உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்டாசயனோகோபால்ட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்டாசயனோகோபால்ட்டேட்டு
இனங்காட்டிகள்
14971-18-7
InChI
  • InChI=1S/5CN.Co/c5*1-2;/q5*-1;+2
    Key: YOZCCRZCYZQCAC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22141881
  • [N-]#C[Co+2](C#[N-])(C#[N-])(C#[N-])C#[N-]
பண்புகள்
C5CoN53−
வாய்ப்பாட்டு எடை 189.02 g·mol−1
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்டாசயனோகோபால்ட்டேட்டு (Pentacyanocobaltate) என்பது [Co(CN)5]3− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். நான்கிணைய அம்மோனியம் நேர்மின் அயனியுடன் படிகமாக்கப்படும்போது, ​​இதை ஒரு மஞ்சள் நிறத் திண்மமாகப் பெறலாம். ஐதரசனுடன் வினைபுரியும் ஓர் உலோக அணைவுச் சேர்மத்தின் ஆரம்பகால உதாரணமாக பெண்டாசயனோகோபால்ட்டேட்டு கவனத்தை ஈர்த்தது. இது ஓர் இரட்டை அடித்தள நிலையுடன், குறைந்த சுழற்சி கோபால்ட(II)-அயனியைக் கொண்டுள்ளது.

தயாரிப்பும் கட்டமைப்பும்

[தொகு]

கோபால்ட்(II) உப்புக் கரைசலில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சம அளவிலான சயனைடு உப்பைச் சேர்ப்பதன் மூலம் பெண்டாசயனோகோபால்ட்டேட்டு நீர்க்கரைசல்கள் உருவாக்கப்படுகின்றன. தொடக்கத்தில், இவ்வினை கரையாத கோபால்ட்டு டைசயனைடை உருவாக்குகிறது. எனினும், அதிகப்படியான சயனைடு முன்னிலையில் இத்திண்மம் கரைந்துவிடுகிறது. சில வினாடிகளுக்குள்ளாகவே பெண்டாசயனோகோபால்ட்டேட்டு உருவாகிவிடுகிறது. ஒரு நான்கிணைய அம்மோனியம் சயனைடைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்படும்போது, ​​3[Co(CN)5] என்ற மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்ட படிகங்களைப் பெற இயலும். எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகளின்படி, இவ்வுப்பு சதுரப் பிரமிடு வடிவ [Co(CN)5]3− அமைப்பைக் கொண்டுள்ளது.[1]

வினைகள்

[தொகு]

[Co(CN)5]3− சேர்மத்தின் கரைசல்கள் பல்வேறு வகையான வினைகளுக்கு உட்படுகின்றன. 1940-ஆம் ஆண்டுகளில், ஐதரசனுடனான தனது வினைத்திறன் காரணமாக இச்சேர்மம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவ்விநையின் மூலம் ஒரு கோபால்ட்டு ஐதரைடு உருவாகிறது என்பது தற்போது அறியப்பட்டுள்ளது:[2]

2[Co(CN)5]3− + H2 -> 2 [Co(CN)5H]2-

ஒரு நீர்த்த கரைசலாகச் சில நிமிடங்களுக்கு நிற்க அனுமதிக்கப்படும்போது, ​​இச்சேர்மம் நீருடன் வினைபுரிந்து இரண்டு Co(III) வழிப்பொருட்களைத் தருகிறது.

2[Co(CN)5]3− + H2O → [Co(CN)5H]3− + [Co(CN)5OH]3−

செறிவூட்டப்பட்ட கரைசலில், அணைவுச் சேர்மம் இருபடியாகிறது.

2[Co(CN)5]3− → [(NC)5Co−Co(CN)5]6−

இந்த அணைவுச் சேர்மங்கள், அநேகமாக ஒரு அல்லைல் இடைநிலை வழியாக, இணைந்த டையீன்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒடுக்கத்தை வினையூக்குகின்றன.[3]

பென்சைல் குளோரைடு மற்றும் தொடர்புடைய ஆல்கைலேற்றும் முகவர்களுடன், Co(III) அல்கைல்கள் உருவாகின்றன:[4]

2[Co(CN)5]3− + C6H5CH2Cl → [Co(CN)5CH2C6H5]3− + [Co(CN)5Cl]3−

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brown, Leo D.; Raymond, Kenneth N. (1975). "Structural Characterization of the Pentacyanocobaltate(II) Anion in the Salt Tris(diethyldiisopropylammonium) Pentacyanocobaltate(II)". Inorganic Chemistry 14 (11): 2590–2594. doi:10.1021/ic50153a002.
  2. Kwiatek, Jack (1968). "Reactions Catalyzed by Pentacyanocobaltate(II)". Catalysis Reviews 1: 37–72. doi:10.1080/01614946808064700.
  3. Birch Organic Reactions. DOI:10.1002/0471264180.or024.01. 
  4. Chock, Pwen Boon; Halpern, Jack (1969). "Reactions of Pentacyanocobaltate(II) with Some Organic Halides". Journal of the American Chemical Society 91 (3): 582–588. doi:10.1021/ja01031a010. Bibcode: 1969JAChS..91..582C.