உள்ளடக்கத்துக்குச் செல்

பெஞ்சல் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஞ்சல் தாசு
பிறப்புபுட்டா பெஞ்சல் தாசு
Devamachupalli, ஆந்திரப் பிரதேசம், India
பணி
  • பாட்கர்
  • கவிஞர்
  • பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2018–முதல்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
  • நாட்டுப்புறம்
  • திரைப்படம்
  • உலக இசை
இசைக்கருவி(கள்)
  • வாய்ப்பாட்டு
வெளியீட்டு நிறுவனங்கள்
  • சோனி மியூசிக் இந்தியா
  • டி-சீரிஸ்
  • டைம் மியூசிக்
  • ஜங்கிள் மியூசிக்

பெஞ்சல் தாசு (Penchal Das) என்பவர் ஓர் இந்தியப் பாடகரும், பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் தெலுங்கு திரைத்துறையில் பணிபுரிகிறார். இவரது பிரபலமான பாடல்களில் கிருஷ்ணார்ஜுன யுத்தத்தின் (2018) "தாரி சூடு" மற்றும் சிறீகரம் (2021) படத்தில் "பலேகுண்டி பாலா" ஆகியவை அடங்கும், மேலும் பிந்தைய பாடலுக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதிற்கான பரிந்துரையைப் பெற்றது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

புட்டா பென்சல் தாசு, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டத்தின் (தற்போது அன்னமய்யா மாவட்டத்தில் ) உள்ள சிட்வேல் மண்டலத்தில் தேவமச்சுபள்ளியில் பிறந்தார். இவர் தனது தந்தை மற்றும் மாமாவிடமிருந்து பாடுவதைக் கற்றுக்கொண்டார். இவர்களும் பாடகர்கள். தனது எழுத்து குறித்து தி இந்துவிடம் பேசிய தாசு, "தான் ஓர் எழுத்தாளர் என்றும், கவிதைகள் எழுதுவதாகவும்” தெரிவித்தார். மேலும் தான் நாட்டுப்புறப் பாடல்களைத் தீவிரமாகச் சேகரித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும், யார் வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் நாட்டுப்புறக் கதைகள் போன்ற ஒன்றை எழுதுவதற்கு உள்ளடக்கமும் பொருளும் இருக்க வேண்டும் எனத் தெரிவிப்பதோடு, ஒருவர் எந்த வார்த்தையைச் சொன்னாலும், ஜனபதத்திலிருந்து ஒரு கதையை உருவாக்க முடியும்" என்றும் கூறினார். இவர் ஒரு பத்திக் ஓவியக் கலைஞர். இதற்காக இவருக்கு ஆந்திரப் பிரதேச அரசு விருது வழங்கியது. இவர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் ஓவியம் மற்றும் கலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.[1]

சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்கள் நிகழ்வுகளில் தாசு பாடுகிறார். இந்த நிகழ்வில்தான் திரைப்படத் தயாரிப்பாளர் மெர்லபகா காந்தியின் தந்தை முரளி இவரை முதன்முதலில் கவனித்தார். இதன் மூலம் மெர்லபகா காந்தியின் எக்சுபிரசு ராஜா (2016) படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் தனிப்பட்ட உடல்நிலை காரணமாக பாட முடியவில்லை. இவர் கிருஷ்ணார்ஜுன யுத்தம் (2018) திரைப்படத்தில் "தாரி சூடு" மூலம் அறிமுகமானார். இது பின்னர் இவரது இசைவாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.[2]

இசைத் தொகுப்பு

[தொகு]
ஆண்டு பாடல் பணி உருவாக்கம் இசையமைப்பாளர் மேற்.
பாடலாசிரியர் பாடல்
2018 "தாரி சூடு" கிருஷ்ணாஜுன யுத்தம் ஆம் ஆம் ஹிப்ஹாப் தமிழா [3]
"தலைவலி ரா மாமா தலைவலி" சில்லி பெல்லோசு ஆம் இல்லை ஸ்ரீ வசந்த்
"யேடா போயினாடோ" அரவிந்த சமேத வீர ராகவா ஆம் ஆம் தமன் [4]
"ரெட்டம்மா தல்லி" இல்லை ஆம்
2019 "கிளாஸ்மேட்ஸ்" சித்ரலகரி ஆம் இல்லை தேவி ஸ்ரீ பிரசாத்
"மருகினவா ராஜண்ணா" யாத்ரா ஆம் ஆம் கே [5]
2021 "பலேகுண்டி பாலா" ஸ்ரீகரம் ஆம் இல்லை மிக்கி ஜே. மேயர்
"யெண்டுகோ ஈ மொஹமு" பிராண்டி டைரிஸ் இல்லை ஆம் பிரகாசு
"யே கொண்டா சாட்டுனா" மா ஊரி பொலிமேரா ஆம் இல்லை கியானி
2022 "மா கலாலா" விசாகப்பட்டண கேந்திரம் ஆம் ஆம் கார்த்திக் கொடகண்ட்லா [6]
"ஏமந்தி நபயா" லைக், ஷேர் & குழுசேர் ஆம் இல்லை பிரவீன் லக்கராஜு
2024 "நா நல்ல கலுவபுவ்வா" தெப்ப சமுத்திரம் ஆம் ஆம் பெத்தபள்ளி ரோஹித்
"அம்மா லாலோ ராம் பஜனை" ஆய் ஆம் இல்லை அஜய் அரசடா [7]
"படுகு கோரே" பொட்டல் ஆம் ஆம் சேகர் சந்திரா
2025 "டிக்கு திக்கு" ராசரிகம் ஆம் ஆம் வெங்கி
"நிப்புவி நீங்கி எகி" இல்லை ஆம்
"ஓகோ ரத்தம்மா" லைலா ஆம் ஆம் லியோன் ஜேம்ஸ் [8]
"மாதா வினாலி" ஹரி ஹர வீர மல்லு: பகுதி 1 இல்லை ஆம் மரகதமணி [9]

திரைப்படவியல்

[தொகு]

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தலைப்பு பங்கு அலைவரிசை
2024 ச ரி க ம பா அடுத்த பாடும் இளைஞர் ஐகான் வழிகாட்டி ஜீ தெலுங்கு

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
விருது ஆண்டு வகை பணி முடிவு மேற்.
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் 2022 சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் - தெலுங்கு "பலேகுண்டி பாலா" (ஸ்ரீகரத்திலிருந்து) பரிந்துரை [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Samataha, Jakkula (2021-03-09). "జానపద గాయకుడు పెంచల్ దాస్‌‌కు పవన్ సన్మానం". www.dishadaily.com (in தெலுங்கு). Archived from the original on 25 December 2022. Retrieved 2025-02-04.
  2. "మాస్టర్ పెంచలదాస్.. జానపదం 'దారి' చూపించింది!". Samayam Telugu (in தெலுங்கு). Retrieved 2025-02-04.
  3. "Krishnarjuna Yuddham: Nani's Dhaari Choodu is a party song". The Indian Express (in ஆங்கிலம்). 2018-01-17. Retrieved 2025-02-04.
  4. "Aravinda Sametha song Yeda Poyinado: This Jr NTR number will tug at your heartstrings". The Indian Express (in ஆங்கிலம்). 2018-09-26. Retrieved 2025-02-04.
  5. "Yatra Songs: 'మరుగైనావా రాజన్నా'.. పెంచల్ దాస్ పాటే కాదు రాత కూడా హృద్యమే!". Samayam Telugu (in தெலுங்கு). Retrieved 2025-02-04.
  6. "ఆకాశ వాణి విశాఖపట్టణ కేంద్రం.. ఆకట్టుకునేలా పెంచల్ దాస్ పాట". Samayam Telugu (in தெலுங்கு). Archived from the original on 2 April 2023. Retrieved 2025-02-04.
  7. Features, C. E. (2024-07-08). "New single 'Amma Lalo Ram Bhajana' from Aay out". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 24 July 2024. Retrieved 2025-02-04.
  8. Harsh, B. H. (2025-01-31). "'Oho Rathamma' from Laila out; Vishwak Sen, Akanksha Sharma bring their massy best to the catchy folk-fusion number". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-02-04.
  9. "Pawan Kalyan Delivers Heartfelt Lines In Telangana Dialect In The Folk Song 'Maata Vinali' From 'Hari Hara Veera Mallu'". Times Now (in ஆங்கிலம்). 2025-01-17. Retrieved 2025-02-04.
  10. "Allu Arjun's Pushpa: The Rise Leads SIIMA Nominations; Check Full List Here". News18 (in ஆங்கிலம்). 2022-08-17. Archived from the original on 4 November 2022. Retrieved 2022-08-17.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சல்_தாசு&oldid=4391767" இலிருந்து மீள்விக்கப்பட்டது