பெடோம் குதிரைலாட வௌவால்
| பெடோம் குதிரைலாட வௌவால் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | லாட வௌவால்
|
| பேரினம்: | ரைனோலோபசு
|
| இனம்: | ரை. பெடோமை
|
| இருசொற் பெயரீடு | |
| ரைனோலோபசு பெடோமை ஆண்டர்சன், 1905 | |
| |
| பெடோம் குதிரைலாட வௌவால் வாழிடங்கள் | |
பெடோம் குதிரைலாட வௌவால் (Lesser woolly horseshoe bat) என்பது சிறிய குதிரைலாட வௌவால் (Rhinolophus beddomei) என்றும் அழைக்கப்படுகிறது. இது ரைனோலோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் சிற்றினம் ஆகும். இது இந்தியா, இலங்கையில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், குகைகள், நகர்ப்புறங்கள் ஆகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]பெடோம் குதிரைலாட வெளவாலைனை 1905-ஆம் ஆண்டில் டென்மார்க் பாலூட்டி நிபுணரான குனுட் ஆண்டர்சன் என்பவரால் ஒரு புதிய சிற்றினம் என்று விவரிக்கப்பட்டது.[2] "பெடோம்" என்ற சிற்றினத்தின் பெயரானது, ரிச்சர்ட் என்றி பெடோம் என்ற பிரித்தானிய அதிகாரியும் இயற்கை ஆர்வலரும் நினைவாக இடப்பட்டப் பெயராகும். இவர் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவில் கழித்தார்.[3] இந்த சிற்றினத்தின் மாதிரி சேகரிப்பாளராக பெடோம் இருந்தார். இந்த முழுமையான வடிவம் இந்தியாவின் வயநாடு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்டது. [2] ரைனோலோபசு மிகவும் தனித்துவமானது பேரினம் என்பதால், இது நெருக்கமான தொடர்புடைய "இனக் குழுக்களாக" பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டர்சன் பெடோம் குதிரைலாட வௌவால்களை பிலிப்பென்சிசு இனக் குழுவில் வைத்தார். ஆனால் சிம்மன்சு இதை டிரைபோலியாட்டசு இனக் குழுவிலும் சேர்த்துள்ளார்.[2]சில வகைப்பாட்டியலானார்கள் 1992 முதல் கம்பளி குதிரைலாட வௌவாலின் துணையினமாகக் கருதினார். இது பொதுவாக முழுச் சிற்றினத் தகுதியுடன் வழங்கப்படுகிறது.[4]
விளக்கம்
[தொகு]பெடோம் குதிரைலாட வௌவாலின் தலை முதல் உடல் நீளம் 7 சென்டிமீட்டர்கள் (2.8 இன்ச்), முன்கை 6 சென்டிமீட்டர் (2.4 இன்ச்) நீளம் ஆகும். இறக்கைகள் 33 சென்டிமீடர் (13 இன்ச்) நீளமுடையது. பெண் வௌவால் ஆண் வௌவால்களை விடப் பெரியவை. உடல் உரோமம் கடினமான, கம்பளி போன்று காணப்படும். உடல் முற்றிலும் அடர் சாம்பல் பழுப்பு, மேல் பக்கம் நரையுடன் காணப்படும். இறக்கைச் சவ்வு கரும்பழுப்பு நிறத்திலிருக்கும். காதுகள் நன்கு தெரியக்கூடியன.
உயிரியல்
[தொகு]பெடோம் குதிரைலாட வௌவால் இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. இது இருட்டில் செல்ல எதிரொளி முறையினைப் பயன்படுத்துகிறது. இது 31.0-38.3kஏர்ட்சு அதிர்வெண்களில் எதிரொலிக்கிறது இதன் அதிகபட்ச ஆற்றல் அதிர்வெண் 38.5 மற்றும் 38.7 kHz ஆகும். இதன் அழைப்பு காலம் 48.2-58.0 வினாடிகள் ஆகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Srinivasulu, B.; Srinivasulu, C. (2019). "Rhinolophus beddomei". IUCN Red List of Threatened Species 2019: e.T40023A22061859. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T40023A22061859.en. https://www.iucnredlist.org/species/40023/22061859. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 Andersen, K. (1905). "XXVIII.—On the Bats of the Rhinolophus philippinensis Group, with Descriptions of Five new Species". Journal of Natural History 16 (92): 243–257. doi:10.1080/03745480509443674. https://biodiversitylibrary.org/page/19214870.
- ↑ Beolens, B.; Watkins, M.; Grayson, M. (2009). The eponym dictionary of mammals. JHU Press. p. 34. ISBN 9780801895333.
- ↑ Topál, G.; Csorba, G. (1992). "The subspecific division of Rhinolophus luctus Temminck, 1835, and the taxonomic status of R. beddomei Andersen, 1905 (Mammalia, Chiroptera)". Miscellanea Zoologica Hungarica 7: 101–116. http://publication.nhmus.hu/pdf/misczool/Miscnea_zool_hung_1992_Vol_7_101.pdf.
- ↑ Raghuram, H.; Jain, M.; Balakrishnan, R. (2014). "Species and acoustic diversity of bats in a palaeotropical wet evergreen forest in southern India". Current Science: 631–641.
