பெட்லாவாட் வெடிவிபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2015 பெட்லாவாட் வெடிவிபத்து
Madhya Pradesh district location map Jhabua.svg
இந்தியாவிலுள்ள சாபூவா மாவட்டம்
நேரம்08:30 இந்திய நேரம்
தேதி12 செப்டம்பர் 2015
இடம்பெட்லாவாட், சாபூவா, மத்தியப் பிரதேசம், இந்தியா
வேறு பெயர்கள்சாபூவா வெடிவிபத்து
வகைவெடிவிபத்துகள், கட்டிட சரிவுகள்
காரணம்எரிவாயு விபத்து, ஜெலினைட் குச்சி
இறப்பு105
காயமடைந்தவர்கள்150+ காயமடைந்தனர்
குற்றம்சாட்டப்பட்டவர்(கள்)இராசேந்திர கசவா

மத்தியப் பிரதேசத்திலுள்ள சாபூவா மாவட்டத்தின் பெட்லாவட் நகரத்தில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் நாள் வெடிவிபத்து நடந்ததில் சுமார் 105 நபர்கள் உயிரிழந்தனர்[1] இவ்விபத்திற்கான காரணமாக, வெடிபொருட்களும், சமையல் எரிவாயுவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.[2][3]

வெடிவிபத்து[தொகு]

காவல்துறையின் அறிக்கையின்படி இரு வேறு விபத்துகள் நடந்துள்ளன. கூட்டம் அதிகமுள்ள உணவகத்திலுள்ள சமையல் எரிவாயு வெடித்ததால் அருகிலிருந்த வெடிப்பொருட்களும் வெடித்தாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.[4] ஆனால் அதன்பிறகு நடந்த விசாரணையில் வெடிவிபத்து முதலில் வெடிபொருட்கள் இருந்த கிடங்கில் நடந்ததாக காவல்துறை நம்புகிறது.[5] வெடிப்பொருட்கள் இருந்த கிடங்கும், உணவகமும் அருகில் இருந்ததால் உணவகம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.[6] இந்த விபத்தால் அருகிலிருந்த கூட்டமிகுந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்தோரும் இறந்துள்ளனர்.[1]

பிணக்கூறு ஆய்வுகளை மாநிலக் காவல்துறை ஆரம்பித்துள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஃகான் இறந்தவர்களுக்காக 200,000 காயமைடைந்தவர்களுக்காக 50,000 அறிவித்துள்ளார்[7]

இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரணப் முகர்ஜி,[2] முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி ஆகியோர் தங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.[1]

புலனாய்வு[தொகு]

புலனாய்வின் அடிப்படையில், இராசேந்திர கசவா என்பவர் வெடிவிபத்து நடந்த கிடங்கில் தங்கியிருந்தார் என்பதும், ஜெலினைட் என்னும் வெடிப்பொருட்களை சேமித்து வைத்திருந்தார் என்பதும், இவ்வெடிவிபத்திற்குக் காரணமாக இருந்தார் என்பதும் கண்டறியப்பட்டது. மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சியான இந்திய தேசிய காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சியின் நெருக்கமான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க உறுப்பினரால் இது நடத்தப்பட்டது என குற்றம் சாட்டியபோதும், இறந்தவர்களின் உடல்மீது அரசியல் நடைபெறுகிறது என பாஜக மறுத்துள்ளது.[8] இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ, உட்பிரிவு 3/4 பிரிவின் கீழ் இராசேந்திர கசவா கைது செய்யப்பட்டுள்ளார். இறப்புகள் 1973-ம் ஆண்டின் குற்றப்பிரிவு 174-ன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[9] காவல்துறை ஆய்வின் போது கசவாவின் வீட்டில் இன்னும் சில ஜெலினைட் குச்சிகளை கண்டறிந்துள்ளனர்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Mishra, Ritesh (13 September 2015). "105 killed in Jhabua explosion; 'people were thrown away like pebbles'". Hindustan Times. http://www.hindustantimes.com/india-news/dozens-feared-dead-in-explosion-at-a-building-in-mp/article1-1389656.aspx. பார்த்த நாள்: 14 September 2015. 
  2. 2.0 2.1 "Explosion kills 82 at Petlwad town in Madhya Pradesh". The Hindu. 12 September 2015. http://www.thehindu.com/news/national/other-states/many-killed-in-gas-cylinder-explosion-at-madhya-pradeshs-jhabua-district/article7645230.ece. பார்த்த நாள்: 12 September 2015. 
  3. Kumar, Hari (12 September 2015). "Explosion in India Town Kills Dozens". The New York Times. http://www.nytimes.com/2015/09/13/world/asia/petlawad-madhya-pradesh-india-explosion.html. 
  4. Tommy Wilkes, Sanjeev Miglani (12 September 2015). "At least 85 killed in restaurant explosions in Madhya Pradesh". Reuters. New Delhi. http://in.reuters.com/article/2015/09/12/india-madhyapradesh-jhabua-blast-idINKCN0RC05A20150912. பார்த்த நாள்: 12 September 2015. 
  5. Yogendra Pratap Singh, Ritesh Mishra (13 September 2015). "Petlawad tragedy grim reminder of MP's thriving explosives bazaar". Hindustan Times. பார்த்த நாள் 14 September 2015.
  6. Prakash, Satya (12 September 2015). "Massive explosion rips through building in MP, 89 killed". India Today (New Delhi). http://indiatoday.intoday.in/story/massive-blast-rips-through-building-in-mp-82-killed/1/472040.html. பார்த்த நாள்: 12 September 2015. 
  7. "Explosion in MP’s Jhabua: Death toll rises to 89, over 100 injured". The Times of India. Press Trust of India (Jhabua). 12 September 2015. http://timesofindia.indiatimes.com/india/Explosion-in-MPs-Jhabua-Death-toll-rises-to-89-over-100-injured/articleshow/48936476.cms. பார்த்த நாள்: 12 September 2015. 
  8. "89 dead in Jhabua blast: Hunt on for explosives owner, licence details". The Indian Express. http://indianexpress.com/article/india/india-others/jhabua-blast-police-launch-manhunt-to-arrest-man-who-stored-explosives-in-building/. பார்த்த நாள்: 14 September 2015. 
  9. "Jhabua blasts: Tenant booked for storing explosives illegally". Hindustan Times. 13 September 2015. http://www.hindustantimes.com/india-news/jhabua-blasts-tenant-booked-for-storing-explosives-illegally/article1-1389971.aspx. பார்த்த நாள்: 13 September 2015. 
  10. "Jhabua blast: Most wanted Rajendra Kaswa was smuggling explosives since 80s". http://timesofindia.indiatimes.com/city/bhopal/Jhabua-blast-Most-wanted-Rajendra-Kaswa-was-smuggling-explosives-since-80s/articleshow/48945233.cms. பார்த்த நாள்: 14 September 2015.