பெனிலோப் சேத்வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெனிலோப் வாலண்டைன் ஹெஸ்டர் சேத்வுட், லேடி பெட்ஜெமன் (Penelope Valentine Hester Chetwode, Lady Betjeman) (14 பிப்ரவரி 1910 - 11 ஏப்ரல் 1986) ஒரு ஆங்கிலேய பயண எழுத்தாளராவார். [1] [2] இவர் படைத்துறை உயர் தளபதி சேத்வுட்டின் ஒரே மகளும் பரிசு பெற்ற கவிஞர் சர் ஜான் பெட்ஜெமனின் மனைவியுமாவார். இவர் அல்டர்சாட்டில் பிறந்து வட இந்தியாவில் வளர்ந்தார். தனது பிற்கால வாழ்க்கையில் இப்பகுதிக்குத் திரும்பினார்.

தொழில்[தொகு]

1961 கோடையில் தெற்கு எசுப்பானியாவிலிருந்து குதிரையின் மீது பயணம் செய்து எழுதிய, டூ மிடில் ஏஜ்டு லேடீஸ் இன் அண்டலூசியா (1963) என்ற புத்தகத்துக்காக மிகவும் பிரபலமானவர். புத்தகம் பரவலாகப் பாராட்டப்பட்டது. தி இன்டிபென்டன்ட் என்ற பத்திரிக்கை "சாகச மற்றும் நகைச்சுவையின் உன்னதமான படைப்பு" என்று அழைத்தது. அதே நேரத்தில் தி கார்டியன் பத்திரிக்கையில் கேட் கெல்லவே என்பவர் இதை "ஒரு அழகான, துணிச்சலான கதை" என்று எழுதினார். 2012 இல், எலாண்ட் புக்ஸ் நிறுவனம் மூலம் இப்புத்தகம் மறு பதிப்பை கண்டது.[3] சிம்லாவிலிருந்து ரோதங் கணவாய்க்கு சென்ற தனது மலையேற்றம் பற்றிய விவரத்தினை குலு: தி என்ட் ஆப் தி ஹேபிடபிள் வேர்ல்டு (1972) என்ற பெயரில் எழ்ழுதினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இமாச்சலப் பிரதேசம் சரகான் அருகில் இருக்கும் பெனிலோப் சேத்வுட்டின் நினைவுச்சின்னம்.

1933-இல் லண்டனில் ஜான் பெட்ஜெமன் என்பவரை மணந்தார். பால் என்ற மகனும் கேண்டிடா என்ற மகளும் இருந்தனர். இறுதியில் திருமணம் முறிந்தது. 1948-இல் கத்தோலிகராக மாறினார். 1972-இல், இந்த இணை பிரிந்தது. வாழ்க்கையின் பிற்பகுதியில் இவர் தனது குதிரையுடன் ஹே-ஆன்-வை என்ற இலக்கிய நகரத்திற்கு மேலே உள்ள குசோப் மலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கினார். இமயமலை வழியாக ஒரு மலையேற்ற சுற்றுலாப் பயணிகளின் குழுவை வழிநடத்தினார். இவர் 1986-இல் இந்தியாவின் முட்டிசரில் இறந்தார். [4]

சான்றுகள்[தொகு]

  1. "Penelope née Chetwode, Lady Betjeman". National Portrait Gallery.
  2. (in en) Genealogical and Heraldic Dictionary of the Peerage and Baronetage of the British Empire. Burke's Peerage Limited. 1914. பக். 420. https://books.google.com/books?id=RVggAAAAYAAJ&pg=PA420. பார்த்த நாள்: 4 June 2017. 
  3. "Two Middle-Aged Ladies in Andalusia". Eland Books.
  4. "Penelope Betjeman". The Spectator. 18 April 1986. http://archive.spectator.co.uk/article/19th-april-1986/19/penelope-betjeman. பார்த்த நாள்: 28 April 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனிலோப்_சேத்வுட்&oldid=3507187" இலிருந்து மீள்விக்கப்பட்டது