பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனம் என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால், பல்வேறு கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பும், தன்னம்பிக்கையும் அளித்து உரிய மறுவாழ்வு அளிக்க வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் தொடங்கப்பட்ட மறுவாழ்வு அமைப்பாகும்.[1] வன்னியில் இயங்கிய இவ்வமைப்பானது வன்னியில் போர் அனர்த்தங்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களை மேம்படுத்தும் பொருட்டு வெற்றிமனை உளவளத்துணை நிலையம், பெண்கள் தொழிற் பயிற்சி நிலையம், உதயதாரகை தும்புத் தொழிற்சாலை, மலர்ச் சோலை உளவளத் துணை நிலையம் என்பனவற்றையும் முல்லைத்தீவில் 93 சிறுவர்களைக் கொண்டு செந்தளிர் சிறுவர் இல்லத்தினையும் நடாத்திவந்தது.

2003ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, கோண்டாவில்ப் பகுதியில் தனது கிளையினை. நிறுவியதோடு பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான புள்ளிவிபரங்களைச் சேகரித்து அதன் மூலம் உதவித்திட்டங்களை மேற்கொண்டனர்.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .32
  2. http://tronews.blogspot.in/2003/11/13.html