பெண்டாமெத்தில் ஆர்சனிக்கு
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டாமெத்தில்-λ5-ஆர்சேன் | |||
| இனங்காட்டிகள் | |||
| 51043-92-6 | |||
Beilstein Reference
|
2408247 | ||
| ChEBI | CHEBI:35867 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 9548862 | ||
| |||
| பண்புகள் | |||
| As(CH3)5 | |||
| வாய்ப்பாட்டு எடை | 150.10 g·mol−1 | ||
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
| உருகுநிலை | −6 °C (21 °F; 267 K) | ||
| கொதிநிலை | >100 °C (212 °F; 373 K) | ||
| கட்டமைப்பு | |||
| மூலக்கூறு வடிவம் | |||
| இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D | ||
| தீங்குகள் | |||
| முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெடிக்கும், தீப்பற்றும் | ||
| GHS pictograms | |||
| GHS signal word | அபாயம் | ||
| H331, H301, H410 | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பெண்டாமெத்தில் ஆர்சனிக்கு (Pentamethylarsenic) என்பது As(CH3)5 என்ற மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்ட ஒரு கரிம உலோகச் சேர்மமாகும். பெண்டாமெத்திலார்சோரேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.[1] இதன் கட்டமைப்பில் ஓர் ஆர்சனிக்கு அணுவுடன் ஐந்து மெத்தில் குழுக்கள் பிணைக்கப்பட்டிருக்கும். மீவலுப்பிணைப்புச் சேர்மத்திற்கு இது ஓர் உதாரணமுமாகும். முக்கோண இருபட்டைக்கூம்பு வடிவத்தில் பெண்டாமெத்தில் ஆர்சனிக்கு சேர்மத்தில் மூலக்கூறுகள் காணப்படுகின்றன.[2]
வரலாறு
[தொகு]பெண்டாமெத்தில் ஆர்சனிக்கை முதன்முதலில் தயாரித்ததாகக் கூறப்பட்ட உரிமை, 1862 ஆம் ஆண்டில் ஏ. ககோர்சு என்பவரால் டெட்ராமெத்தில் ஆர்சோனியம் அயோடைடுடன் டைமெத்தில் துத்தநாகம் சேர்த்து வினைபுரியச் செய்ததன் மூலம் தயாரிக்கப்பட்டதாக ஒரு தயாரிப்பு முறை முன்வைக்கப்பட்டது.[3][4] பல ஆண்டுகளாக, மீண்டும் உருவாக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. எனவே அந்தத் தயாரிப்பு உண்மையானது அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது.[1][5] உண்மையில் 1973 ஆம் ஆண்டில் கார்ல்-எய்ன்சு மிட்ச்கே மற்றும் ஊபர்ட்டு சுமிட்பாவர் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.[6]
தயாரிப்பு
[தொகு]மும்மெத்திலார்சின் குளோரினேற்றம் செய்யப்பட்டு மும்மெத்திலார்சின் டைகுளோரைடாக மாற்றப்படுகிறது, பின்னர் இது மெத்தில் இலித்தியத்துடன் வினைபுரிந்து பெண்டாமெத்தில் ஆர்சனிக்கை உருவாக்குகிறது[6]
- As(CH3)3 + Cl2 → As(CH3)3Cl2
- As(CH3)3Cl2 + 2LiCH3 → As(CH3)5 + 2LiCl
As(CH3)4Cl மற்றும் As(CH3)3=CH2 ஆகியவை பக்க விளைபொருள்களாக உருவாகின்றன.
பெண்டாமெத்திலார்சனிக்கு சேர்மம் உயிரினங்களால் உற்பத்தி செய்யப்படுவதில்லை.[7]
பண்புகள்
[தொகு]பெண்டாமெத்தில் ஆர்சனிக்கு சேர்மம் பெண்டாமெத்தில்ஆண்டிமனி போன்றே அதே வாசனையைக் கொண்டிருந்தாலும், இது தனித்துவமானதாகும்.[1]
இந்த மூலக்கூறில் உள்ள பிணைப்பு நீளங்கள், As−C பிணைப்புகளுக்கு 1.975 Å ஆகவும், இரண்டு அச்சுவழி As−C பிணைப்புகளுக்கு 2.073 Å ஆகவும் உள்ளன.[8]
பெண்டாமெத்திலார்சனிக்கின் அகச்சிவப்பு நிறமாலை, அச்சுவழி C-As அதிர்வு காரணமாக 582 மற்றும் 358 செ.மீ−1 இல் வலுவான பட்டைகளையும், நிலநடுக்கோட்டுவழி C-As அதிர்வு காரணமாக 265 மற்றும் 297 செ.மீ−1 இல் பலவீனமான பட்டைகளையும் காட்டுகிறது.[9] இராமன் நிறமாலை 519, 388, மற்றும் 113 செ.மீ−1 இல் ஒரு வலுவான அம்சத்தையும், 570 மற்றும் 300 செ.மீ−1 இல் பலவீனமான கோடுகளையும் காட்டுகிறது.[9]
வினைகள்
[தொகு]பெண்டாமெத்தில் ஆர்சனிக்கு பலவீனமான அமிலங்களுடன் மெதுவாக வினைபுரிகிறது. நீருடன் வினைபுரியும்போது, டெட்ராமெத்தில் ஆர்சோனியம் ஐதராக்சைடு As(CH3)4OH மற்றும் மும்மெத்தில் ஆர்சனிக்கு ஆக்சைடு As(CH3)3O ஆகியவற்றை உருவாக்குகிறது. மெத்தனால் உடன் வினைபுரியும்போது, டெட்ராமெத்தில் மெத்தாக்சி ஆர்சோரேன் As(CH3)4OCH3 சேர்மத்தை உருவாகிறது. ஐதரசன் ஆலைடுகளுடன் வினைபுரிந்து, டெட்ராமெத்தில் ஆர்சோனியம் ஆலைடு உப்புகள் உருவாகின்றன.[1]
பெண்டாமெத்தில் ஆர்சனிக்கை 100° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது, இது சிதைவடைந்து மும்மெத்திலார்சின், மீத்தேன் மற்றும் எத்திலீன் ஆகியவற்றை உருவாக்குகிறது.[10]
பென்சீன் கரைசலில் மும்மெத்தில் இண்டியம் , பெண்டாமெத்தில் ஆர்சனிக்குடன் வினைபுரியும்போது, டெட்ராமெத்தில் ஆர்சனிக்கு(V)டெட்ராமெத்தில்இண்டேட்டு(III) என்ற உப்பு வீழ்படிவாகிறது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Hubert Schmidbaur (1976). Advances in Organometallic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. pp. 229–230. ISBN 9780080580159.
- ↑ Greene, Tim M.; Downs, Anthony J.; Pulham, Colin R.; Arne Haaland; Verne, Hans Peter; Volden, Hans Vidar; Timofeeva, Tatjana V. (November 1998). "Molecular Structures of Pentamethylarsenic(V) and Trimethyldichloroarsenic(V) by Gas Electron Diffraction and ab Initio Calculations:? Molecular Mechanics Calculations on Pentamethylarsenic(V), Pentaphenylarsenic(V), and Related Compounds". Organometallics 17 (24): 5287–5293. doi:10.1021/om980520r.
- ↑ Cahours, A. (1862). "Untersuchungen über die metallhaltigen organischen Radicale". Justus Liebigs Annalen der Chemie 122 (3): 329–347. doi:10.1002/jlac.18621220305. https://zenodo.org/record/1427181.
- ↑ Powell, P. (2013). Principles of Organometallic Chemistry (in ஆங்கிலம்). Springer. p. 135. ISBN 9789400911970.
- ↑ Wittig, G.; Torssell, K.; Vister, Thor (1953). "Über Pentamethyl-arsen und Pentamethyl-antimon". Acta Chemica Scandinavica 7: 1293–1301. doi:10.3891/acta.chem.scand.07-1293.
- ↑ 6.0 6.1 Mitschke, Karl-Heinz; Schmidbaur, Hubert (November 1973). "Pentamethylarsen" (in de). Chemische Berichte 106 (11): 3645–3651. doi:10.1002/cber.19731061124.
- ↑ Cornils, Boy; Herrmann, Wolfgang A. (2006). Aqueous-Phase Organometallic Catalysis: Concepts and Applications (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 331. ISBN 9783527605460.
- ↑ Greene, Tim M.; Downs, Anthony J.; Pulham, Colin R.; Haaland, Arne; Verne, Hans Peter; Volden, Hans Vidar; Timofeeva, Tatjana V. (November 1998). "Molecular Structures of Pentamethylarsenic(V) and Trimethyldichloroarsenic(V) by Gas Electron Diffraction and ab Initio Calculations: Molecular Mechanics Calculations on Pentamethylarsenic(V), Pentaphenylarsenic(V), and Related Compounds". Organometallics 17 (24): 5287–5293. doi:10.1021/om980520r.
- ↑ 9.0 9.1 Greenwood, N. N. (1974). Spectroscopic Properties of Inorganic and Organometallic Compounds (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 294. ISBN 9780851860633.
- ↑ Aylett, B. J. (2012). Organometallic Compounds: Volume One The Main Group Elements Part Two Groups IV and V (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 401. ISBN 9789400957299.
- ↑ "7.3.6.3". Science of Synthesis: Houben-Weyl Methods of Molecular Transformations Vol. 7: Compounds of Groups 13 and 2 (Al, Ga, In, Tl, Be...Ba) (in ஆங்கிலம்). Georg Thieme Verlag. 2014. p. 258. ISBN 9783131779618.

