பெடோமின் பூனைப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடோமின் பூனைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: ஊர்வன
வரிசை: இசுகொமாடா
குடும்பம்: கோலுபிரிடே
பேரினம்: போயிகா
இனம்: போ, பெட்டோமி
இருசொற் பெயரீடு
போயிகா பெட்டோமி
வால், 1909

போயிகா பெட்டோமி (Boiga beddomei), என்பது பொதுவாக பெடோமின் பூனைப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது கொலுப்ரிடே குடும்பத்தில் உள்ள பின்புற-பற்கள் கொண்ட பாம்பு வகையாகும். இந்த சிற்றினம் இந்தியாவின் மகாராட்டிரா, குசராத்து மற்றும் கோவா மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி.[2]

புவியியல் வரம்பு[தொகு]

பெடோமி பூனைப்பாம்பு இந்தியாவில், மகாராட்டிரா மாநிலத்தில் (பீமாசங்கர், முல்சி, கொய்னா, வசோட்டா) மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வடக்குப் பகுதிகளில் காணப்படுகிறது. இது குசராத்து, கோவா மற்றும் வடக்கு கருநாடகா[3] மலைத்தொடர்களிலும் காணப்படுகிறது.[4]

சொற்பிறப்பியல்[தொகு]

பிரித்தானியத் தரைப்படை அதிகாரி மற்றும் தாவரவியலாளர் ரிச்சர்ட் ஹென்றி பெடோம் (1830-1911) என்பவரின் பெயரால் போயிகா பெட்டோமி என இந்தப் பாம்பு பெயரிடப்பட்டது. [5]

விளக்கம்[தொகு]

பெடோமி பூனைப்பாம்பு ஒரு மெலிந்த பாம்பு ஆகும். தன் தலை கழுத்திலிருந்து வேறுபட்டுக் காணப்படும். முதுகெலும்பு செதில்கள் வலுவாக விரிவடைந்து காணப்படும். முதுகுபுறம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் அடர் பழுப்பு முதுகெலும்பு குறுக்கு பட்டைகளுடன் இருக்கும். வயிற்றுப்பகுதியின் மேற்பரப்பு மஞ்சள்-நுரை நிறத்தில், கரும்புள்ளிகளுடன் காணப்படும்.

செதில்கள்[தொகு]

19 சாய்ந்த வரிசைகளில் முதுகு செதில்கள் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். முதுகெலும்பு பகுதியில் இவை வலுவாக விரிவடைந்து அறுகோணமாகக் காணப்படும். வயிற்றுப்புறத்தில் 238-252 எண்ணிக்கையிலும் வாலின் பக்கப்பகுதியில் 113-127 என்ற எண்ணிக்கையிலும் காணப்படும்.

வாழ்விடம்[தொகு]

பெடோமி பூனைப்பாம்பின் விருப்பமான இயற்கை வாழ்விடம் 1,000 m (3,300 அடி) உயரத்தில் உள்ள பசுமையான காடுகள் ஆகும். இது இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. மரங்களில் வாழக்கூடியது.

உணவு[தொகு]

பெடோமி பூனைப்பாம்பின் முக்கிய உணவாக ஓந்தி, தரைப்பல்லி, அரணை மற்றும் தவளை உள்ளது.

இனப்பெருக்கம்[தொகு]

பெடோமி பூனைப்பாம்பின் முட்டையிடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Captain, A.; Srinivasulu, C.; Srinivasulu, B.; Vyas, R.; Mohapatra, P.; Kulkarni, N.U. (2021). "Boiga beddomei". IUCN Red List of Threatened Species 2021: e.T176619A123302891. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T176619A123302891.en. https://www.iucnredlist.org/species/176619/123302891. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Ganesh, S.R.; Achyuthan, N.S.; Chandramouli, S.R.; Vogel, G. (2020). "Taxonomic revision of the Boiga ceylonensis group (Serpentes: Colubridae): re-examination of type specimens, redefinition of nominate taxa and an updated key". Zootaxa 4779 (3): 301–322. doi:10.11646/zootaxa.4779.3. 
  3. "Karnataka", Wikipedia (in ஆங்கிலம்), 2022-12-10, பார்க்கப்பட்ட நாள் 2022-12-18
  4. Ganesh, S.R.; Mallik, A.K.; Achyuthan, N.S.; Shanker, K.; Vogel, G. (2021). "A new species of Boiga (Serpentes: Colubridae) from the Southern Western Ghats of India with a molecular phylogeny and expanded characterisation of related species". Zootaxa 4981 (3): 449–468. doi:10.11646/zootaxa.4981.3.2. 
  5. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடோமின்_பூனைப்பாம்பு&oldid=3652134" இலிருந்து மீள்விக்கப்பட்டது