற்றினை (H2O) இழந்து உருவாவதால் இது நீர்நீக்க தொகுப்பு வினையாக (குறுக்க வினை எனவும் அழைக்கப்படுகிறது) உள்ளது. இந்த பெப்டைடு பிணைப்பு உருவாதல் வினை ஆற்றலை உட்கொள்கிறது. இதற்குத் தேவைப்படும் ஆற்றலானது, உயிருள்ள பொருட்களில் காணப்படும் அடினோசின் முப்பாசுபேட்டிலிருந்து [6] பெறப்படுகிறது. புரதக்கூறுகள் மற்றும் புரதம் ஆகியவை அமினோ அமிலம் ங்களின் பெப்டைடு பிணைப்பினால் உருவானவை. உயிருள்ள பொருட்கள் என்சைம்களை பாலிபெப்டைடுகள் மற்றும் இரைபோசோம்களை புரதங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்கின்றன. பெப்டைடுகள் சில குறிப்பிட்ட நொதிகளால் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, முப்பெப்டைடான குளுடாதயோன் தனித்த அமினோ அமிலங்களிலிருந்து இரண்டு படிநிலைகளில் தொகுக்கப்படுகிறது. அந்த இரண்டு நொதிகளாவன: காமா-குளுடமைல்சைசிடைன் சிந்தசுடேட் மற்றும் குளுட்டாதயோன் சிந்தெடேசு ஆகியவை ஆகும்.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Walker, CBE FRSE, Peter M. B., ed. (1990) [1988]. Cambridge Dictionary of Science and Technology (reprint ed.). Edinburgh: Press Syndicate of the University of Cambridge. p. 658. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521394414.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|editor1-first=
and|editor-first=
specified (help); More than one of|editor1-last=
and|editor-last=
specified (help) - ↑ Pauling L. (1960) The Nature of the Chemical Bond, 3rd. ed., Cornell University Press.
- ↑ Stein RL. (1993) "Mechanism of Enzymatic and Nonenzymatic Prolyl cis-trans Isomerization", Adv.
- ↑ Schmid FX, Mayr LM, Mücke M and Schönbrunner ER. (1993) "Prolyl Isomerases: Role in Protein Folding", Adv.
- ↑ Fischer G. (1993) "Peptidyl-Prolyl cis/trans Isomerases and Their Effectors", Angew.
- ↑ Watson, James; Hopkins, Nancy; Roberts, Jeffrey; Agetsinger Steitz, Joan; Weiner, Alan (1987) [1965]. Molecualar Biology of the Gene (hardcover) (Fourth ed.). Menlo Park, CA: The Benjamin/Cummings Publishing Company, Inc. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0805396144.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|first1=
and|first=
specified (help); More than one of|last1=
and|last=
specified (help) - ↑ "Glutathione metabolism and its implications for health". The Journal of Nutrition 134 (3): 489–92. March 2004. பப்மெட்:14988435. http://jn.nutrition.org/cgi/pmidlookup?view=long&pmid=14988435.
- ↑ Meister A (November 1988). "Glutathione metabolism and its selective modification". The Journal of Biological Chemistry 263 (33): 17205–8. பப்மெட்:3053703. http://www.jbc.org/cgi/pmidlookup?view=long&pmid=3053703. பார்த்த நாள்: 2017-08-08.