உள்ளடக்கத்துக்குச் செல்

பென்னிங்டன் பொது நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்னிங்டன் பொது நூலகம்

பென்னிங்டன் பொது நூலகம் (Pennington Public Library) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் அறக்கட்டளை உறுப்பினர்கள் நடத்தும் பொது நூலகம் ஆகும்.

நூலகத்தின் வரலாறு

[தொகு]

1875-இல் அன்றைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம்- திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த பென்னிங்டனால் தொடங்கப்பட்டது. அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது. இந்நூலகத்தில் பழைமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. [1]

துறை வாரியாக பிரிவுகள்

[தொகு]

இங்குத் தரைத் தளத்தில் வார இதழ்கள்-நாளிதழ்கள் வாசிக்கும் பிரிவு, துறை வாரியாகப் பிரிக்கப்பட்ட தமிழ் நூல்கள் வாசிக்கும் பிரிவு, மற்றும் முதல்தளத்தில் துறை வாரியாகப் பிரிக்கப்பட்ட ஆங்கிலம் நூல்கள் வாசிக்கும் பிரிவு, மாணவர்களுக்கான போட்டித்தேர்வுக்கான நூல்கள் பிரிவு மற்றும் குறிப்பு நகல் எடுக்கும் பகுதி ஆகியன உள்ளன.

நிருவாகம்

[தொகு]

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல சிறப்பு அங்கத்தினர்கள் குழு அறக்கட்டளையால் நூலகம் நிருவகிக்கப்படுகிறது. நூலகத்தின் நிருவாகச் செலவுகளுக்காக வணிக வளாகம் ஒன்று பிற்காலத்தில் கட்டப்பட்டது. 150 கடைகளுக்கு மேல் கொண்ட இந்த வணிகவளாகம் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தின் எதிரே அமைந்துள்ளது.[2]

துணை அமைப்புகள்

[தொகு]
2013-இல் தொடங்கப்பட்ட பென்னிங்டன் தொடங்கப்பள்ளி
நூற்றாண்டு பழைமை வாய்ந்த பென்னிங்டன் காய்கனி வர்த்தக மையம்

பென்னிங்டன் தொடக்கப்பள்ளி நடுவண் கல்வி (C B S E) , மற்றும் பென்னிங்டன் வர்த்தக வளாகம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பென்னிங்டன் நூலகத்தின் வரலாறு
  2. "'வாடகையக் கூட்டு... கடையக் காலி பண்ணு..!' - ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்துக்கு வந்த சோதனை". Hindu Tamil Thisai. Retrieved 2025-05-13.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னிங்டன்_பொது_நூலகம்&oldid=4271508" இலிருந்து மீள்விக்கப்பட்டது