உள்ளடக்கத்துக்குச் செல்

பெசி கோல்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெசி கோல்மன்
பிறப்பு(1892-01-26)சனவரி 26, 1892
அட்லாண்டா, டெக்சசு, ஐக்கிய அமெரிக்கா
இறப்பு(1926-04-30)ஏப்ரல் 30, 1926 (வயது 34)
இசாக்சன்வில், புளோரிடா, U.S.
தேசியம்அமெரிக்கர்
பணிவானூர்தியாளர்
அறியப்படுவதுவலவன்

பெசி கோல்மேன் (ஜனவரி 26, 1892 – ஏப்ரல் 30, 1926) ஓர் அமெரிக்க படைத்துறை சாராத  வலவன்.  இவரே  வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்.[1][2]  மேலும்  இவரே  பன்னாட்டு  வானூர்தியாளர்  உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி.[3][4]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

கோல்மன் ஜனவரி 26, 1892, அன்று  டெக்சாசில் உள்ள அட்லாண்டா நகிரில் விவசாய குத்தகைதாரர் இச்சாயிற்கும் சூசன் கோல்மன்னுக்கும் பிறந்தார். இச்சார்ச் அமெரிக்க தொல் குடிகளில் ஒன்றான செரோக்கி  வழியானவர். சூசன்  ஆப்பிரிக்க  இனத்தவர்.[5][6]  கோல்மன்னுக்கு இரண்டு வயது இருந்தபோது இவர்கள் குடும்பம் டாலசு பெருநகர வட்டாரத்தின் தெற்கில் அமைந்துள்ள வாசாகாசி நகருக்கு  குடிபெயர்ந்தனர். 23 வயது வரை  அங்கேயே  வளர்ந்தார். அந்நகரத்திலேயே பள்ளிப்படிப்பை ஆறு வயதில் தொடங்கினார். இன முறையில் பிரிக்கப்பட்ட ஓர் அறை பள்ளிக்கு 4 மைல் நடந்தே சென்று படித்தார். ஒவ்வொரு ஆண்டும் பருத்தி அறுவடையில் குடும்பத்துக்கு உதவினார். 1901ஆம் ஆண்டு குடும்பத்தை விட்டு  பெசி கோல்மெனின் தந்தை இச்சியார்ச்  ஓக்லகோமா  மாநிலத்தில்  இள்ள மூதாதையர் இடத்திற்கு வாய்ப்புகளுக்காக சென்றார். 12ஆம் வயதில் பெசி மிசனரி நல பள்ளிக்கு படிப்பு உதவித் தொகை கிடைத்து அதை ஏற்றுக்கொண்டு அப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அக்கம் பக்கத்து வீட்டினரின் துணிகளைத் துவைத்து, இஸ்திரி செய்து தரும் வேலையைச் செய்தார். இதனால், ஓரளவு பணத்தை ஈட்ட முடிந்தது. 18 வயதில் ஓக்லகோமாவிலுள்ள கருப்பு இனத்தவருக்கான விவசாய  நார்மல் பல்கலைக்கழக்தில் சேர்ந்தார். தன் சேமிப்புக்கள் தீரும் வரை அங்கு படித்தார்.[7] பணத்தட்டுப்பாடு காரணமாக ஒரே ஆண்டில் படிப்பை கைவிட்டு, மீண்டும் துணி துவைக்கும் தொழிலுக்கே திரும்பினார். இந்தக் காலகட்டத்தில் இவருடைய அண்ணன் வால்டர், சிகாகோவில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். பெசி அங்குக் குடிபெயர்ந்தார். அங்குள்ள அழகு நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

வானூர்தி ஓட்டியாகுதல்

[தொகு]

இந்தக் காலகட்டத்தில் பெசி வானூர்தி ஓட்டியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். சிகாகோவில் கறுப்பர் இனத்தவருக்கென வார இதழை நடத்திவந்த ராபர்ட் அபோட் என்பவர் பெசி விமான ஓட்டிப் பயிற்சிப் பெறுவதற்காக பண உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். ஆனால் சிகாகோவில் விமான ஓட்டிகளில் கருப்பர் யாரும் இல்லாத நிலை இருந்தது. நிறவெறி காரணமாக வெள்ளையர்கள் யாரும் அவருக்கு விமான ஓட்ட பயிற்சி அளிக்க முன்வரவில்லை.

இதனால் ராபர்ட் அபோட் அவரை நிறவெறி நிலவாத பிரான்சுக்குச் சென்று விமானப் பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதையடுத்து பெசி 1920இல் பிரான்சுக்கு சென்றார். அங்கு விமானம் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டு அதற்கான உரிமத்தைப் பெற்றார். ஐரோப்பாவின் பல பகுதிகளில் விமான சாகசங்களைச் செய்தவர், 1922 ஆகத்தில் நியூயார்க்குக்கு வந்தார்.

அமெரிக்காவில் பலவித வானூர்தி சாகசங்கள் செய்து அதற்குக் கட்டணம் வசூலித்து பணம் சேர்த்தார். அதைக்கொண்டு 1923இல் சிறிய விமானத்தை விலைக்கு வாங்கினார். உலகின் பல பகுதிகளில் வானூர்தி சாகசங்களைச் செய்து அவற்றின் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டார் ஆனால், இதற்காக அவர் மேற்கொண்ட முதல் பயணத்திலேயே வானூர்தி நேர்ச்சி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட காயத்தால் மூன்று மாதங்கள் படுத்தபடுக்கையாக இருந்தார். பின்னர் சிகாகோவுக்குத் திரும்பி ஒன்றரை ஆண்டு ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கினார். அவர் செய்த வான் சாகச நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த பணத்தில் இன்னொரு சிறிய விமானத்தை வாங்கினார். ஒரு வானூர்தி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கவும் ஆசைப்பட்டார்.

இறப்பு

[தொகு]

வானூர்தி சாகசங்களைச் செய்ய 1926இல் முன்னேற்பாடாக ஆர்லாண்டோ பகுதிக்கு வானூர்தியில் சென்ற பெசி அங்கு ஏற்பட்ட வானூர்தி நேர்ச்சியினால் இறந்தார்.[8]

குறிப்புகள்

[தொகு]
  1. Bessie Coleman (1892 -1926).
  2. "Some Notable Women In Aviation History". Women in Aviation International. Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2008-04-10.
  3. "Pioneer Hall of Fame". Women in Aviation International. Archived from the original on 2008-03-27. பார்க்கப்பட்ட நாள் 2008-04-10.
  4. Bessie Coleman - Check123, Video Encyclopedia (in ஆங்கிலம்), archived from the original on 2017-02-02, பார்க்கப்பட்ட நாள் 2017-01-26 {{citation}}: More than one of |accessdate= and |access-date= specified (help)
  5. David H. Onkst (2016). "Women in History: Bessie Coleman". Natural Resources Conservation Service Nevada. Archived from the original on 2016-02-16. பார்க்கப்பட்ட நாள் 2016-01-05.
  6. "Texas Roots". BessieColeman.com. Atlanta Historical Museum. 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-22.
  7. வார்ப்புரு:Cite ஈeb
  8. அருண் சரண்யா (27 சனவரி 2019). "பக்கத்து வீடு: விடாமுயற்சியின் மறுபெயர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசி_கோல்மன்&oldid=3618141" இலிருந்து மீள்விக்கப்பட்டது