பெங்செங்கைட்டு
பெங்செங்கைட்டு Fengchengite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | வளையசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | Na12[ ]3(Ca,Sr)6Fe33+Zr3Si(Si25O73)(H2O,OH)3(OH,Cl)2 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முக்கோணம் |
மேற்கோள்கள் | [1][2] |
பெங்செங்கைட்டு (Fengchengite) என்பது Na12[ ]3(Ca,Sr)6Fe33+Zr3Si(Si25O73)(H2O,OH)3(OH,Cl)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமமாகும்.[2][1] இக்கனிமம் யூடியலைட் குழுவைச் சேர்ந்ததாகும்.[1] வளைய சிலிக்கேட்டு குழுக்களின் இருப்பைக் காட்டாததால் இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. குழுவின் மற்ற தாதுக்களுடன் ஒப்பிடும் போது, இக்ரானைட்டு, மோகோவிதைட்டு, பெக்லிச்செவிட்டு போல பெங்செங்கைட்டு பெரிக் இரும்பு முன்னிலையில் அத்தியாவசியமானதும் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் இணைதிறன்களும் கொண்டதாகவும் வகைப்படுத்தப்படுகிறது.[1] சீனாவில் பெங்செங் நகருக்கு அருகில் உள்ள சைமா வளாகத்தில் இந்த கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது - எனவே கனிமத்திற்கு பெங்செங்கைட்டு என்று பெயரிடப்பட்டது.[1][2]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெங்செங்கைட்டு கனிமத்தை Fcg[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Mindat, Fengchengite, http://www.mindat.org/min-42378.html
- ↑ 2.0 2.1 2.2 Shen, G., Xu, J., Yao, P., and Li, G., 2011. Fengchengite, IMA 2007-018a. CNMNC Newsletter No. 11, December 2011, 2892; Mineralogical Magazine 75, 2887-2893
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
மேலும் படிக்க
[தொகு]- Johnsen, O., Ferraris, G., Gault, R.A., Grice, D.G., Kampf, A.R., and Pekov, I.V., 2003. The nomenclature of eudialyte-group minerals. The Canadian Mineralogist 41, 785-794