பெத்ரா பிராங்கா

ஆள்கூறுகள்: 01°19′49″N 104°24′21″E / 1.33028°N 104.40583°E / 1.33028; 104.40583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெத்ரா ப்ரான்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெத்ரா பிராங்கா
Pedra Branca
Pulau Batu Puteh
பெத்ரா பிராங்கா தீவு; அர்சுபர்க் கலங்கரை விளக்கம்
பெத்ரா பிராங்கா தீவு; அர்சுபர்க் கலங்கரை விளக்கம்
பெத்ரா பிராங்கா தீவு; அர்சுபர்க் கலங்கரை விளக்கம்
Map
பெத்ரா பிராங்கா அமைவிடம்
புவியியல்
அமைவிடம்கிழக்குப் பிராந்தியம்,  சிங்கப்பூர்
சிங்கப்பூர் நீரிணை;
தென் சீனக் கடல்
தென் கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்01°19′49″N 104°24′21″E / 1.33028°N 104.40583°E / 1.33028; 104.40583
நிர்வாகம்

பெத்ரா பிராங்கா அல்லது வெண்பாறைத் தீவு (மலாய்: Pulau Batu Puteh; ஆங்கிலம்:Pedra Branca; போர்த்துகீசியம்: pɛðɾɐ ˈβɾɐ̃kɐ) என்பது சிங்கப்பூர் நாட்டின் கிழக்கே, தென் சீனக்கடலில் அமைந்துள்ள ஒரு சிறு பாறைத் தீவாகும். இந்தத் தீவின் பெயர் பாறையில் படிந்திருக்கும் பறவைகளின் வெண்மையான எச்சத்தைக் குறிக்கிறது. சுமார் 8,560 சதுர மீட்டர் (92,100 சதுர அடி) பரப்பளவைக் கொண்ட இந்தப் பாறைகள்; 137 மீட்டர் (449 அடி) நீளம்; மற்றும் 60 மீட்டர் (200 அடி) அகலம் கொண்டது.

இந்தப் பாறைத் தீவு மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே பெத்ரா பிராங்கா சர்ச்சை எனும் சர்ச்சைக்குக்கு உட்பட்ட தீவு ஆகும். 2008-ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றத்தால் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டது. மிடல் ரோக் தீவு மலேசியாவுக்கும், பெத்ரா பிராங்கா தீவு சிங்கப்பூருக்கும் சொந்தமானவை என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[1] இருப்பினும் சவுத் லெட்ஜ் பாறை விளிம்பு பிரச்சினை இதுவரையிலும் தீர்க்கப்படாமல் உள்ளது.[2][3][4]

பொது[தொகு]

இந்தத் தீவு, பல ஆண்டுகளாக மீனவர்களுக்கும்; கடல் வணிகர்களுக்கும் தெரிந்துள்ள தீவு என அறியப்படுகிறது. பாறைகளின் மேல் படிந்துள்ள வெள்ளை நிறப் பறவை எச்சத்தின் காரணமாக, போர்த்திகீசிய மொழியில் வெண் பாறை என்று பொருள் தரும் பெத்ரா பிராங்கா என்று அழைக்கப் பட்டது. மலாய் மொழியிலும் அதே பொருள் தரும் வகையில் பத்து பூத்தே (Batu Puteh) அல்லது புலாவ் பத்து பூத்தே (Pulau Batu Puteh) என்று அழைக்கப் படுகிறது.[5][6] [7]

உரிமை பிரச்சினை[தொகு]

சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் பிரச்சினைக்குரிய இடமாக இந்த தீவு இருந்து வந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஒன்றாக இருந்த இந்த இருநாடுகளும்; இதைப் பற்றி கண்டுகொள்ளாத நிலையில் இருந்தன. சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர், இந்தத் தீவு பிரச்சனைக்குரிய இடமாக மாறியது.

1979 டிசம்பர் 21-இல், மலேசியா வெளியிட்ட வரைபடத்தில், இந்தத் தீவை அதன் இடமாக காட்டியது. [8]அன்று தொடங்கி 29 ஆண்டுகள் இந்த பிரச்சினை தொடர்ந்தது. பல முறை பேச்சு வார்த்தை நடத்தி அதில் தோல்வி அடைந்த பின்னர், 1993-ஆம் ஆண்டு இந்த விவகாரம் அனைத்துலக நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பின்னர், பல விதமான சான்றுகளை ஆராய்ந்த பின்னர், 2008 மே 23-இல், இந்தப் பாறைத் தீவு சிங்கப்பூருக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆர்சுபர்க் கலங்கரை விளக்கம்[தொகு]

இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின், மாலுமியான ஜேம்சு ஆர்சுபர்க், என்பவரின் நினைவாக 1836-ஆம் ஆண்டு இங்கு ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.

தற்போதைய நிலை[தொகு]

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பிற்கு பின்னர், இந்த தீவை சுற்றி உள்ள கடல் எல்லைகளை குறிக்க இரு நாடுகளும் இணைந்து 3 சூன் 2008 அன்று ஒரு குழுவை நியமித்தன. இந்தக் குழு கடல் மட்டத்தில் இருந்து இந்த நிலப்பரப்பை ஆய்வு மேற்கொண்டு அதை பற்றிய அறிக்கையை அளித்தது. பின்னர் இந்த தீவு பற்றி விவகாரங்கள் ஒரு முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

25 ஜூன் 2019 அன்று, மலேசிய அரசாங்கம், இந்தப் பாறைத் தீவு குறித்த அதன் இறையாண்மையை மீட்டுக் கொண்டது.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Coalter G. Lathrop (2008). "Sovereignty over Pedra Branca/Pulau Batu Puteh, Middle Rocks and South Ledge". The American Journal of International Law 102 (4): 828–834. doi:10.2307/20456682. https://scholarship.law.duke.edu/faculty_scholarship/1910. 
  2. "Court leaves sovereignty over South Ledge open". New Straits Times. AsiaOne. 24 May 2008. பார்க்கப்பட்ட நாள் 21 May 2014.
  3. "Malaysia inaugurates new maritime base on Middle Rocks, near Pedra Branca". Today Online. The Malay Mail. 5 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
  4. "Malaysia deploys first warship to maritime base near Pedra Branca". Today Online. 11 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
  5. For the history, historical cartography, and toponymy of Pedra Branca, cf. Ong, Brenda Man Qing, and Francesco Perono Cacciafoco. (2022). Pedra Branca off Singapore: A Historical Cartographic Analysis of a Post-Colonial Territorially Disputed Island. Histories, 2, 1: 47-67, Paper பரணிடப்பட்டது 16 மே 2022 at the வந்தவழி இயந்திரம், DOI: https://doi.org/10.3390/histories2010005.
  6. Julian Davison (சூலை 2008), "Between a rock and a hard place" (PDF), The Expat, p. 86, archived from the original (PDF) on 1 October 2008.
  7. May Wong (6 November 2007), Background on Pedra Branca, Channel NewsAsia, archived from the original on 7 November 2007, பார்க்கப்பட்ட நாள் 8 November 2007.
  8. "Development Works at Pedra Branca to Enhance Maritime Safety and Security". www.mnd.gov.sg. Archived from the original on 12 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
  9. "Latest developments | Application for revision of the Judgment of 23 May 2008 in the case concerning Sovereignty over Pedra Branca/Pulau Batu Puteh, Middle Rocks and South Ledge (Malaysia/Singapore) (Malaysia v. Singapore) | International Court of Justice". www.icj-cij.org. Archived from the original on 27 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.
  10. "Latest developments | Request for Interpretation of the Judgment of 23 May 2008 in the case concerning Sovereignty over Pedra Branca/Pulau Batu Puteh, Middle Rocks and South Ledge (Malaysia/Singapore) (Malaysia v. Singapore) | International Court of Justice". www.icj-cij.org. Archived from the original on 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Horsburgh light, Lighthouse Depot, பார்க்கப்பட்ட நாள் 31 August 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்ரா_பிராங்கா&oldid=3910934" இலிருந்து மீள்விக்கப்பட்டது