பென்சீன்சல்போனிக் அமிலம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சீன்சல்போனிக் அமிலம்[3] | |||
| வேறு பெயர்கள்
பென்சீன்சல்போனிக் அமிலம்; பென்சீன் சல்போனிக் அமிலம்; பீனைல்சல்போனிக் அமிலம்; பெசிலிக் அமிலம்[2]
| |||
| இனங்காட்டிகள் | |||
| 98-11-3 | |||
| ChEBI | CHEBI:64455 | ||
| ChEMBL | ChEMBL1422641 | ||
| ChemSpider | 7093 | ||
| EC number | 202-638-7 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 7371 | ||
| வே.ந.வி.ப எண் | DB4200000 | ||
| |||
| UNII | 685928Z18A | ||
| UN number | 2583, 2585, 1803 | ||
| பண்புகள் | |||
| C6H6O3S | |||
| வாய்ப்பாட்டு எடை | 158.17 g·mol−1 | ||
| தோற்றம் | நிறமற்ற படிகத் திண்மம் | ||
| அடர்த்தி | 1.32 கி/செ.மீ3 (47 °செல்சியசு) | ||
| உருகுநிலை |
| ||
| கொதிநிலை | 190 °C (374 °F; 463 K) | ||
| கரையும் | |||
| பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | ஆல்ககாலில் கரையும், முனைவற்ற கரைப்பான்களில் கரையாது | ||
| காடித்தன்மை எண் (pKa) | −2.8[4] | ||
| தீங்குகள் | |||
| முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் | ||
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
| GHS pictograms | |||
| GHS signal word | அபாயம் | ||
| H290, H302, H314, H315, H319, H335 | |||
| P234, P260, P261, P264, P270, P271, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |||
| தீப்பற்றும் வெப்பநிலை | > 113 °C | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பென்சீன்சல்போனிக் அமிலம் (Benzenesulfonic acid) என்பது C6H6O3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய இணை காரம் பென்சீன்சல்போனேட்டு என்பதாகும். இது ஓர் எளிமையான அரோமாட்டிக் சல்போனிக் அமிலமாகும். நீர் மற்றும் எத்தனாலில் கரையும். பென்சீனில் சிறிதளவு கரையும். டை எத்தில் ஈதர் போன்ற முனைவற்ற கரைப்பான்களில் கரையாது. வெண்மையான மெழுகுப் படிகங்கள் அல்லது வெண்மையான ஈரமுறிஞ்சும் தகட்டுப் படிகங்களாக உருவாகிறது. பெரும்பாலும் கார உலோக உப்புகளின் வடிவத்தில் சேமிக்கப்படுகிறது. இதன் நீரிய கரைசல் அதிக அமிலத்தன்மை கொண்டது.
தயாரிப்பு
[தொகு]செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி பென்சீனை சல்போனேற்றம் செய்து பென்சீன்சல்போனிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது:
இந்த மாற்றம் அரோமாட்டிக் சல்போனேற்றத்தை விளக்குகிறது, இவ்வினை தொழில்துறை கரிம வேதியியலில் மிக முக்கியமான வினைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.[5]
வினைகள்
[தொகு]பென்சீன்சல்போனிக் அமிலம் மற்ற அரோமாட்டிக் சல்போனிக் அமிலங்களின் பொதுவான வினைகளை வெளிப்படுத்துகிறது. அவற்றைப் போலவே சல்போனமைடுகள், சல்போனைல் குளோரைடுகள் மற்றும் எசுத்தர்களாக உருவாகிறது. 220 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சல்போனேற்றம் தலைகீழாக மாறுகிறது. பாசுபரசு பெண்டாக்சைடுடன் ஈடுபடும் நீரிழப்பு வினையில் பென்சீன்சல்போனிக் அமில நீரிலி ((C6H5SO2)2O) உருவாகிறது. தொடர்புடைய பென்சீன்சல்போனைல் குளோரைடுக்கு (C6H5SO2Cl) பாசுபரசு பெண்டாகுளோரைடுடன் சேர்த்து வினை நிகழ்த்தப்படுகிறது.
பென்சீன்சல்போனிக் அமிலம் ஒரு வலுவான அமிலமாகும், இது தண்ணீரில் கிட்டத்தட்ட முழுமையாக பிரிகையடைகிறது.
பென்சீன்சல்போனிக் அமிலமும் தொடர்புடைய சேர்மங்களும் 200 °செல்சியசு வெப்பநிலைக்கு அருகில் தண்ணீரில் சூடாக்கப்படும் போது நீராற்பகுத்தலுக்கு உட்படுகின்றன. சல்போன்நீக்க வினையின் வெப்பநிலையானது சல்போனேற்றத்துடன் இடைத் தொடர்பு கொண்டுள்ளது.:[5]
- C6H5SO3H + H2O → C6H5OH + H2SO4
இந்த காரணத்திற்காக, சல்போனிக் அமிலங்கள் பொதுவாக பாதுகாக்கும் குழுவாக அல்லது அணுக்கருநாட்ட பதிலீட்டு வினையில் மெட்டா இயக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பென்சீன்சல்போனிக் அமிலத்தின் கார உலோக உப்பு ஒரு காலத்தில் பீனாலின் தொழில்துறை உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டது. சில சமயங்களில் கார இணைவு என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை ஆரம்பத்தில் பீனாக்சைடு உப்பை வழங்கியது:
- C6H5SO3Na + 2 NaOH → C6H5ONa + Na2SO3
- C6H5ONa + HCl → C6H5OH + NaCl
இச்செயல்முறை ஓக்கு செயல்முறையால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது. ஏனெனில் ஓக்கு செயல்முறையில் குறைவான கழிவுப் பொருட்கள் வெளியேறுகின்றன.
பயன்கள்
[தொகு]சோடியம் பென்சீன்சல்போனேட்டு மற்றும் மோனோ எத்தனாலமீன் பென்சீன்சல்போனேட்டு போன்ற பென்சீன்சல்போனிக் அமிலத்தின் உப்புகள் சலவை சோப்புகளில் அழுக்குநீக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.[6]
பலவகையான மருந்துகள் பென்சீன்சல்போனேட்டு உப்புகளாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை பெசிலேட்டுகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Benzenesulfonic acid [தொடர்பிழந்த இணைப்பு], Sigma-Aldrich
- ↑ Besylic acid பரணிடப்பட்டது 2020-07-28 at the வந்தவழி இயந்திரம், ChemIndustry
- ↑ Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 789. doi:10.1039/9781849733069-FP001. ISBN 978-0-85404-182-4.
- ↑ Guthrie, J. P. Hydrolysis of esters of oxy acids: pKa values for strong acids Can. J. Chem. 1978, 56, 2342-2354. எஆசு:10.1139/v78-385
- ↑ 5.0 5.1 Otto Lindner; Lars Rodefeld (2005), "Benzenesulfonic Acids and Their Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a03_507
- ↑ "Safety Data Sheet - P & G's Tide Simply" (PDF). pg.com. 2014-02-05. Retrieved 2018-04-13.

