பெனடிக்ட் ஜான் பிரான்சிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெனடிக்ட் ஜான் பிரான்சிஸ் (பிறப்பு 3 மே 1972) விருதுகளை பெற்ற மேடை நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வின்செஸ்டர் நகரைச் சேர்ந்தவர்.[1][2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

பெனடிக்ட் ஜான் பிரான்சிஸ் 1972 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் இலண்டனில் உள்ள இஸ்ல்வொர்த் என்ற நகரத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் சேலி மற்றும் ஜெமி பிரான்சிஸ் ஆவர். ஜானின் எட்டாவது வயதில் இவரின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஜானின் தாய் ஆலன் பால் லீவி என்பவரை திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகருக்கு குடியேறினார். ஜானின் தந்தை நியூசிலாந்து நாட்டிற்கு சென்று அங்கு ஒரு வானூர்தி நிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை பணியாற்றி வந்தார். ஜான் பிரான்ஸ் பல பள்ளிகளில் படித்தார். இதில் பாரிஸ் ஆங்கில பள்ளியும் அடங்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://m.imdb.com/name/nm2633080/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-30. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-20. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.