பெண்ணியம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெண்ணியம்
வெளியீட்டாளர் மதன்
இதழாசிரியர் லலிதா
வகை பெண்ணிய அரசியல் இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ் ஆகத்து, 2006.
நிறுவனம் பெண்ணியம்
நகரம் சென்னை
மாநிலம் தமிழ் நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி Vadakku Vaasal Publications
பெண்ணியம்
பாலாஜி டவர், முதல்மாடி
4 பாரதி தெரு, காவேரி நகர்
சைதாப்பேட்டை
சென்னை 600 015
வலைப்பக்கம்

பெண்ணியம் என்னும் பெண்ணிய அரசியல் இதழ் தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து தனிச் சுற்று இதழாக வெளிவந்தது. வீட்டுக் கதவின் படியைத் தாண்டி வருவதே கேடு – என்ற விதி உடைத்துப் படிக்க வேணும் புதியதோர் நாடு! என்னும் பாடலடிகளை தனது முத்திரைத் தொடராகக்கொண்டு வெளிவந்தது இந்த இதழ்.[1]

தொடக்கம்[தொகு]

பெண்ணியம் இதழானது 1970 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிஞர் ஏவியன் எழுதிய பெண்ணுரிமை என்னும் கதையின் உந்துதலால் 2006 ஆகத்துத் திங்கள் முதல் சென்னையில் வெளியிடப்பட்டது. .[2]

நோக்கம்[தொகு]

பெண்ணியம் இதழானது பின்வரும் நோக்கத்திற்காக வெளியிடப்படுகிறது:

“ஒடுக்கப்பட்டோருக்கென்றே படைக்கப்பட்ட மார்க்சியப் பெண்ணியம், பெரியாரியப் பெண்ணியம் என்னுமிரு கோட்பாடுகளிலும் உள்ள செழுமையான செயற்பாடுகளை முழுமையாகத் தன்வயப்படுத்தியும் தமிழ்ச் சமூகத்தில் அவ்வக்காலத்தில் முன்னெழுந்துவரும் பெண்விடுதலைச் சிந்தனைகளை ஆய்ந்தறிந்து உள்வாங்கியும் பெண்ணியத்தை வளர்ப்பதொன்றே பெண்ணினத்தின் விடுதலைத் துரிதப்படுத்தும் என்ற புரிதலையே பெண்ணியம் இதழ் தனது திசைவழியாகக் கொண்டுள்ளது.” [1]

ஆசிரியர் குழு[தொகு]

பெண்ணியம் இதழில் லலிதா என்பவர் ஆசிரியராகவும் இளையராஜா என்பவர் பொறுப்பாசிரியராகவும் நிர்மலா என்பவர் இணை ஆசிரியராகவும் பணியாற்றினர்.[3]

உள்ளடக்கம்[தொகு]

முதல் இதழ் (ஆகத்து 2006)[தொகு]

 • பெண்ணுரிமை (கவிதை) – கவிஞர் ஏவியன்
 • தலையங்கம்
 • உணர்ந்ததைச் சொல்கிறோம் – அல்லி
 • சிறகை விரிப்போம் (கவிதை) – நர்மதா
 • களம் புக வா! – மு. சு. கண்மணி
 • பெண்ணின் நிலை . . . நேற்று – இன்று – நாளை - ஓவியா
 • வானம் வசப்படும் – சக்தி அருளானந்தம்
 • இறை வழிபாட்டில் பால் பாகுபாடு – சாங்கியன்
 • தோள் சீலைக் கலகம் – ஏபி. வள்ளிநாயகம்
 • புதிய சிலை… புதிய கண்ணகி … புதுக்கோட்பாடு… - முழுமதி
 • கற்பு அரைப்பட்டிகை
 • ஈழத்தின் கவிதைப் போராளிகள் – புதிய மாதவி
 • குறுங்கவிதைகள் – தி. கமலி
 • அதுவரை (கவிதை) – திலகபாமா
 • தாவின்சி கோடு கற்பனையா? வரலாறா? (நூல் திறனாய்வு) – இளைய நிலா
 • ஞானமணி (சிறுகதை) – பாத்திமா
 • பெண்ணியம் போற்றுவம்! (கவிதை) – மருதநாடன்)
 • சுய சிந்தனை வளம்பெற …
 • நூல் – அகம்
 • விதி வகுப்போம்! – தணிகைச் செல்வன்

சான்றடைவு[தொகு]

 1. 1.0 1.1 பெண்ணியம், வெளியீடு-1 2006 ஆகஸ்ட், பக்.4
 2. பெண்ணியம், வெளியீடு-1 2006 ஆகஸ்ட், பக்.2
 3. பெண்ணியம், வெளியீடு-1 2006 ஆகஸ்ட், பக்.3
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணியம்_(இதழ்)&oldid=1748871" இருந்து மீள்விக்கப்பட்டது