பெசரட்டு
பெசரட்டு | |
பரிமாறப்படும் வெப்பநிலை | காலையுணவு, நொறுக்குத்தீனி |
---|---|
தொடங்கிய இடம் | ஆந்திராவின் சமவெளிப் பகுதிகள், தென்னிந்தியா |
பகுதி | ஆந்திரப் பிரதேசம் |
முக்கிய சேர்பொருட்கள் | பாசிப் பயறு |
பெசரட்டு (Pesarattu) என்பது ஒரு கிரீப் போன்ற ரொட்டி ஆகும். இது இந்தியாவின் ஆந்திராவில் தோன்றியது. இது பலவிதமான தோசை வகையாகும். இந்த தோசையானது பாசிப்பயிறின் மாவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு வழக்கமான தோசையைப் போல் உளுந்து மாவு சேர்ப்பதில்லை.[1] ஆந்திரப் பிரதேசத்தில் பெசரட்டு காலை உணவாகவும் சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகிறது . இது பொதுவாக இஞ்சி சட்னி அல்லது புளி சட்னியுடன் பரிமாறப்படுகிறது. சட்னியில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வெங்காயம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
உப்புமா பெசரட்டு
[தொகு]உப்புமா நிரப்பப்பட்ட பெசரட்டு உப்புமா பெசரட்டு என்று அழைக்கப்படுகிறது. இது ஆந்திரப் பிரதேச மக்களின் பிடித்த உணவாகும். கடற்கரை ஆந்திரா, குறிப்பாக மேற்கு கோதாவரி மாவட்டம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கிருஷ்ணா மாவட்டம், குண்டூர் மாவட்டம், குண்டூர், விஜயவாடா நகரங்கள், விசாகப்பட்டினம் மாவட்டத்தின் பிளானாடு பகுதிகளில் உப்புமா பெசரட்டு மிகவும் பிடித்தமானது.
வகைகள்
[தொகு]மூங் டால் கா சீலா அல்லது பெசன் கா சீலா போன்ற வட இந்திய உணவு வகைகளில் இதே போன்ற உணவு வகைகள் காணப்படுகின்றன. இராஜஸ்தானில்அவை பொதுவாக சீல்டோ என்று அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chennai, Padhu Sankar in (2014-10-23). "Real street food - No 2: Pesarattu from Chennai". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.