பென்சைல் குளோரோபார்மேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பென்சைல் குளோரோபார்மேட்டு
Skeletal formula of benzyl chloroformate
Ball-and-stick model of the benzyl chloroformate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
பென்சைல்கார்பனைல் குளோரைடு
பென்சைல் குளோரோபார்மேட்டு
வேறு பெயர்கள்
Z-குளோரைடு
இனங்காட்டிகள்
501-53-1 Yes check.svgY
ChemSpider 9958 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10387
பண்புகள்
C8H7ClO2
வாய்ப்பாட்டு எடை 170.59 g·mol−1
அடர்த்தி 1.195 கி/செ.மீ3
கொதிநிலை 103 °C (217 °F; 376 K) (20 Torr)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு அரிக்கும் Cசுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது Nஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R34, R50/53
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை 80 °C (176 °F; 353 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பென்சைல் குளோரோபார்மேட்டு (Benzyl chloroformate) என்பது C8H7ClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குளோரோபார்மிக் அமிலத்தினுடைய பென்சைல் எசுத்தர், பென்சைல் குளோரோபார்மேட்டு ஆகும். இக்கரிமச் சேர்மம் பென்சைல் குளோரோ கார்பனேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. எண்ணெய்ப்பசையுடன் மஞ்சள் நிறத்திலும் ,நிறமற்றதுமான திரவமாக காணப்படுகிறது. இச்சேர்மம் இதனுடைய காரநெடியாலும் அடையாளப் படுத்தப்படுகிறது. சூடுபடுத்தும்போது பென்சைல் குளோரோபார்மேட்டு சிதைவடைந்து பாசுசீனாக மாறுகிறது. மற்றும் இது தண்ணீருடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் நச்சுத்தன்மையும் அரிக்கும் பண்பும் கொண்ட புகையை உருவாக்குகிறது.

தயாரிப்பு[தொகு]

ஆய்வகங்களில் பென்சைல் ஆல்ககாலை திரவநிலை பாசுசீனில் -20 °செல்சியசு வெப்பநிலையில் செலுத்தும்போது பென்சைல் குளோரோபார்மேட்டு உருவாகிறது. பாசுசீனை அதிக அளவில் செலுத்துவதன் மூலம் இரு எசுத்தர்கள் உருவாக்கம் குறைக்கப்படுகிறது.[1]

பயன்கள்[தொகு]

அமீன்களில் கார்பாக்சிபென்சைல் பாதுகாப்புக் குழுவை அறிமுகப்படுத்தும் வினைகளில் பென்சைல் குளோரோபார்மேட்டு பயன்படுத்தப்படுகிறது.

Cbz.PNG

புதியதாக உருவான கார்பாக்சிபென்சைல் பாதுகாப்புக் குழுவை ஆக்சிசன் ஒடுக்க நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீக்க முடியும். குறிப்பாக ஐதரசன் வாயு மற்றும் கார்பன் மீது செயலூக்கம் செய்யப்பட்ட பலேடியம் தனிமம் இவ்வொடுக்க வினையில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Carbonate derivatives of methyl α-D-mannopyranoside and of D-mannose L. Hough and J. E. Priddle J. Chem. Soc., 1961, 3178-3181 DOI: 10.1039/JR9610003178

புற இணைப்புகள்[தொகு]