பெனோ செபைன்
தோற்றம்
பெனோ செபைன் அழகிரி | |
|---|---|
| இந்தியத் தூதரகம், ஜகார்த்தா | |
| முதல் செயலாளர் (வர்த்தகம் & அரசியல்) | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் சூலை, 2025 | |
| இந்திய நாட்டுப் பேராளர் உயர் ஆணையர் அலுவலகம், கோலாலம்பூர் | |
| முதல் செயலாளர் (தகவல்/அரசியல்/கொள்கை திட்டமிடல்) | |
| பதவியில் சூலை 2022 - சூலை 2025 | |
| இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் | |
| துணைச் செயலாளர் (கொள்கை திட்டமிடல் & ஆய்வு பிரிவு) | |
| பதவியில் சூன் 2019 - சூலை 2022 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 ஏப்ரல் 1990 சென்னை |
| கல்வி | லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி ( பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான பள்ளி), இசுடெல்லா மேரிக் கல்லூரி (2008-2011),இலயோலாக் கல்லூரி, சென்னை (2011-2013) |
| பணி | தூதர் |
| விருதுகள் | இந்தியாவின் முதல் 100 சதவீத பார்வைத்திறன் குறைபாடு கொண்ட வெளிநாட்டு சேவை அதிகாரியாக ஆனதற்காக, 2018 சனவரியில் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து வழங்கப்பட்ட "முதல் பெண் விருது". |
பெனோ செபைன் அழகிரி (Beno Zephine Azhagiri பிறப்பு 17 ஏப்ரல் 1990) ஓர் இந்தியத் தூதர் ஆவார். 2014 முதல் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.[1] இந்திய வெளியுறவுப் பணியில் பணியாற்றும் 100% பார்வைத் திறனற்ற முதல் அதிகாரி ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி
[தொகு]பெனோ செபைன் அழகிரி 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் இந்திய ரயில்வே ஊழியர் லூக் அந்தோனி சார்லஸ், திருமதி மேரி பத்மஜாவுக்கு மகளாகப் பிறந்தார்.[2] சென்னையில் உள்ள லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இசுடெல்லா மேரிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இலயோலாக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Beno Zephine becomes first 100% blind officer in IFS - Times of India". 15 June 2015. http://timesofindia.indiatimes.com/india/Beno-Zephine-becomes-first-100-blind-officer-in-IFS/articleshow/47669161.cms.
- ↑ Kapoor, Sapan. "Blind, Bold And IFS: The Incredible Story of Beno Zaphine". News World India. Archived from the original on 2017-12-23. Retrieved 2016-05-10.
- ↑ "Blindness no hurdle for NL Beno Zephine who gets IFS posting". Deccan Chronicle. Retrieved 2016-05-10.