உள்ளடக்கத்துக்குச் செல்

பெண் புவியியலாளர்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண் புவியியலாளர்கள் சங்கம் (Association for Women Geoscientists - AWG) என்பது ஒரு சர்வதேச தொழில்முறை அமைப்பாகும். இது தன் உறுப்பினர்களின் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சிறுமிகளுக்குப் புவி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வுப் பணிகளை வழங்குகிறது. மேலும் புவி அறிவியலில் சிறுமிகள் மற்றும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. இச்சங்கத்தின் குறிக்கோள்களை ஆதரிக்கும் எவரும் இதில் உறுப்பினராகச் சேரலாம். தொழில் துறை, அரசாங்கம், அருங்காட்சியகங்கள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த தொழில்முறைப் பெண்கள் மற்றும் ஆண்கள், பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இச்சங்கத்தின் குறிக்கோள்களை ஆதரிப்பதில் ஆர்வமுள்ள பிறர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

வரலாறு

[தொகு]

பெண் புவியியலாளர்கள் சங்கம் 1977-ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் ஆரம்பகால நோக்கம், அந்த காலகட்டத்தில் பெண்கள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே பங்கேற்ற புவி அறிவியல் துறையை ஒரு தொழில் தேர்வாகத் தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இத்துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும், 2006-ஆம் ஆண்டின் நிலவரப்படி, இச்சங்கத்தின் நோக்கம் மாறாமல் அப்படியே உள்ளது. தற்போதைய நிலையில் இதன் உறுப்பினர் எண்ணிக்கை 1200 மாணவர்கள் மற்றும் அறிவியலாளரை உள்ளடக்கியது. இது புவி அறிவியலில் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது. இச்சங்கம் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள உள்ளூர் கிளைகள் மற்றும் பொது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பரஸ்பர நல அமைப்பாகும். இச்சங்கம் அமெரிக்க புவியியல் நிறுவனம் மற்றும் அமெரிக்க புவியியல் சங்கம் ஆகியவற்றின் உறுப்பு அமைப்பாகும்.

குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்

[தொகு]
  • கிளாடியா அலெக்சாண்டர்[1]
  • கெய்ல் ஆஷ்லே
  • டெனிஸ் காக்சு[2]
  • பிரான்சிசுகா ஓபோ இகுயேனோப்
  • சரோன் மோசர்[3]
  • சாரா கே. நோபல்
  • சியான் பிராக்டர்

செயல்பாடுகள்

[தொகு]

இச்சங்கம் தனது இலக்குகளை அடைவதற்காக பல திட்டங்களை வழங்கி நிதியுதவி செய்கிறது:

  • பெண் புவியியலாளர்கள் சங்கத்தின் புகழ்பெற்ற விரிவுரையாளர் திட்டம் என்பது பெண் புவியியலாளர்களின் பேச்சாளர்கள் குழுவாகும், இவர்கள் புவி அறிவியல் சார்ந்த தலைப்புகளில் இச்சங்கத்தின் நிதி உதவியுடன் உரை நிகழ்த்துகின்றனர்.
  • கல்வி உதவித்தொகை
  • சிறந்த கல்வியாளர் விருது
  • 'கேயா' இருமாத செய்திமடல்
  • புவியியல் களப்பயணங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Lewin, Sarah (2015-07-21). "Claudia Alexander, Beloved NASA Project Scientist, Dies at 56". Space.com (in ஆங்கிலம்). Retrieved 2021-09-23.
  2. ↑ "AAPG Names Denise Cox as President-Elect". American Geosciences Institute (in ஆங்கிலம்). 2017-05-30. Retrieved 2021-09-23.
  3. ↑ Moody, Judith B. (September 1991). "Association for Women Geoscientists Foundation Outstanding Educator Award" (in en). Journal of Geological Education 39 (4): 333–335. doi:10.5408/0022-1368-39.4.333. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1368. http://nagt-jge.org/doi/10.5408/0022-1368-39.4.333.

வெளி இணைப்புகள்

[தொகு]