பெட்வயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெட்வயர் (Fedwire, ஃபெட்வயர்) என்பது ஒரு நிகழ்நேர மொத்தக் கடன் நிதி பரிமாற்ற அமைப்பு ஆகும். முன்னதாக இவ்வமைப்பு பெடரல் ரிசர்வ் வயர் நெட்வொர்க் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கிகளால் மின்னணு சாதனங்களைக் கொண்டு இப்பரிமாற்றம் இயக்கப்பட்டது. இப்பரிமாற்றத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு மார்ச் 19 வரை 9,289 க்கும் மேற்பட்ட பங்கேற்ப்பாளர்கள் பயனடைந்துள்ளனர்.[1] இசைவு பரிமாற்ற வங்கிகளிடை நிதிவழங்கல் திட்டத்துடன் இணைந்து தனியார் நிறுவனமான இசைவு பரிமாற்ற நிதிவழங்கு நிறுவனம் இதை இயக்கியது. பெரிய தொகை அல்லது காலம் சார்ந்த உள்நாடு மற்றும் அனைத்துலக நாடுகளின் பணப்பட்டுவாடாவை பெட்வயர் என்ற அமெரிக்க நிறுவனம் செய்யும். இவ்வசதியானது தேவைக்கேற்ப நீண்டு சுருங்கும் தன்மையுடைய நெகிழ்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில், டாட்-ஃபிராங்க் சட்டத்தின் VIII ஆவது தலைப்பின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டது. முக்கியமான முறையான நிதி சந்தையின் பயன்பாடு மத்திய வங்கிக் கூட்டமைப்பு மூலம் உயர்ந்த கட்டுப்பாட்டு ஆய்வுக்கு உட்பட்டது என்பது இதன் பொருளாகும்.[2] பெட்வயர் பணப்பகிர்வு சேவையில் நாள்தோறும் சராசரி பண்டமாற்றம் 2007 ஆம் ஆண்டு தோராயமாக 2.7 டாலர் ட்ரில்லியனும், தினசரி பணம் வழங்கல் எண்ணிக்கை சராசரியாக 537,000 மும் ஆகும்.[3]

வரலாறு[தொகு]

பெடரல் ரிசர்வ் வங்கிகள் 1915 ஆம் ஆண்டு முதல் மின்னணு முறையில் நிதி பரிமாற்றங்களை நிகழ்த்தி வருகின்றன. நிதி மாற்றங்களைச் செயல்படுத்த 1918 ஆம் ஆண்டில் வங்கிகள் தமக்கென தனியாகத் தொலை தொடர்பு அமைப்பினை உருவாக்கின. அனைத்து ரிசர்வ் வங்கிகள், பெடரல் ரிசர்வ் வாரியம் மற்றும் அமெரிக்கக் கருவூலம் முதலானவை தந்திமூலம் இணைக்கப்பட்டன. கருவூலப்பத்திரங்களும் 1920 களில் தந்தி மூலம் பரிமாறப்பட்டன. 1970 களின் முற்பகுதி வரை இந்நிறுவனத்தில் தந்திமுறை பயன்படுத்தப்பட்டது. 1981 ஆம் ஆண்டு வரை பெட்வயர் சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இச்சேவை பெடரல் ரிசர்வ் வங்கியின் உறுப்பினர் வங்கிகளுக்கு மட்டுமே கிடைத்தன.

1980 ஆம் ஆண்டின் வைப்புத்தொகை நிறுவனங்களின் மீள்முறைப்படுத்துதல் மற்றும் கட்டுபடுத்துதல் விதி, பெரும்பாலான பெடரல் ரிசர்வ் வங்கியின் நிதிச் சேவை பயன்பாட்டிற்கு கட்டணம் எதிர்நோக்கியது. நிதி பரிமாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு பத்திரங்களைப் பாதுகாத்தல், மற்றும் உறுப்பினர் அல்லாத வைப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் நேரடியாக கட்டணச் சேவைக்கு உள்ளாகியது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fedwire Participant Directory" பரணிடப்பட்டது 2010-02-10 at the வந்தவழி இயந்திரம், Federal Reserve Financial Services
  2. "Designated Financial Market Utilities (Last update: January 29, 2015)". Board of Governors of the Federal Reserve System. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
  3. "Annual Data (1987–2009)", Fedwire Funds Service, the Federal Reserve Board
  4. "Fedwire® and National Settlement Services". Federal Reserve Bank of New York. June 2009. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்வயர்&oldid=3254740" இலிருந்து மீள்விக்கப்பட்டது