உள்ளடக்கத்துக்குச் செல்

பெண் திரவ வெளியேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோல் சுரப்பி பெண் விந்துதள்ளலுக்கு ஆதாரமாக இருப்பதற்கான கணிசமானs சான்றுகள் உள்ளன.

பெண் விந்துத்தள்ளல் (Female ejaculation) அல்லது பெண் விந்து வெளியேற்றம் என்பது ஒரு புணர்ச்சியின் போது அல்லது அதற்கு முன் சிறுநீர் கீழ் முனையில் உள்ள தோல் சுரப்பியில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதாக வகைப்படுத்தப்படுகிறது. இது பேச்சுவழக்கில் நீர்பீச்சு அல்லது பீறிடுதல் என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும் பெண் விந்துத்தள்ளல் மற்றும் நீர்பீச்சு ஆகியவை வெவ்வேறு நிகழ்வுகள் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. நீர்பீச்சு என்பது சிறுநீரில் இருந்து ஓரளவு வந்து சிறுநீரில் இருக்கும் திரவத்தை திடீரென்று வெளியேற்றுவதாகக் கூறப்படுகிறது.[1][2][3]

பெண் விந்துத்தள்ளல் என்பது உடலுறவின்போது ஏற்படும் உடலுறவுச் சிறுநீர்க் கட்டுப்பாடின்மை நிலையிலிருந்து உடலியல் ரீதியாக வேறுபட்ட ஒரு நிகழ்வாகும். இருப்பினும், இவ்விரு நிகழ்வுகளும் சில நேரங்களில் ஒன்றுடன் ஒன்று குழப்பப்படுகின்றன.[4][5]

பெண் விந்துத்தள்ளல் குறித்து சில ஆய்வுகள் மட்டுமே நடந்துள்ளன .[6] அறிவியல் சமூகத்தால் பொதுவான வரையறைகள் மற்றும் ஆராய்ச்சி முறை பின்பற்றத் தவறியதே இந்த சோதனைத் தரவு இல்லாததற்கு முதன்மையான காரணமகும்.[7] மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், குறுகிய வழக்கு ஆய்வுகள் அல்லது மிகச் சிறிய மாதிரி அளவுகளால் ஆராய்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக இன்னும் குறிப்பிடத்தக்க முடிவுகள் கிடைக்கப்பபெறவில்லை. திரவத்தின் கலவை குறித்த பெரும்பாலான ஆராய்ச்சிகள் அது சிறுநீரா அல்லது அதில் சிறுநீர் கலந்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதில் கவனம் செலுத்துகின்றன. .[6][8] பாலியல் செயல்பாட்டின்போது யோனியிலிருந்தோ அல்லது சிறுநீர்க்குழாயிலிருந்தோ வெளியேறும் எந்தவொரு சுரப்புத் திரவமும் பொதுவாக "பெண் விந்துத்தள்ளல்" எனக் குறிப்பிடப்படுவதால், அறிவியல் இலக்கியங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.[8]

அறிக்கைகள்

[தொகு]

வினாத்தாள் அடிப்படையிலான ஆய்வுகளில், 35% முதல் 50% வரையிலான பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தின் போது திரவம் பீறிட்டு வெளியேறிய அனுபவம் தங்களுக்கு இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.[9][10][11] பிற ஆய்வுகள், பயன்படுத்தப்பட்ட வரையறைகள் மற்றும் ஆய்வு முறைகளைப் பொறுத்து, இந்த விகிதம் 10% முதல் 69% வரை இருப்பதாகக் கூறுகின்றன.[12][13]

உதாரணமாக, 1994 ஆம் ஆண்டில் கிரடோச்வில் 200 பெண்களிடம் நடத்திய ஆய்வில், 6% பெண்கள் தாங்கள் பெண் விந்து வெளியேற்றத்தை அனுபவித்ததாகக் கூறினர். மேலும் 13% பெண்கள் அதுபோன்ற சில அனுபவங்கள் இருந்ததாகத் தெரிவித்தனர். அதேவேளை, 60% பெண்கள் குறிப்பிடத்தக்க பீறிடல் இல்லாமல் திரவம் வெளியேறியதாகக் கூறினர்.[14] வெளியேற்றப்படும் திரவத்தின் அளவு குறித்த அறிக்கைகளும் கணிசமாக மாறுபடுகின்றன. சில நேரங்களில் பெண்களால் உணர முடியாத அளவிலிருந்து, சராசரியாக 1 முதல் 5 மில்லிலிட்டர் வரையிலான அளவு திரவம் வெளியேறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Differential diagnostics of female "sexual" fluids: a narrative review". International Urogynecology Journal 29 (5): 621–629. May 2018. doi:10.1007/s00192-017-3527-9. பப்மெட்:29285596. https://link.springer.com/article/10.1007/s00192-017-3527-9.
  2. Salama, Samuel; Boitrelle, Florence; Gauquelin, Amélie; Malagrida, Lydia; Thiounn, Nicolas; Desvaux, Pierre (2015). "Nature and origin of "squirting" in female sexuality". The Journal of Sexual Medicine 12 (3): 661–666. doi:10.1111/jsm.12799. பன்னாட்டுத் தர தொடர் எண்:1743-6095. பப்மெட்:25545022. https://scholar.google.de/scholar?hl=de&as_sdt=0%2C5&q=Nature+and+origin+of+%22squirting%22+in+female+sexuality&btnG=.
  3. Rodriguez, Felix D.; Camacho, Amarilis; Bordes, Stephen J.; Gardner, Brady; Levin, Roy J.; Tubbs, R. Shane (2021). "Female ejaculation: An update on anatomy, history, and controversies". Clinical Anatomy 34 (1): 103–107. doi:10.1002/ca.23654. பப்மெட்:32681804.
  4. Pastor, Zlatko (July 2013). "Female ejaculation orgasm vs. coital incontinence: a systematic review". The Journal of Sexual Medicine 10 (7): 1682–1691. doi:10.1111/jsm.12166. பன்னாட்டுத் தர தொடர் எண்:1743-6109. பப்மெட்:23634659. https://scholar.google.de/scholar?hl=de&as_sdt=0%2C5&q=Female+ejaculation+orgasm+vs.+coital+incontinence%3A+a+systematic+review&btnG=.
  5. "Female urinary incontinence during intercourse: a review on an understudied problem for women's sexuality". J Sex Med 6 (1): 40–8. 2009. doi:10.1111/j.1743-6109.2008.01055.x. பப்மெட்:19170835.
  6. 1 2 Estupinyà, Pere (2016). S=EX2: The Science of Sex. Springer. pp. 87–89. ISBN 978-3319317267.
  7. J. Taverner, William (2005). Taking Sides: Clashing Views on Controversial Issues in Human Sexuality. McGraw-Hill Education. pp. 80–89. ISBN 978-0072917116.
  8. 1 2 "Female ejaculation: An update on anatomy, history, and controversies.". Clinical Anatomy 34 (1): 103–107. 2020. doi:10.1002/ca.23654. பப்மெட்:32681804. https://onlinelibrary.wiley.com/doi/full/10.1002/ca.23654.
  9. "Subjective reports of female orgasmic expulsion of fluid". Nurse Pract 9 (3): 55–9. March 1984. doi:10.1097/00006205-198409030-00009. பப்மெட்:6546788.
  10. "The role of the Grafenberg Spot and female gushing in the female orgasmic response: an empirical analysis". J Sex Marital Ther 15 (2): 102–20. Summer 1989. doi:10.1080/00926238908403815. பப்மெட்:2769772. https://archive.org/details/sim_journal-of-sex-and-marital-therapy_summer-1989_15_2/page/102.
  11. Darling CA; Davidson JK Sr; Conway-Welch C. (February 1990). "Female ejaculation: perceived origins, the Grafenberg spot/area, and sexual responsiveness". Arch Sex Behav 19 (1): 29–47. doi:10.1007/BF01541824. பப்மெட்:2327894. https://archive.org/details/sim_archives-of-sexual-behavior_1990-02_19_1/page/29.
  12. "The female prostate revisited: perineal ultrasound and biochemical studies of female ejaculate". J Sex Med 4 (5): 1388–93; discussion 1393. September 2007. doi:10.1111/j.1743-6109.2007.00542.x. பப்மெட்:17634056.
  13. "Zaviacic M. The human female prostate: From Vestigial Skene's Paraurethral Glands and Ducts to Woman's Functional Prostate. Slovak Academic Press, Bratislava 1999". Doctorg.com. Archived from the original on 2011-10-28. Retrieved 2011-10-30.
  14. Kratochvíl Stanislav (April 1994). "Orgasmic expulsions in women". Českoslovenaká Psychiatrie 90 (2): 71–7. பப்மெட்:8004685.
  15. "Circatrigintan (30 +/- 5 d) variations of the cellular component of female urethral expulsion fluid. A biometrical study". Int Urol Nephrol 16 (4): 311–8. 1984. doi:10.1007/BF02081866. பப்மெட்:6543558.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_திரவ_வெளியேற்றம்&oldid=4608121" இலிருந்து மீள்விக்கப்பட்டது