உள்ளடக்கத்துக்குச் செல்

பென் 10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென் 10
வகை
உருவாக்கம்மே ஆஃப் ஆக்சன்
குரல்நடிப்பு
  • தாரா ஸ்ட்ராங்
  • மீகன் ஸ்மித்
  • பால் ஈடிங்
  • டீ பிராட்லி பேக்கர்
  • ஸ்டீவன் ப்ளம்
  • ரிச்சர்ட் ஸ்டீவன் ஹார்விட்ஸ்
  • ரிச்சர்ட் மெக்கோனகல்
  • ஜிம் வார்டு
முகப்பு இசைஆன்டி ஸ்டர்னர்
பின்னணி இசைஆன்டி ஸ்டர்னர்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்4
அத்தியாயங்கள்49
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • பிறையன் ஏ. மில்லர்கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனத்திற்காக
  • டிராம் விக்சல்
  • சாம் ரிஜிஸ்டர்
தயாரிப்பாளர்கள்
  • கெல்லி குரூஸ்(பருவம் -1)
  • டொன்னா சுமித்(பருவம் 2-4)
ஓட்டம்22 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
  • மேன் ஆஃப் ஆக்சன்
  • கார்ட்டூன் நெட்வொர்க்
ஒளிபரப்பு
அலைவரிசைகார்ட்டூன் நெட்வொர்க்
ஒளிபரப்பான காலம்ஏப்ரல் 15, 2008 (2008-04-15)
Chronology
தொடர்புடைய தொடர்கள்
  • பென் 10:ஏலியன் போர்ஸ்
  • பென் 10 (2016)]
வெளியிணைப்புகள்
இணையதளம்

பென் 10 (Ben 10 முந்தைய காலங்களில் கிளாசிக் பென் 10) என்பது மேன் ஆஃப் ஆக்சனால் உருவாக்கப்பட்ட ஓர் அமெரிக்க இயங்குபடத் தொடராகும், இது கார்ட்டூன் நெட்வொர்க் ஸ்டுடியோசால் தயாரிக்கப்பட்டு வார்னர் பிரதர்ஸ் டொமெஸ்டிக் தொலைக்காட்சியால் விநியோகிக்கப்படுகிறது. இந்தத் தொடர் பென் டென்னிசன் என்ற 10 வயது சிறுவனைப் பற்றியது, அவர் "ஓம்னிட்ரிக்ஸ்" என்ற கடிகார பாணியிலான வேற்றுலகச் சாதனத்தைப் பெறுகிறார். அவரது மணிக்கட்டில் இணைக்கப்பட்டுள்ள இது, வெவ்வேறு திறன்களைக் கொண்ட 10 வெவ்வேறு அன்னிய உயிரினங்களாக மாற அனுமதிக்கிறது, இந்தக் கருவி அவரது உறவினர் குவென் மற்றும் தாத்தா மேக்சு ஆகியோருடன் பூமி மற்றும் விண்வெளியில் இருந்து தீயவர்களை எதிர்த்துப் போராட அனுமதிக்கிறது. இந்தத் தொடர் முதன்முதலில் கார்ட்டூன் நெட்வொர்க்கில் டிசம்பர் 27, 2005-இல் "ஸ்னீக் பீக் வீக்" இன் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர், சனவரி 13, 2006 முதல் ஏப்ரல் 15, 2008 வரை ஒளிபரப்பான ஒரு முழுத் தொடராக மாறியது.

இந்தத் தொடர் பரவலாகப் பிரபலமடைந்து இரண்டு எம்மி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது, அதில் "இயக்கப்படப் பிரிவில் சிறந்த தனிநபர் சாதனை" க்கான விருதை வென்றது. இந்த நிகழ்ச்சி, பென் 10: ஏலியன் ஃபோர்ஸ், பென் 10: அல்டிமேட் ஏலியன் மற்றும் பென் 10: ஆம்னிவர்ஸ் என மூன்று தொடர் நிகழ்ச்சிகளாக வெளியிடப்பட்டன. 2016 ஆம் ஆண்டில் தொடரின் அடுத்த பாகம் வெளியானது.[2][3]

கதைக்களம்

[தொகு]

இந்தத் தொடர், பென் டென்னிசனை (தாரா ஸ்ட்ராங்) மையமாகக் கொண்டுள்ளது, ஒரு பத்து வயது சிறுவன் தனது கோடை விடுமுறையில், அவரது உறவினர் குவென் (மேகன் ஸ்மித்) மற்றும் அவர்களின் தாத்தா மேக்ஸ் (பால் ஈடிங்) ஆகியோருடன். "ரஸ்ட்பக்கெட்" என்று அன்பாக பெயரிடப்பட்ட தங்கள் தாத்தாவின் வாகனத்தில் தங்கியிருக்கும் போது ஓம்னிட்ரிக்ஸ் என்ற மர்மமான கடிகார பாணியிலான சாதனத்தினைக் காண்கிறார். இந்தச் சாதனம் பின்னர் அவரது மணிக்கட்டில் நிரந்தரமாக இணைகிறது, இது பல்வேறு வகையான அன்னிய வடிவங்களாக மாறும் திறனை வழங்குகிறது, ஒவ்வொன்றும் அதன் சொந்த தனித்துவமான திறன்களையும் சக்திகளையும் கொண்டுள்ளது. அந்த சக்திகளைக் கொண்டு தீயவர்களிடமிருந்து பூமியிலுள்ள மக்களைக் காப்பாற்றுகிறார்.

மாறக்கூடிய உருவங்களின் பெயர்கள்

[தொகு]
  • ஹீட் ப்ளாஸ்ட் (heat blast)
  • சிடிங்க் பிலை (strink fly)
  • எக்ஸ்எல்ஆர்8 (XLR8)
  • போராம்ஸ் (four arms)
  • கிரே மேட்டர் (gray matter)
  • வைல்ட் மத் (wild mut)
  • டயமண்ட் ஹெட் (diamond head)
  • அப் சக் (up chuck)
  • கோஸ்ட் பிரீக் (ghost freak)
  • பென் வோல்ஃப் (ben wolf)
  • வைல்ட் வைன் (wild wine)

கதை மாந்தர்கள்

[தொகு]
  • பெஞ்சமின் கிர்பி "பென்" டென்னிசன் (குரல் கொடுத்தவர் -தாரா ஸ்ட்ராங்)

பென் ஒரு முரட்டுத்தனமான, முதிர்ச்சியடையாத சிறுவன், சண்டைகளைக் கூட நகைச்சுவையாக ரசிக்கும் திறன் கொண்டவர். விளையாட்டுக் குணம் கொண்டவராக இருந்தாலும் நல்ல இதயம் கொண்டவர் எனும் வகையில் இந்தக் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேற்றுக் கிரக வாசியாலோ மனிதராகவோ பிறருக்கு ஏற்படும் தீங்குகளைக் களைய முற்படுகிறார்.

  • குவென்டோலின் "க்வென்" டென்னிசன் (மேகன் ஸ்மித் -குரல் )

குவென் பென்னின் உறவினர் ஆவார், இவர் ஒரு கனிவான, புத்திசாலித்தனமான பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார், கணினிகளைக் கையாள்வதில் மிகவும் திறமையானவர் மற்றும் தற்காப்புக் கலை திறன்களைக் கொண்டவர். மாயாஜாலம் தெரிந்தவர்.

  • தாத்தா மேக்ஸ்வெல் "மேக்ஸ்" டென்னிசன் (குரல் - பால் ஈடிங்)

பென் மற்றும் க்வெனின் தாத்தா, கோடை விடுமுறைக்காக இருவரையும் சாலை வழிப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். "ட்ரூத்" என்ற நூலில் மேக்ஸ், தான் பிளம்பர்சு (ஒரு விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான காவல் படை) இன் ஒரு பகுதியாக இருந்ததாகவும், கடந்த காலங்களில் பல வேற்று கிரக நபர்களைக் கையாண்டதாகவும் கூறுகிறார்.

தயாரிப்பு

[தொகு]

பென் 10 திரைப்படத்தை மேன் ஆஃப் ஆக்சன் என்ற திரைப்பட நிறுவனம் உருவாக்கியது, இதனை கார்ட்டூன் நெட்வொர்க் படமனை நிறுவனம் தயாரித்தது. மேன் ஆஃப் ஆக்சன் என்பது காமிக் புத்தகப் படைப்பாளர்களான டங்கன் ரவுலியூ, ஜோ கேசி, ஜோ கெல்லி, ஸ்டீவன் டி. சீகல் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவாகும். கார்ட்டூன் நெட்வொர்க் இந்தத் தொடரை எடுப்பதற்கு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு பென் 10 எனும் கருத்தாக்கத்தில் குழு வேலை செய்தது. நிகழ்ச்சியின் முதல் இரண்டு பருவங்களை டேவ் ஜான்சன் வடிவமைத்தார்.

மேற்குறிப்புகள்

[தொகு]
  1. "Ben 10". Metacritic.
  2. Steinberg, Brian (June 8, 2015). "Cartoon Network to Revive 'Ben 10'". வெரைட்டி (இதழ்).
  3. Confirmation of 5th Ben 10 Series by Official Twitter Page of CN PR

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_10&oldid=4098103" இலிருந்து மீள்விக்கப்பட்டது