உள்ளடக்கத்துக்குச் செல்

பெடுகுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடுகுல்
Bedugul
உலுன் தானு பிரத்தான் கோயில் (2022)
உலுன் தானு பிரத்தான் கோயில் (2022)
பெடுகுல் is located in இந்தோனேசியா
பெடுகுல்
பெடுகுல்
ஆள்கூறுகள்: 8°17′S 115°10′E / 8.283°S 115.167°E / -8.283; 115.167
நாடு இந்தோனேசியா
மாநிலம் பாலி
பிராந்தியம்தபனான்
ஏற்றம்
1,500 m (4,900 ft)
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +8

பெடுகுல் (ஆங்கிலம்; இந்தோனேசியம்: Bedugul) என்பது இந்தோனேசியா, பாலியின் ஒரு மலை ஏரியில் உள்ள ஒரு சுற்றுலா பகுதியாகும். இது பிரத்தான் ஏரியின் மைய-வடக்கு பகுதியில், தென்பசார், சிங்கராஜா நகரங்களுக்கு இடையிலான சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. பெடுகுல் சுற்றுலா பகுதிக்கு அருகில், சண்டிகுனிங், பஞ்சசாரி, பச்சூங் மற்றும் வானகிரி போன்ற கிராமங்கள் உள்ளன.

தபனான் பிராந்தியத்தில் (Tabanan Regency) தென்பசார் நகரிலிருந்து வடக்கே 48 கி.மீ. (30 மைல்) தொலைவிலும்; சிங்கராஜா நகரத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. (12 மைல்) தொலைவிலும் பெடுகுல் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பிராட்டன் ஏரி, பூயான் ஏரி மற்றும் தம்பளிங்கான் ஏரி (Lake Tamblingan) என மூன்று எரிமலைப் பள்ளத்தாக்கு ஏரிகள் உள்ளன.

பொது

[தொகு]
பெடுகுல் மலை நெல் வயல்கள்

பெடுகுல் நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் (4,900 அடி) உயரத்தில் அமைந்திருப்பதால் லேசான மலை காலநிலையை அனுபவிக்கிறது.

பெடுகுலில் உள்ள முக்கிய வழிப்பாட்டுத் தளம் உலுன் தானு பிரத்தான் கோயில் (Pura Ulun Danu Bratan) ஆகும். இது யுனெஸ்கோவால் சுபாக் நீர்ப் பாசன அமைப்பின் (Subak) பட்டியலில் உலகப் பாரம்பரிய களம் எனும் தகுதியைப் பெற்றுள்ளது;[1] மற்றும் இந்தோனேசியாவின் மிகப்பெரிய தாவரவியல் பூங்காவான பாலி தாவரவியல் பூங்காவும் (Bali Botanic Garden) இங்குதான் உள்ளது.

பாலி தாவரவியல் பூங்கா

[தொகு]

பாலி தாவரவியல் பூங்கா, இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகார்னோவின் ஆதரவின் கீழ் சூலை 15, 1959 அன்று நிறுவப்பட்டது. இது 157.5 எக்டேர் (389 ஏக்கர்) நிலப்பரப்பில் அமைந்துள்ளது; மற்றும் இந்தோனேசியாவின் மிகப்பெரிய தாவரவியல் பூங்கா எனும் சாதனைத் தடத்தைப் பதிக்கிறது.[2]

கடல் மட்டத்திலிருந்து 1,250 மீட்டர் முதல் 1,450 மீட்டர் வரை உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 2,000 வகையான தாவரங்கள், ஆர்க்கிட், பிகோனியா செடிவகைகள், மூலிகை தாவரங்கள், மூங்கில் வகைகள், 20,000 தாவர மாதிரிகள் உள்ளன. இங்கிருந்து பிரத்தான் ஏரியின் காட்சிகளை நன்கு இரசிக்கலாம்.[3][4]

காட்சியகம்

[தொகு]
  • பெடுகுல் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cultural Landscape of Bali Province: the Subak System as a Manifestation of the Tri Hita Karana Philosophy". whc.unesco.org. 2012. Retrieved 2024-05-11.
  2. Dr. Wayan Sumantera: Bali's Botanic Garden in BGCNews, Volume 2 Number 2, July 1993 பரணிடப்பட்டது 2016-10-28 at the வந்தவழி இயந்திரம், retrieved 11 August 2010
  3. "Bedugul Botanical Garden braces for school holidays".
  4. "Bali botanical garden wins tourism award". October 5, 2011. Archived from the original on 2016-03-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடுகுல்&oldid=4248797" இலிருந்து மீள்விக்கப்பட்டது