பெண்களுக்குச் சம ஊதியம்
Appearance
பெண்களுக்குச் சம ஊதியம் என்பது ஒரே வேலையைச் செய்யும் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான ஊதியத்தைப் பெற வேண்டும் என்பதாகும். பல நாடுகளில் இது ஒரு சட்டம் ஆகும். எனினும் பல வேலைத் தளங்களில் ஒரே வேலைக்கு பெண்கள் குறைவான ஊதியம் பெறுவது இன்றும் உள்ளது.
உலகில் உள்ள சில நாடுகளில் இந்த முறை எப்படி நடைமுறையில் உள்ளது என்பதை கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது :
- இந்திய நாட்டில் 1976ஆம் ஆண்டு சம உழைப்பூதியதிற்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
- ஆஸ்திரேலியா நாட்டில் 1979ஆம் ஆண்டு இரு பாலினதவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது .
- ஹங்கேரி நாட்டில் வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது அந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ளது .
- லாட்வியா,லித்துவானியா ,பல்கேய்ரியா நாடுகளில் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உழைப்பாளர் சட்ட நெறிமுறையில் உள்ளது