பெண் விடுதலை அமைப்பு
பெண் விடுதலை அமைப்பு (Stree Mukti Sanghatana-இசுத்ரீ முக்தி சங்காதனம்) என்பது 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் அரசு சாரா அமைப்பாகும். இது பெண்களின் அதிகாரமளித்தல், முக்கியமாகப் பெண்கள் பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி, சுகாதாரம் மற்றும் பாலினச் சமத்துவம் மூலம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் போன்ற செயல்களில் கவனம் செலுத்துகிறது. எந்தவொரு அரசியல் கட்சியுடனும் அல்லது அரசியல் குழுவுடனும் இணைக்கப்படாத ஒரு தன்னாட்சி, பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும் இது.
இது தாதர், செம்பூர், பரேல் மற்றும் மும்பையில் கோவண்டி, நவி மும்பை மற்றும் தானேயில் வாசி மற்றும் கோபர்கைரானே ஆகிய இடங்களில் மையங்களைக் கொண்டுள்ளது. புனே, புல்தானா மற்றும் உஸ்மானாபாத் போன்ற பிற நகரங்களிலும் மையங்கள் உள்ளன.
வரலாறு
[தொகு]
இசுத்ரீ முக்தி சங்கதனாம் 1975இல் ஜோதி மகாப்சேகர்,[1] சாரதா சாத்தே மற்றும் பிறரால் நிறுவப்பட்டது.
பணி
[தொகு]இதன் வலைத்தளத்தில் பின்வரும் பணிகளை பட்டியலிடுகிறது.
- பாலின நியாயமான உலகத்தை உருவாக்க
- பெரிய அளவிலான பிரச்சாரங்கள் மூலம் பாலின சமத்துவத்தை அடைவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குதல்
- வறுமை மற்றும் வன்முறையை ஒழிக்க உழைக்க வேண்டும்
- குறிப்பாக சட்டம் மற்றும் சட்ட அமலாக்கத் துறையில் பெண்களுக்கு மாற்றத்திற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக பணியாற்றுதல்
அங்கீகாரம்
[தொகு]1999ஆம் ஆண்டில், இசுத்ரீ முக்தி சங்காதனம் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையினால் அங்கீகாரம் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Women of Worth: About the Nominee - Jyoti Mhapsekar". Women Of Worth (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-02-10. Retrieved 2020-07-09.