பெண்களுக்கான சொத்துரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்களுக்கான சொத்துரிமை (women's property rights) என்பது சமூகத்தில் வாழும் பெண்களுக்கு சொத்துக்களை நிர்வகிக்கவும், மேலும் பரம்பரையாக வரும் சொத்துக்களை அனுபவிக்கவும் வழங்கப்படும் உரிமைகள் ஆகும். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் வழக்கம் நாடுகளுக்கு நாடு வேறுபடுகின்றது. பெண்களுக்கு சொத்துரிமை அளிப்பதில் மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், அரசியல் போன்றவைகள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. பல நாடுகளில் இன்னும் பெண்களுக்கு சொத்துரிமை வழங்காததன் காரணமாக இன்று உலக சமுதாயம் பல சவால்களை தற்சமயம் எதிர்கொண்டு வருகிறது. முக்கியமாக கல்வியறிவின்மை, குடும்ப வறுமை, ஆரோக்கியக்குறைவு போன்றவைகள் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன. இவைகள் பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

உலகம் தழுவிய அளவில் பெண்களின் நிலை[தொகு]

உலகம் முழுவதும் உற்பத்தித் துறை, விவசாயம், தொழிற்சாலைகள், சிறு குறு தொழில்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. பல நாடுகளில் பெண்களின் மூலமாக வரும் வருமானம் மட்டுமே பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. உலக அளவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 40 சதவீத குடும்பங்களுக்கு பெண்களே தலைமை வகிக்கிறார்கள். உலகில் மூன்றில் ஒரு பங்கு மகளிர் சாியான அடிப்படை வசதிகள் கூட இன்றி வாழ்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.[சான்று தேவை] உலக அளவில் விவசாயிகளால் தூவப்படும் விதைகளில் 60 முதல் 80 சதவீதம் பெண் விவசாயிகளால் தான் தூவப்படுகிறதாம்.[சான்று தேவை]

சொத்துரிமைகளில் பெண்களின் நிலை[தொகு]

என்ன தான் விவசாயத்துறையில் பெண்கள் மகத்தான பங்களிப்பு அளித்தாலும், அவா்களுக்கு சொத்துரிமை என்பது தொடா்ந்து மறுக்கப்படுகிறது. நில உரிமை மாற்றப்படும் போது அவா்கள் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நில உரிமை மாற்ற சபையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதே ஆகும்.

இந்தியாவில் பெண்களுக்கான நிலை[தொகு]

பண்டைய இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டுள்ளது. மிதக்ஸரா, தாயபாகா போன்ற பள்ளிகளின் கொள்கைகள் பெண்களுக்கு சொத்துாிமை வழங்குவதை எதிா்த்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை படிப்படியாகத் தான் வழங்கப்பட்டது. இந்திய அரசமைப்பு சட்டத்தின் சரத்து 15 (1) குடிமக்களை பாலின ரீதியாக வேறுபடுத்துவது கூடாது என்பதை வலியுறுத்துகிறது. இது பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வழி செய்த மகத்தான சட்ட வாக்கியம் என்று பெண்ணியவாதிகளால் கருதப்படுகின்றது. அதன் பின்னர் 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட வழிவகை செய்தது. பின்னா் 2005 ஆம் அமல்படுத்தப்பட்ட திருத்தச் சட்டத்தின் படி பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளை போல தம் முன்னோர்களின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடிந்தது. தற்போதும் அந்த முறைப்படியே பாகப்பிரிவினை இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இது இந்தியப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பொிய உரிமையாக சமூக வல்லுநர்களால் கருதப்படுகிறது.