பெப்சி விஜயன்
தோற்றம்
விஜயன் | |
|---|---|
| பணி | நடிகர், சண்டை நடிகர், சண்டை இயக்குநர் |
| பெற்றோர் | சுவாமிநாதன் (தந்தை) |
| பிள்ளைகள் | சபரிஷ் |
பெப்சி விஜயன் ஒரு இந்திய சண்டை இயக்குனர், சண்டை ஒருங்கிணைப்பாளர், நடிகர். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் பணியாற்றுகிறார். 22 வயதில் இந்திய திரைப்படத் துறையில் இளைய சண்டை இயக்குநர் என்ற சாதனையை அவர் கொண்டுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக 17 வயதில் அவர் ஒரு சண்டை நடிகர் ஆனார்.[1] அவர் சண்டை இயக்குனர் சுவாமிநாதனின் மகன் ஆவார். சுவாமிநாதன் அடிமைப் பெண் படத்தில் எம். ஜி. ஆர் செய்த புலி சண்டையை இயக்கியவர். சுவாமிநாதன் எம்ஜிஆர் படங்களுக்கு ஒரு முக்கிய சண்டை இயக்குநர் ஆவார். அதனால் விஜயன் எம்ஜிஆர் உடன் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்.[2] அவர் பெப்சியின் தலைவராக இருந்தார். இதனால் அவருக்கு பெப்சி விஜயன் என்ற புனைப்பெயர் கிடைத்தது.[3][4] அவரது மகன் சபரிஷ் ஒரு நடிகர் ஆவார். அவர் சில படங்களில் நடித்துள்ளார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "a-stunt-directors-diary". Archived from the original on 5 September 2019. Retrieved 3 March 2020.
- ↑ "Spotlight-Men-of-action" இம் மூலத்தில் இருந்து 26 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190226172918/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Spotlight-Men-of-action/articleshow/53739683.cms.
- ↑ "TAMIL FILM PRODUCER COUNCIL FEFSI FILM EMPLOYEES FEDERATION OF SOUTH INDIA VIJAYAN LIGHT MAN DIRECTORS CINEMATOGRAPHERS DRIVERS hot stills picture image gallery". Archived from the original on 21 March 2016. Retrieved 31 May 2016.
- ↑ "Strike page". Indolink Tamil. Archived from the original on 24 September 2015. Retrieved 25 October 2015.
- ↑ "Markandeyan". Sify. Archived from the original on 1 July 2016.