பெண்கள் நலச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'பெண்கள் நலச் சங்கம் (Women's Welfare Association) அல்லது பெண்கள் சங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. 1975 முதல் (ஆப்கன்) மகளிர் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆப்கானித்தானில் செயல்படும் ஒரு மகளிர் அமைப்பாகும். இது 1946இல் நிறுவப்பட்டது.[1] இது தா மிர்மனெக் துலானே அல்லது தா மெர்மெனோ தோலானா என்றும் அழைக்கப்பட்டது. இது 1975இல் அரசாங்கத்திலிருந்து சுதந்திரமாக செயல்படுகிறது. 1953 முதல், இது மிர்மன் என்ற அதன் சொந்த பத்திரிக்கையை வெளியிட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

பின்னணி[தொகு]

மன்னர் அமனுல்லாகான், இராணி சொரயா தார்சி ஆகியோர் 1920களில் சீர்திருத்தத் திட்டத்தில் பெண்களின் உரிமைகளை ஊக்குவித்தனர். அத்துடன் முதல் பெண்கள் அமைப்பை ( அஞ்சுமன்-இ ஹிமாயத்-ஐ-நிஸ்வான் ) நிறுவினர். ஆனால் 1929இல் அவர்கள் நிலைமாற்றப்பட்ட பிறகு, அவர்களின் சீர்திருத்தங்கள் ரத்து செய்யப்பட்டன. எவ்வாறாயினும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஆப்கானித்தான் சமூகத்தை சீர்திருத்த வேண்டிய அவசியத்தை அரசாங்கம் கண்டது. பெண்கள் விடுதலையானது அந்தக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

பெண்கள் நலச் சங்கானது பெண்களின் உரிமைகளில் சீர்திருத்த காலத்தில் நிறுவப்பட்டது. பெண்கள் காபூல் பல்கலைக்கழகத்தில் 1950இல் படிக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த இடத்திலிருந்து, படித்த நடுத்தர வர்க்கமும், உயர் வகுப்பு பெண்களும் முக்கிய நகரங்களில் விமான நிறுவனக்கள் உட்பட வங்கிகள், நூலகங்கள் போன்ற அரசு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.[2] ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை அரசாங்கம் ஆதரிக்க வேண்டிய தேவை இருந்தது.

நிறுவுதல்[தொகு]

இந்த அமைப்பு முதலில் தா மிர்மனெக் துலானே அல்லது தா மெர்மெனோ தோலானா (மகளிர் சங்கம்) என்ற பெயரில் காபுல் நகரில் 1946இல் ஒரு ஆப்கானியரை மணந்த பிரெஞ்சு பெண்மணியான, மேடம் அசின் என்பவரால் துவங்கப்பட்டது. ஆனால் 1947 முதல் அதன் பெரும்பாலான திட்டங்களுக்கு நிதியளித்து வந்த நிதி அமைச்சகத்தால் கையகப்படுத்தப்பட்டது.[3] இது 1950 வரை கல்வி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டது.

அரச குடும்ப பெண்களான சைனாப் இனாயத் சிராஜ், பீபி ஜான் ஆகியோரை அதன் நிறுவன உறுப்பினர்களாகக் கொண்டும், பொதுமக்கள், அரசு அதிகாரிகளின் மனைவிகள், அரசு ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர் அதன் உறுப்பினர்களாகவும் சேர்க்கப்பட்டனர். இராணி உமைரா பேகம் அதன் முதல் கௌரவத் தலைவராகவும் அதிகாரப்பூர்வ புரவலராகவும் செயல்பட்டார்.[4] மன்னர் அமனுல்லா கானின் உறவினரான, சைனாப் இனாயத் சிராஜ் அல்லது சைனாப் எனயத் சராஜ் என்பவர் அதன் செயல் தலைவராக இருந்தார்.[5]

அதன் பல குறிப்பிடத்தக்க உறுப்பினர்களில் ஆப்கானிய செவிலியரும் பெண்கள் உரிமை ஆர்வலருமானயான நபீசா சாயெக் ஆகியோரும் அடங்குவர்.

பெண்கள் நலச் சங்கம்அரசாங்கத்தின் நவீனமயமாக்கல் செயல்முறையுடன் இணைந்து பெண்கள் சீர்திருத்தங்களுக்காக பணி செய்தது. மேலும் அடிப்படையில் பெண்களின் உரிமைகளுக்கான அரசாங்க உறுப்பாக செயல்பட்டது. இதன் இயக்குனரும், ஆபகன் அரசியல்வாதியும், பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்களில் ஒருவருமான குப்ரா நூர்சாய், 1964ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்பின் பணியில் பங்கேற்றார். இது பெண்களின் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது.

இந்த அமைப்பின் நோக்கம் சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக பணி செய்வதாகும். இவர்கள் பாலினப் பிரிவினையிலிருந்து பெண்களின் விடுதலையை வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் ஊக்கப்படுத்தினர். ஆனால் இவர்கள் முக்கியமாக பெண்களின் வேலை, எழுத்தறிவு, குடும்பக் கட்டுப்பாடு, தொழிற்கல்வி வகுப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் இதை செயல்படுத்தினர். இவர்கள் தொண்டு செயல்பாடுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்தனர். மேலும், பெண்களுக்கான பள்ளிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பெண்கள் கல்வி மற்றும் தொழில்முறை வேலையை கற்கவைப்பது, நாடு முழுவதும் உள்ள பெண்கள் நலச் சங்கத்தின் அலுவலகங்களில் வயது வந்த பெண்களுக்கு பல்வேறு பாடங்களில் வகுப்புகள் எடுப்பது உட்பட பல பணிகளை மேற்கொண்டனர். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Julie Billaud: Kabul Carnival: Gender Politics in Postwar Afghanistan
  2. Humanitarian Invasion: Global Development in Cold War Afghanistan
  3. Humanitarian Invasion: Global Development in Cold War Afghanistan
  4. Rahimi, Wali Mohammad: Status of women: Afghanistan, UNESCO Principal Regional Office for Asia and the Pacific (Thailand). Regional Unit for the Social and Human Sciences in Asia and the Pacific (1991) BKSS/91/277.1000
  5. Humanitarian Invasion: Global Development in Cold War Afghanistan
  6. Humanitarian Invasion: Global Development in Cold War Afghanistan

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்கள்_நலச்_சங்கம்&oldid=3275689" இலிருந்து மீள்விக்கப்பட்டது