பெண்களுக்கான மரியாதை தேசிய பிரச்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்களுக்கான மரியாதை தேசிய பிரச்சாரம்
உருவாக்கம்நவம்பர் 2009
நிறுவனர்மானசி பிரதான்
வகைசமூக இயக்கம்
நோக்கம்பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவது
தலைமையகம்
மூலம்புது தில்லி, இந்தியா
சேவைப் பகுதி
நாடு முழுவதும்

பெண்களுக்கான மரியாதை தேசிய பிரச்சாரம் (Honour for Women National Campaign) என்பது பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடு தழுவிய இயக்கம் ஆகும். இந்த இயக்கம் 2009 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை ஆர்வலரான மானசி பிரதான் என்பவரால் நிறுவப்பட்டது [1] [2]

மானசி பிரதான், கீதா சந்திரன், சபனா ஆசுமி, கமலா பாசின் மற்றும் மீனாட்சி கோபிநாத் - 2017 இல்புது தில்லி நிர்பயா சமரோ விழாவில் பங்கேற்றவர்கள்.

ஓ.வொய்.எஸ்.எஸ். பெண்கள் என்ற அமைப்பின் கீழ் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 2012 டெல்லி கூட்டுப் பலாத்கார சம்பவத்திற்குப் பிறகு வலுப்பெற்றது. [3]

பணி[தொகு]

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதும், நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதியைப் பாதுகாப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். [4]

மூலோபாயம்[தொகு]

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட இந்த இயக்கம் பல முனை உத்திகளைப் பயன்படுத்துகிறது. பெண்கள் மீதான அட்டூழியங்களை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட மற்றும் நிறுவன விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல வழிகளில் செயல்படுகிறது. அதாவது பெண்கள் உரிமை குறித்த விழிப்புணர்வு மையங்கள், பெண்கள் உரிமை விழா, பெண்கள் உரிமைக் கூட்டங்கள், பெண்கள் உரிமை இலக்கியங்கள், ஒலி-ஒளி காட்சிகள், தெரு நாடகங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. [5] [6]

மறுபுறம், இது பொதுக் கருத்தைத் திரட்டுவதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த நிறுவன மாற்றங்கள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக நீடித்த பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. [7]

கோரிக்கை சாசனம்[தொகு]

இந்தியா முழுவதிலும் உள்ள பங்குதாரர்களை உள்ளடக்கிய தேசிய மற்றும் மாநில அளவிலான கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கிய நான்கு வருட நீண்ட முயற்சிக்குப் பிறகு, இந்த இயக்கம் 'பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல்' : 'ஒரு தேசிய சாலை வரைபடம்' என்ற வரைவைக் கொண்டு வந்தது.

இந்த வரைவை முழுமையாக ஆய்வு செய்த துணைக் குழுவின் பரிந்துரையின் பேரில், மாநில அரசுகளின் மட்டத்தில் விரைவில் செயல்படுத்தக்கூடிய நான்கு அம்ச கோரிக்கை சாசனத்தில் இந்த அமைப்பு கவனம் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. நான்கு அம்ச கோரிக்கை சாசனம் செயல்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டவுடன், இந்த சமூக இயக்கம் இன்னும் விரிவான நிர்வாக, நீதித்துறை மற்றும் காவல்துறை சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்கும். இதன் மூலமாக அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [8] [9]

நான்கு-புள்ளி சாசனம்[தொகு]

1. மது வியாபாரத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

2. கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

3. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு காவல் படை அமைக்க வேண்டும்.

4. ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவு நீதிமன்றம், சிறப்பு விசாரணை மற்றும் வழக்கு விசாரணை பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். [7]

நிர்பயா வாஹினி[தொகு]

இந்த இயக்கத்தின் நான்கு அம்ச கோரிக்கை சாசனத்தை செயல்படுத்த அந்தந்த மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க, நிர்பயா வாஹினி என்ற பெயரில் ஒரு குழு 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த பிரிவில் 10,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். [10]

சான்றுகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Latest News, India, Bengal News, Breaking News". Thestatesman.com. 2018-03-04. Archived from the original on 2016-10-09. பார்க்கப்பட்ட நாள் 2023-03-21.
  3. "Three-pronged Strategy to Curb Crime Against Women". Newindianexpress.com.
  4. "Odissi Festival to be held at Oxford University on May 27, Odisha Current News, Odisha Latest Headlines". Archived from the original on 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-06-07.
  5. "At Chilika meet, rural women vow to fight against violence". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-01.
  6. "NCW chief inaugurates Women's Rights Stall at Puri". Archived from the original on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-01.
  7. 7.0 7.1 "Three-pronged Strategy to Curb Crime Against Women". Newindianexpress.com."Three-pronged Strategy to Curb Crime Against Women". Newindianexpress.com.
  8. "Odisha Diary-Fuelling Odisha's Future|Latest Odisha news". Orissadiary.com. Archived from the original on 2016-08-18. பார்க்கப்பட்ட நாள் 2016-07-01.
  9. "Roadmap drawn for rural women empowerment". Archived from the original on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-01.
  10. "Nirbhaya Vahini to fight violence against women in Odisha". Archived from the original on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-01.