பென் மெண்டல்சோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பென் மெண்டல்சோன்
Ben Mendelsohn by Gage Skidmore.jpg
பிறப்புபவுல் பெஞ்சமின் மெண்டெல்சோன்
3 ஏப்ரல் 1969 (1969-04-03) (அகவை 52)
மெல்பேர்ண், விக்டோரியா, ஆத்திரேலியா
தேசியம்ஆத்திரேலியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
எம்மா பாரஸ்ட்
(தி. 2012; ம.மு. 2016)
பிள்ளைகள்2

பென் மெண்டல்சோன் (ஆங்கில மொழி: Ben Mendelsohn) (பிறப்பு: 3 ஏப்ரல் 1969) என்பவர் ஆத்திரேலிய நாட்டு திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்ட நடிகர் ஆவார்.

இவர் 1987 ஆம் ஆண்டு ஆத்திரேலியா நாட்டு 'தி இயர் மை வாய்ஸ் புரோக்' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[1] அதை தொடர்ந்து அனிமல் கிங்கிடோம் (2010),[2] த டார்க் நைட் ரைசஸ் (2012), இஸ்ட்ரீட் அப் (2013), மிசிசிப்பி கிரின்ட் (2015), டார்க் அவர்ஸ் (2017) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் மார்வெல் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019)[3] போன்ற பல திரைப்படங்க்ளில் நடித்துள்ளார்.

இவர் நெற்ஃபிளிக்சு அசல் தொடரான பிளட்லைன் (2015–2017) என்ற வலைத் தொடரில் நடித்தார்.[4][5][6] இதற்காக இவர் 2016 இல் நாடகத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான பிரைம் டைம் எம்மி விருதை வென்றுள்ளார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_மெண்டல்சோன்&oldid=3121823" இருந்து மீள்விக்கப்பட்டது