பெண்கள் பருவம்
பெண்கள் பருவம் (ஸ்திரீ பருவம்) மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினோராவது பருவம். போர் முடிவுக்கு வந்த பின்னர் திருதராட்டினனும் காந்தாரி, குந்தி, திரௌபதி உள்ளிட்ட அரச குடும்பப் பெண்களும், பிற சத்திரிய குடும்பப் பெண்களும் துயருறும் நிகழ்வுகளை எடுத்துக்கூறுவது இப்பருவம்.[1]
முக்கிய நிகழ்வுகள்
[தொகு]போரில் தனது 100 புதல்வர்களும் இறந்துபட்டதைச் சொல்லக்கேட்ட திருதராட்டினன் மிகுந்த கோபமும் துயரமும் அடைகிறான். விதுரர், வியாசர் போன்றோர் அவனுக்கு ஆறுதல் சொல்கின்றனர். பாண்டவர்கள் திருதராட்டிரனைக் காண வருகின்றனர். வணங்கி நின்ற தருமனை விருப்பமின்றியே திருதராட்டிரன் தழுவிக்கொள்கிறான். அடுத்து வீமனைத் தேடுகிறான். தனது புதல்வர்கள் அனைவரையும் கொன்ற வீமன் மீது மிகுந்த கோபத்தில் இருந்த திருதராட்டிரன் வீமனைத் தழுவுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்ந்த கிருட்டிணன் வீமனைத் தள்ளிவிட்டு அவனுக்குப் பதிலாக வீமனது இரும்புச் சிலையை வைக்கிறான். இரும்புச் சிலையைத் இறுகத் தழுவிய திருதராட்டிரன் அதைத் துண்டு துண்டாக உடைத்து விடுகிறான். இதன் பின்னர் பாண்டவர்கள் காந்தாரியைச் சந்தித்தல், அவளது துயரம், கோபம், வியாசரின் அறிவுரைகள் என்பன இப்பருவத்தில் பேசப்படுகின்றன.
பின்னர் திருதராட்டிரனையும், அரச குடும்பத்துப் பெண்களையும் வியாசர் போர்களத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே இறந்து கிடக்கும் அரசர்களையும், இளவரசர்களையும், பிற வீரர்களையும் ஒவ்வொருவராகப் பார்த்துப் பெண்கள் துயருறும் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. தருமன் இறந்தவர்கள் அனைவருக்கும் இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
குறிப்புகள்
[தொகு]- ↑ அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 26
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- சௌப்திக பருவம் (முந்தியது)
- சாந்தி பருவம் (அடுத்தது)