பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (Petroleum and Natural Gas Regulatory Board) இந்தியாவின் ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும், இவ்வமைப்பு இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியச் சட்டம், 2006 இவ்வாரியத்திற்கான அடிப்படையாகும்.

பெட்ரோலியச் சுத்திகரிப்பு, நாடு முழுவதும் கொண்டு செல்லுதல், பகிர்வு, சேமிப்பு, சந்தைப்படுத்தல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு வழங்கல் மற்றும் விற்பனை ஆகியவை வாரியத்தின் முக்கியமான பணிகளாகும். இயற்கை எரிவாயு, நாடு முழுவதும் கிடைக்கும் வகையில், கட்டணத்தை சீரமைப்பதற்கான பணியில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் ஈடுபடுகிறது.

அமைப்பு முறை[தொகு]

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் தற்போது கீழ்கண்டவாறு செயல்பட்டு வருகிறது.[1]
•டி.கே. சாரப் (தலைவர்)
•சட்பால் கார்க்கு (உறுப்பினர் மற்றும் கட்டுப்பாடு)
•எசு.எசு. சாகர் (உறுப்பினர், சட்டம்)
•எசு.ராத் (உறுப்பினர், ஒருங்கிணைப்பு)
•வந்தனா சர்மா (செயலர்)

நோக்கம்[தொகு]

குறைந்த செலவில் பெட்ரோலியம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றை திறம்பட கொண்டு சென்று விநியோகிப்பதற்கான அடிப்படை உள்கட்டமைப்பில் முதலீடுகளை எளிதாக்குவதன் மூலம் விரைவான மற்றும் ஒழுங்கான வளர்ச்சியுடன் ஒரு துடிப்பான எரிசக்தி சந்தையை உருவாக்குதல், நியாயமான வர்த்தக நடைமுறைகள் மூலம் நுகர்வோர் நலன்களின் உயர் மட்ட பாதுகாப்பு, இந்திய பொருளாதாரத்தின் மேம்பட்ட போட்டித்திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்வதற்காக நிறுவனங்களிடையே போட்டியை எதிர்கொள்ளுதல் போன்றவை வாரியத்தின் நோக்கங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About PNGRB". Archived from the original on 3 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 28 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)