பெடிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடிடே
பேடிசு பேடிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: அனாபேன்டிபார்மிசு
குடும்பம்: பெடிடே
பார்லவ், லியெம் & விக்லெர், 1968
பேரினம்[1]
  • பெடிசு பிளிக்கேர், 1853
  • டேரியோ குலாந்தர் & பிரிட்சு, 2002

பெடிடே (Badidae)(பச்சோந்தி மீன்கள்) என்பது சுமார் 30 சிற்றினங்களைக் கொண்ட மீன் குடும்பம் ஆகும். இது அனபான்டிபார்மிசு வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உலகில் உள்ள மீன்கள் நூலின் 5வது பதிப்பு, இந்த மீனைப் பெயரிடப்படாத மற்றும் தரவரிசைப்படுத்தப்படாத ஆனால் ஒற்றைத்தொகுதி மரபு உயிரினக் கிளையில் உள்ள நாண்டைடே மற்றும் பிரிஸ்டோலெபிடிடே ஆகியவற்றுடன் சேர்த்து அனபான்டிபார்மிசின் சகோதர குடும்பமாக வகைப்படுத்துகிறது. இது பரந்த பெர்கோமார்பாவில் உள்ள ஓவலன்டேரியாவின் சகோதர குழுவாகும்.[2] இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மீன்கள் வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், பாக்கித்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.[3][4] இவை சிறிய வகை நன்னீரில் வாழும் மீன்கள் ஆகும். இவை 7.5 cm (3 அங்) வரை உடல் நீளத்தை அடையக்கூடியன. இவற்றில் பெரியது பெடிசு அசாமென்சிசு[5] சிறியது, டேரியோ டாரியோ (2 cm (0.8 அங்).[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2013). "Badidae" in FishBase. February 2013 version.
  2. J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ). Wiley. பக். 394. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-34233-6. https://sites.google.com/site/fotw5th/. பார்த்த நாள்: 2019-12-10. 
  3. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2019). Species of Dario in FishBase. February 2019 version.
  4. Dahanukar, N.; Kumkar, P.; Katwate, U.; Raghavan, R. (2015). "Badis britzi, a new percomorph fish (Teleostei: Badidae) from the Western Ghats of India". Zootaxa 3941 (3): 429–436. doi:10.11646/zootaxa.3941.3.9. பப்மெட்:25947522. 
  5. "Badis assamensis". SeriouslyFish. பார்க்கப்பட்ட நாள் 16 February 2019.
  6. "Dario dario". SeriouslyFish. பார்க்கப்பட்ட நாள் 16 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடிடே&oldid=3801417" இலிருந்து மீள்விக்கப்பட்டது