பென்விக் தீவின் கலங்கரை விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பென்விக் தீவின் கலங்கரை விளக்கு
FenwicklightApril08 (42) 2.jpg
Spring 2008
அமைவிடம்டெலவெயர்/மேரிலாந்து எல்லையில், டெலவெயர் பக்கம்
ஆள்கூற்று38°27′05″N 75°03′17″W / 38.4514°N 75.0548°W / 38.4514; -75.0548
கட்டப்பட்டது1858
ஒளியூட்டப்பட்டது1859
தானியக்கம்1940
முடக்கம்1978-1982
அடித்தளம்இயற்கை
கட்டுமானம்செங்கல்
கோபுர வடிவம்கூம்பு வடிவம்
உயரம்84 அடி
ஆரம்ப வில்லைமூன்றாம் அடுக்கு பிரெனெல் வில்லை
தற்போதைய வில்லைமூன்றாம் அடுக்கு பிரெனெல் வில்லை
வீச்சு15 மைல்கள்
சிறப்பியல்புகள்3 செக். ஒரு முறை வெள்ளை ஒளி

பென்விக் தீவு கலங்கரை விளக்கம் (Fenwick Island Light) அமெரிக்காவின் டெலவெயர் மாநிலத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கு.

வரலாறு[தொகு]

1856ஆம் ஆண்டு, அமெரிக்க நாடாளுமன்றம் 25,000 அமெரிக்க டாலர்களை பென்விக் தீவின் கலங்கரை விளக்கை கட்டுவதற்கு ஒதுக்கியது. சனவரி 11, 1858ல் இந்த கலங்கரை விளக்கை கட்டுவதற்கு பத்து ஏக்கர் நிலத்தை மேரி சி. ஹால் என்பவர் வெறும் 50 டாலர்களுக்கு அரசிடம் விற்றார். டிசம்பர் 29, 1858 இல் இக்கலங்கரைவிளக்கு கட்டி முடிக்கபட்டது; ஆனால் ஆகத்து 1, 1859 இல் தான் விளக்கு ஏற்றப்பட்டது. இது 87 அடி உயரம் கொண்டது. 940 ஆம் ஆண்டு தானியங்கி கலங்கரை விளக்கமாக மாற்றப்பட்டது.

1978 ஆம் ஆண்டு இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. பின் 1982 ஆம் ஆண்டு, மக்களின் கோரிக்கைகளாலும் ஆர்ப்பட்டங்களாலும் மீண்டும் செயல்படத் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டு மக்களின் உதவியால் கலங்கரை விளக்கு முழுமையாக செப்பனிடப்பட்டது. சூலை 1998 ஆம் மாதம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

டெலவெயர் மாநில அரசுக்கு இந்த கலங்கரை விளக்கு சொந்தமாகும், மக்களின் உதவியாலும் சில நிறுவனங்களின் உதவியாலும் இக்கலங்கரை விளக்கு இன்றும் எரிந்துகொண்டிருக்கிறது. மக்கள் இக்கலங்கரை விளக்கின் மேலே ஏற அனுமதி இல்லை.

குறிப்புதவிகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]