பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி
பெட்டாலிங் ஜெயா (P105) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Petaling Jaya (105) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | பெட்டாலிங் ஜெயா தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெட்டாலிங் ஜெயா; சுபாங் ஜெயா பண்டார் சன்வே, கிளானா ஜெயா, பண்டார் உத்தாமா டாமன்சாரா, சா ஆலாம், சுங்கை பூலோ, கோத்தா டாமன்சாரா, சுங்கைவே |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
நீக்கப்பட்ட காலம் | சா ஆலாம் தொகுதி |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | வோங் சென் (Wong Chen) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 196,588 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 55 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Petaling Jaya; ஆங்கிலம்: Petaling Jaya Federal Constituency; சீனம்: 八打灵再也国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P105) ஆகும்.
பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1986-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1986-ஆம் ஆண்டில் இருந்து பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பெட்டாலிங் ஜெயா மாநகரம்
[தொகு]பெட்டாலிங் ஜெயா மாநகரம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கிழக்குப் பகுதியில் கோலாலம்பூர்; வடக்குப் பகுதியில் சுங்கை பூலோ, மேற்குப் பகுதியில் சிலாங்கூரின் தலைநகரமான சா ஆலாம், மற்றும் சுபாங் ஜெயா, தெற்குப் பகுதியில் கின்ராரா, பூச்சோங் ஆகிய பெரும் நகர்ப் பகுதிகள் உள்ளன.
இந்த மாநகரத்தின் பரப்பளவு 97.2 சதுர கி.மீ. 2020-ஆம் ஆண்டின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களின்படி இங்கு 902,086 பேர் வசிக்கின்றனர். பெட்டாலிங் ஜெயா நகருக்கு 2006 சூன் 20-ஆம் தேதி மாநகர்த் தகுதி (City Status) வழங்கப்பட்டது.
பெட்டாலிங் மாவட்டம்
[தொகு]பெட்டாலிங் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால், அண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டின் அதிகாரப் பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,298,123 மக்கள் வசிக்கின்றார்கள்.
பெட்டாலிங் மாவட்டம் சுமார் 484.32 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. ஏராளமான நகர துணைப் பிரிவுகள், பழைய துணை நிர்வாகங்கள் (முக்கிம்) உள்ளன. இவை அனைத்தும் டாமன்சாரா, சுபாங் மற்றும் பெட்டாலிங் போன்ற ஒரே பெயர்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி
[தொகு]பெட்டாலிங் ஜெயா தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சா ஆலாம்; பெட்டாலிங் ஜெயா தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P090 | 1986–1990 | எங் செங் சாய் (Eng Seng Chai) |
ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது மக்களவை | 1990–1995 | குவா கியா சூங் (Kua Kia Soong) | ||
தொகுதி சீரமைப்பு; பெட்டாலிங் ஜெயா உத்தாரா, பெட்டாலிங் ஜெயா செலாத்தான் மற்றும் சுபாங் தொகுதி என பிரிக்கப்பட்டது. | ||||
தொகுதி சீரமைப்பு; பெட்டாலிங் ஜெயா செலாத்தான், கிளானா ஜெயா மற்றும் சா ஆலாம் தொகுதிகளில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. | ||||
14-ஆவது மக்களவை | P105 | 2018 | மரியா சின் அப்துல்லா (Maria Chin Abdullah) |
பாக்காத்தான் (சுயேச்சை)[5] |
2018–2022 | பாக்காத்தான் (பி.கே.ஆர்) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது | லீ சியான் சுங் (Lee Chean Chung) |
பெட்டாலிங் ஜெயா மக்களவை தேர்தல் முடிவுகள்
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
195,148 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
148,021 | 74.74% | ▼ 8.00 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
145,862 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
495 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,664 | - | - |
பெரும்பான்மை (Majority) |
50,575 | 34.68% | ▼ -14.88 |
வெற்றி பெற்ற கட்சி: | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6] |
பெட்டாலிங் ஜெயா மக்களவை வேட்பாளர் விவரங்கள்
[தொகு]சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
லீ சியான் சுங் (Lee Chean Chung) |
பாக்காத்தான் (PH) | 83,311 | 57.12% | -11.40 ▼ | |
தேங் புக் (Theng Book) |
பெரிக்காத்தான் (PN) | 32,736 | 22.44% | +22.44 | |
சிவ் ஹியன் டாட் (Chew Hian Tat) |
பாரிசான் (BN) | 23,253 | 15.94% | -3.01 ▼ | |
மஸ்வீன் மொக்தார் (Mazween Mokhtar) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (PEJUANG) | 4,052 | 2.78% | +2.78 | |
எசாம் முகமது நோர் (Ezam Mohd Nor) |
மலேசிய மக்கள் கட்சி (Parti Rakyat Malaysia) |
2,049 | 1.40% | +1.40 | |
கே.ஜே. ஜான் (KJ John) |
சுயேச்சை | 461 | 0.32% | 0.32 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-05-27. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
- ↑ "Maria Chin to join GE14 battle as 'independent'". Malaysiakini. 2018-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.