பெத்தனா கலம்காரி
பெதனா கலம்காரி | |
---|---|
ஆந்திர பிரதேச வரைபடத்தை சித்தரிக்கும் கலம்காரி கைக்குட்டை | |
குறிப்பு | ஒரு துணியில் சாயமிடப்பட்ட ஓவியம் என்பது கலம்காரி வேலையின் தனித்துவமான பெத்தனா பாணியாகும் |
வகை | கைத்தொழில் |
இடம் | பெத்தனா, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
நாடு | இந்தியா |
பொருள் |
பெத்தனா கலம்காரி (Pedana Kalamkari) கலம்காரி கலை மச்சிலிப்பட்டினம் பாணியிலான கலம்காரி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் காய்கறி சாயம் பூசப்பட்ட துணியில் வரையப்படுகிறது.[1] இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மச்சிலிப்பட்டினத்தின் அருகிலுள்ள நகரமான பெத்தனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.[2] 1999 ஆம் ஆண்டின் புவியியல் சார்ந்த குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மூலம் கைத்தொழில் பொருட்களின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து புவியியல் குறியீடாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. [3]
வரலாறு
[தொகு]இந்த கலை பாணி முகலாய வம்சத்தின் ஆட்சியின் போது உருவானது. மேலும், கோல்கொண்டா சுல்தானகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆந்திரபிரதேசத்தில் கடற்கரை ஆந்திரா மற்றும் கோல்கொண்டா பகுதிகளில் பணிபுரியும் கலம்காரி கலைஞர்களை ஆதரித்த முகலாயர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரில் இந்த துணிகளுக்குப் பெயரிட விரும்பினர். இவர்கள் இந்த வகை துணிகளுக்குச் சூட்டிய பெயர் கலம்கார் (Qua-lamkars) என்பதாகும்.[4]
இந்த ஒவியங்கள் பெரும்பாலும் காளஹஸ்தி பகுதியில் உள்ள கோயில்களின் திரைச்சீலைகள், சுவரில் மாட்டும் ஓவியங்கள், தேரில் கட்டும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவற்றில் காண இயலும். போச்சம்பள்ளி துணி வகைகளிலும் காண முடியும்.[5] 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவர் தொங்கல், இலண்டனில் உள்ள விக்டோரியா அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[6]
கலம்காரி பாணி
[தொகு]கலம்காரியின் மச்சிலிப்பட்டினம் பாணியானது இந்தியாவில் இருக்கும் கலம்காரி படைப்புகளின் இரண்டு பாணிகளில் ஒன்றாகும். மற்றொன்று திருகாளகத்தி பாணியாகும். [7] இது முக்கியமாக காய்கறி சாயங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அவை மரத் தொகுதிகளின் உதவியுடன் துணி மீது பயன்படுத்தப்படுகின்றன.[2] புவியியல் சார்ந்த குறியீட்டின் அங்கீகரிக்கப்பட்ட எண் - AU/396/GI/19/12 இன் படி, மச்சிலிப்பட்டினம் கலம்காரியின் உற்பத்தி புவியியல் ரீதியாக பெதனா நகரம் மற்றும் அதன் அண்டை கிராமங்களான மச்சிலிப்பட்டினம், போலவரம், கிருஷ்ணா மாவட்டத்தின் கூடூர் மண்டலத்தில் உள்ள கபாலதொட்டி ஆகியவற்றில் மட்டுமே உள்ளது. ஆந்திரபிரதேசத்தில் பல குடும்பங்கள் இக்கலையைத் தொழிலாகவும் வருவாயீட்டும் வழியாகவும் ஆக்கிக்கொண்டனர்.
கலம்காரி செய்முறை நுட்பம், உத்திகள்
[தொகு]முரடான பருத்திக் காடாத் துணியானது குங்கிலியம் (பிசின்) மற்றும் பசும்பாலில் ஒரு மணி நேரம் மூழ்கியிருக்கும்படி வைக்கப்படுகிறது. இதனால் துணிக்குப் பளபளப்பும், வழவழப்பும் கிடைக்கின்றன. பின்பு நொதிக்க வைக்கப்பட்ட வெல்லம் மற்றும் நீர் கலந்த கலவையில் கூரான மூங்கில் குச்சி நனைக்கப்பட்டு துணியில் வடிவ விளிம்பு வரைவு கோடுகளாலான (contour) ஓவியம் வரையப்படுகிறது. பின்பு அக்கோட்டிலேயே தாவரச் சாயம் பயன்படுத்தி ஓவியம் வரையப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வண்ணமாகத் தனித்தனியே வரையப்படுகிறது. இறுதியாகக் கலம்காரி துணி நீரில் அலசப்படுகிறது. ஒரு துணி மீண்டும் மீண்டும் குறைந்தது 20 முறைகளாவது இவ்வாறு அலசப்பட வேண்டியிருக்கும். வேண்டிய நுணுக்கங்களைப் (effects) பெற பசுஞ்சாணம், விதைகள், செடிகள், நசுக்கிய மலர்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது
குங்கிலியத்துக்குப் பதிலாக கடுக்காயைப் பயன்படுத்தலாம். ஆனால் கடுக்காயிலுள்ள அதிக அளவு பதத்துவர் (tannin) காரணமாக கடுக்காயுடன் பசும்பாலுக்குப் பதில் எருமைப்பால் கலந்த கலவையில் காடாத்துணி ஊறவைக்கப்படுகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Kalamkari back in demand" இம் மூலத்தில் இருந்து 2011-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110810013653/http://www.hindu.com/2010/10/25/stories/2010102550860200.htm.
- ↑ 2.0 2.1 "Pedana Kalamkari made of natural colours gets GI tag". http://www.deccanherald.com/content/368021/pedana-kalamkari-made-natural-colours.html. பார்த்த நாள்: 26 January 2016.
- ↑ "Registration Details of Geographical Indications" (PDF). Intellectual Property India, Government of India. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
- ↑ Bhatnagar, Parul. "Kalamkari". Traditional Indian Costumes and Textiles. suraj. பார்க்கப்பட்ட நாள் 2004.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பேசும் பொற்சித்திரங்கள்". தி இந்து (தமிழ்). 2016 -சூன் 4. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Kalamkari Art Hanging dates back to 15th Century AD in Victoria Museum, London". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
- ↑ "Kalamkari: Craft of the matter". mid-day. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.