பெண்களுக்கான பன்னாட்டு சனநாயகக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்களுக்கான பன்னாட்டு சனநாயகக் கூட்டமைப்பு
சுருக்கம்WIDF
உருவாக்கம்டிசம்பர் 1945
நோக்கம்உலக மகளிர் அமைப்புகளின் சங்கம்
தலைமையகம்பாரிஸ்→கிழக்கு பெர்லின்
சேவை பகுதி
உலகம் முழுவதும்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரஞ்சு, எசுப்பானியம், ஜெர்மனி மற்றும் உருசிய மொழி
சார்புகள்
  • அமெரிக்க பெண்கள் காங்கிரசு
  • சீனப் பெண்கள் கூட்டமைப்பு
  • பெண்களுக்கான தேசியப் பேரவை, பிரித்தானியா
  • இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு
  • செருமனி சனநாயகப் பெண்கள் அணி
  • அல்சீரிய சாராவி பெண்கள் தேசிய ஒன்றியம்
  • பிரேசிலின் பெண்களுக்கான கூட்டமைப்பு
வலைத்தளம்www.fdim-widf.org

பெண்களுக்கான பன்னாட்டு சனநாயகக் கூட்டமைப்பு (Women's International Democratic Federation) என்பது பெண்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றுவதை குறிக்கோளாகக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். இது 1945 இல் நிறுவப்பட்டது. மேலும் பனிப்போரின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது. இது ஆரம்பத்தில் பாசிச எதிர்ப்பு, உலக அமைதி, குழந்தைகள் நலன் மற்றும் பெண்களின் நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. [1] பனிப்போர் காலத்தில், இது பொதுவுடைமை சார்பு கொண்டதாகவும் சோவியத் ஒன்றியம் சார்பாக செயல்படுவதாகவும் விவரிக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு முதல் ஜூன் 1 ஆம் தேதி குழந்தைகள் தினமாக பல நாடுகளில் அனுசரிக்கப்படும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம், மாஸ்கோவில் நவம்பர் 1949 இல் நடைபெற்ற மாநாட்டில் கூட்டமைப்பால் நிறுவப்பட்டது. இது, ஆங்கிலம், பிரஞ்சு, எசுப்பானியம், ஜெர்மனி மற்றும் உருசிய மொழிகளில், அரபு மொழியில் அவ்வப்போது இதழ்களுடன் வுமன் ஆஃப் தி ஹோல் வேர்ல்ட் என்ற மாத இதழையும் வெளியிடுகிறது. [2]

கூட்டமைப்பு 1945 இல் பாரிஸில் நிறுவப்பட்டது, ஆனால் பிரெஞ்சு அதிகாரிகளால் தடைசெய்யப்பட்ட பின்னர், கிழக்கு பெர்லினுக்கு மாற்றப்பட்டது. அங்கு கிழக்கு ஜெர்மன் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டது. [3] [4]  அமைப்பின் முதல் தலைவராக யூஜெனி காட்டன் , நிறுவன உறுப்பினர்களில் சோலா டிராகோய்சேவா மற்றும் அனா பாக்கர் ஆகியோர் அடங்குவர். அமைப்பானது 1945-க்குப் பிந்தைய காலத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய மற்றும் "அநேகமாக மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச பெண்கள் அமைப்புகளில்" ஒன்றாகும். [5] அதன் வரலாற்றில் பல்வேறு புள்ளிகளில், ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையின் ஆலோசனை அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பெண்களின் நிலை குறித்த ஆணையத்தில் அமைப்பின் பிரதிநிதிகளின் துவக்கத்தில் தான் 1975 ஆம் ஆண்டில் ஐநா சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்தது [6]

பெண்கள் சர்வதேச ஜனநாயகக் கூட்டமைப்பின் செயலகம் பிரேசிலின் சாவோ பாவுலோவில் அமைந்துள்ளது. [7] பிலிப்பீன்சு காங்கிரஸ் பெண்மணி, லிசா மசா, ஆசியாவில் கூட்டமைப்பின் பிராந்திய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். [8]

சான்றுகள்[தொகு]

  1. "Women's International Democratic Federation (WIDF) Records, 1945-1979". Five College Archives & Manuscript Collections. Sophia Smith College. பார்க்கப்பட்ட நாள் 9 December 2015.
  2. English copies of the WOWW magazine can be found at the International Institute for Social History: https://search.socialhistory.org/Record/1398843
  3. Peter Duignan. The rebirth of the West: the Americanization of the democratic world, 1945-1958. https://books.google.com/books?id=6_NoByAPSIEC&pg=PA306. பார்த்த நாள்: 25 March 2012. 
  4. Rhodri Jeffreys-Jones. Eternal vigilance?: 50 years of the CIA. https://books.google.com/books?id=GhOn2Wto3gcC&pg=PA107. பார்த்த நாள்: 25 March 2012. 
  5. de Haan, Francisca. "The Women's International Democratic Federation (WIDF): History, Main Agenda, and Contributions, 1945-1991". Women and Social Movements, International-1840 to Present. Archived from the original on 29 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 9 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Francisca de Haan, “A Brief Survey of Women's Rights from 1945 to 2009.” UN Chronicle. 2010, Vol. 47 Issue 1, p56-59
  7. Women's International Democratic Federation. Contato பரணிடப்பட்டது 2019-09-16 at the வந்தவழி இயந்திரம்
  8. Women's International Democratic Federation. Comitê de Direção FDIM – 2007 – 2011 பரணிடப்பட்டது 2019-04-01 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]