பெண்களின் உடல்நலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நியூயார்க் நகரத்திலுள்ள மகளிர் உடல்நலக் காப்பு சங்கத்தின் நினைவுச்சின்னம்

பெண்களின் உடல்நலம் பெண்களின் உடற்கூற்றியல் குறித்த உடல்நலப் பிரச்சினைகளைக் குறிப்பதாகும். இவை பெரும்பாலும் பெண் இனப்பெருக்கத் தொகுதி, மார்பகம் போன்ற அமைப்புகள் அல்லது பெண்களுக்கான அல்லது பெண்களில் குறிப்பிடத்தக்கதான இயக்குநீர்களால் ஏற்படும் கோளாறுகளைக் குறிப்பதாகும். மாதவிடாய், கருத்தடை, தாய்நலம், குழந்தை பிறப்பு, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்றவை இதில் அடங்கும். பாலின வேறுபாடால் சிகிச்சைக்கான அணுக்கம் வேறுபடும் உயிரியலுடன் நேரடித் தொடர்பில்லாத மருத்துவப் பிரச்சினைகளும் இதில் உள்ளடங்கும்.

பெண்களின் உடல்நலத்தைக் குறித்தப் பிரச்சினைகளை பல பெண்ணியவாதிகள் முன்னெடுத்துள்ளனர்; குறிப்பாக இனப்பெருக்கத்தொகுதி தொடர்பானவை மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளன. உடல்நலத்தை பாலினம் மூலம் வகைப்படுத்தும் உலக சுகாதார அமைப்பு இதற்கு முன்னுரிமை அளித்துள்ளது.[1]

ஐக்கிய அமெரிக்க சமூகவியலாளர்களும் மருத்துவ ஆய்வாளர்களும் பெண்களின் உடல்நலத்தை பெண்களின் உடலைக் கொண்டு வரையறுக்காது ஆணிற்கும் பெண்ணிற்கும் உள்ள உயிரியல்வழி பால் வேறுபாடுகளைக் கொண்டு வரையறுக்கின்றனர். இரு பாலினத்தினருக்கும் இதய நோய், புற்றுநோய் போன்ற உடல்நலக்கேடுகளில் நோயுறும் தன்மை, நோயறிகுறிகள், சிகிச்சைக்கு பலன்பெறுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க உயிரியல் வேறுபாடுகள் இருப்பதை ஆய்வாளர்கள் நிலைநிறுத்தியுள்ளனர். 1974ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் முதன்முதலாக நிறுவப்பட்ட லெய்சார்ட் மகளிர் சமூக உடலநல மையம் போன்ற மகளிர் உடல்நலச் சேவைகள் மகளிர் நலத்திற்காக சேவை வழங்கலுக்கான ஓர் புதிய நெறிமுறையாக உருவாகியுள்ளன.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://www.who.int/social_determinants
  2. Stevens, J (1995). Healing Women: A History of Leichhardt Women's Community Health Centre.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்களின்_உடல்நலம்&oldid=2718349" இருந்து மீள்விக்கப்பட்டது