பென்சிடின் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சிடினின் அமைப்பு

பென்சிடின் சோதனை (benzidine test) ஒரு பொருளில் இரத்தம் இருக்கிறதா எனக் கண்டறியப் பயன்படும் சோதனை ஆகும். பென்சிடின், அசிட்டிக் அமிலம், ஐதரசன் பெராக்சைடு ஆகியவை சோதிக்கப்படும் பொருளுடன் சேர்க்கப்படும். ஹீமோகுளோபின் வினையூக்கியாகச் செயல்பட்டு ஐதரசன் பெராக்சைடு பென்சிடினை ஆக்சிஜனேற்றமடையச் செய்யும். இதனால் நீல நிறம் உண்டாகும். இது மலம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றில் கண்ணுக்குத் தெரியாமல் இரத்தம் இருக்கிறதாவெனக் கண்டறியப் பயன்படும் சிறந்த சோதனை ஆகும். பென்சிடின் புற்று நோயை உண்டாக்கக் கூடியது என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் இச் சோதனை கைவிடப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சிடின்_சோதனை&oldid=636069" இலிருந்து மீள்விக்கப்பட்டது