பெண்ணுடலில் உணவுப் பரிமாறல்
பெண்ணுடலில் உணவுப் பரிமாறல் என்பது ஒரு பெண்ணின் ஆடையற்ற உடலை உணவுத் தட்டாகப் பயன்படுத்தி, அதன் மேல் சஷிமி அல்லது சுஷி போன்ற சப்பானிய உணவுகளை வைத்துப் பரிமாறும் ஒரு சப்பானியப் பழக்கமாகும். [1] இது நியோடைமோரி அல்லது உடல் சுஷி எனவும் அழைக்கப்படுகிறது. உதாரணமாக, 2005-ஆம் ஆண்டில், பொது சுகாதாரம் மற்றும் தார்மீகக் காரணங்களுக்காக நிர்வாண உடல்கள் மீது உணவைப் பரிமாறும் முறையைச் செயல்படுத்த சீனாவில் தடை விதிக்கப்பட்டது. [2]
இதனையே ஆண் உடலில் உணவை பரிமாறச் செய்யும் வடிவமானது நான்டைமோரி என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதாகவே நடைமுறையில் உள்ளது.
வரலாறு
[தொகு]பெண்ணுடலில் உணவுப் பரிமாறலின் தோற்றம் எடோ காலத்தில் உள்ள பாலியல் விடுதிகளில் விளையாட்டாகச் செய்யப்பட்ட ஒரு பழக்கத்திலிருந்து தொடங்குகிறது. அங்குள்ள ஒரு பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் மதுவை ஊற்றி அதனைக் குடிக்கும் பழக்கம் அப்போது நடைமுறையில் இருந்தது.
1960களில் சப்பானின் பொருளாதார வளர்ச்சி தீவிரமடைந்தபோது, இஷிகாவா மாகாணத்தில் உள்ள வெந்நீர் ஊற்று குளியல் விடுதித் தொழில்துறையினரால் இந்த நடைமுறை மேலும் மேம்படுத்தப்பட்டது. இந்த விடுதிகளுக்கு நிறுவனப் பயணங்களாக வரும் ஆண் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு விளம்பர உத்தியாக இதன் பாலியல் கவர்ச்சித் தன்மை பயன்படுத்தப்பட்டது.
1980களில் வெந்நீர் ஊற்று இடங்களுக்கு குடும்பத்துடனும் தனிப்பட்ட முறையிலும் பயணம் செய்வது பிரபலமடைந்ததால், இந்த நியோடைமோரி பழக்கம் படிப்படியாகக் குறைந்தது. அதன் பின்னர், இது உணவு வழங்குநர்கள் மற்றும் பாலியல் நிறுவனங்களால் ஒரு கவர்ச்சியான அம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. [3][4]
செயல்முறைகள்
[தொகு]பாரம்பரிய நியோடைமோரி முறையில், மாடலானப் பெண் எப்போதும் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்றும், உணவு முழுமையாக எடுக்கப்பட்ட பிறகும் நிகழ்ச்சி முடியும் வரை விருந்தினர்களுடன் பேசக்கூடாது என்றும் பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. மீன் இறைச்சி மாதிரியின் தோலில் நேரடியாகப் படுவதைத் தடுக்க, உடல் மீது தூய்மைப்படுத்தப்பட்ட இலைகள் வைக்கப்பட்டு, அதன் மேல் சுஷி வைக்கப்படுகிறது. மேலும், சுஷி உருண்டு கீழே விழாமல் இருக்க உடலின் தட்டையான பகுதிகள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
சப்பானிய பாணியில் பாரம்பரிய காலணிகள் மற்றும் தலைக்கவசம் தவிர மாடலின் உடல் முற்றிலும் ஆடையின்றி இருக்கும். மேற்கத்திய பாணியில் சில நேரங்களில் பிறப்புறுப்பை மறைக்கும் சிறிய ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் சுஷி மாதிரியின் தோலில் படுவதைத் தடுக்க சில நேரங்களில் பிளாஸ்டிக் உறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. உணவருந்துபவர்கள் கண்டிப்பாகக் குச்சிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறுகின்றனர்.[5] [6]
21ஆம் நூற்றாண்டில் வரவேற்பு
[தொகு]நவீன சப்பானில், பெண்ணுடலில் உணவுப் பரிமாறல் முறை ஒரு சமூகக் களங்கமாகக் கருதப்படுகிறது மற்றும் பொதுவாகப் பாலியல் விடுதிகளில் மட்டுமே இது காணப்படுகிறது. சப்பானுக்கு வெளியே, இது பிரிட்டனில் உள்ள தற்காலிக உணவக நிகழ்வுகளிலும், வட அமெரிக்காவில் உள்ள சில குறிப்பிட்ட உணவகங்கள் மற்றும் உணவு வழங்குநர்களிடமும் தோன்றியுள்ளது. இதன் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட உதாரணம் 2003 ஆம் ஆண்டில் சியாட்டிலில் உள்ள ஒரு மதுவகத்தில் நடந்த நிகழ்வாகும். இந்த நடைமுறை பழமைவாதிகள், பெண்ணியவாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடுமையான சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் ஈர்த்துள்ளது. [7]
திரைப்படங்கள்
[தொகு]பிரபல கலாச்சாரத்தில், 1993-இல் வெளியான 'ரைசிங் சன்'[8] மற்றும் 2012-இல் வெளியான 'சுஷி கேர்ள்' ஆகிய திரைப்படங்களில் 'பெண்ணுடலில் உணவுப் பரிமாறல்' இடம்பெற்றிருந்தது.
படக்காட்சியகம்
[தொகு]- பர்னிங் ஃபிளிப்சைட் நிகழ்வில் 'நியோடைமோரி' கலைக்காக ஒரு பெண் மாடலாகப் பங்கேற்ற காட்சி
- பர்னிங் ஃபிளிப்சைட் நிகழ்வில் நிகழ்வில் (அமெரிக்கா, 2007), 'ஜி-ஸ்ட்ரிங்' ஆடை அணிந்திருந்த மாதிரியின் உடலிலிருந்தே விருந்தினர் ஒருவர் நேரடியாக 'சுஷி' உணவை உண்ணும் மேற்கத்திய பாணி 'நியோடைமோரி' காட்சி
ஆதாரம்
[தொகு]- ↑ Vipers, Gareth (1 June 2010). "The world's weirdest dining experiences". The Independent. p. 4. Archived from the original on 11 September 2014.
- ↑ Roberts, Christine (5 August 2012). "Nipples covered in wasabi? Sure! Florida patrons willing to drop at least $500 can have sushi served on prone body of nude model". New York Daily News.
- ↑ "日本人が抱く、裸体への悲しき郷愁「女体盛り」の深すぎる歴史を探る!". R-18. 16 May 2015. https://www.cyzo.com/2013/06/post_13616.html.
- ↑ "【ニッポンの裏風俗】お手頃料金で遊べる温泉風俗". メンズサイゾー. 27 April 2012. https://www.menscyzo.com/2012/04/post_3941.html.
- ↑ Heiter, Celeste (2007). The Sushi Book. ThingsAsian Press. p. 123. ISBN 9781934159002.
- ↑ "Your Fantasy Of Eating Sushi Off A Naked Woman In Vancouver Is Now A Reality". SuperVancouver. Archived from the original on 1 September 2014.
- ↑ Roberts, Christine (5 August 2012). "Nipples covered in wasabi? Sure! Florida patrons willing to drop at least $500 can have sushi served on prone body of nude model". New York Daily News.
- ↑ Novotny, Monica (1 December 2003). "Naked sushi?" இம் மூலத்தில் இருந்து 1 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201201233352/https://www.nbcnews.com/id/wbna3541615.
