பெங்கூலு மாநகரம்
பெங்கூலு மாநகரம்
City of Bengkulu Kota Bengkulu ꤷꥍꤲ꥓ꤰꥈꤾꥈ | |
---|---|
ஆள்கூறுகள்: 3°47′44″S 102°15′33″E / 3.79556°S 102.25917°E | |
நாடு | ![]() |
பகுதி | சுமாத்திரா |
மாநிலம் | ![]() |
நிறுவல் | 18 மார்ச் 1719 |
பரப்பளவு | |
• மொத்தம் | 151.70 km2 (58.57 sq mi) |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2023) | |
• மொத்தம் | 3,91,117 |
• அடர்த்தி | 2,600/km2 (6,700/sq mi) |
[1] | |
மக்கள்தொகை | |
• இனக்குழுக்கள் | ரெஜாங்கியர் மலாய் மக்கள் செரவாய் ஜாவானியர் பத்தாக் மக்கள் மினாங்கபாவு மக்கள் சீனர் |
• சமயம்[2] | இசுலாம் 95.43% கிறிஸ்தவம் 2.96% கத்தோலிக்க திருச்சபை 0.81% பௌத்தம் 0.35% இந்து சமயம் 0.06% கன்பூசியம் 0.01% பிறர் 0.00% |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +7 |
தொலைபேசி | (+62) 736 |
இணையதளம் | www |
பெங்கூலு மாநகரம் (ஆங்கிலம்: City of Bengkulu; இந்தோனேசியம்: Kota Bengkulu) என்பது இந்தோனேசியாவின் பெங்கூலு மாநிலத்தின் தலைநகரமாகும். சுமாத்திரா தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பாடாங் நகரத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. இந்திரபுரா இராச்சியம் (Inderapura) மற்றும் பான்டென் சுல்தானகம் (Sultanate of Banten) ஆகிய இராச்சியங்களின் செல்வாக்கின் கீழ் இருந்தது.
1939 - 1942 காலகட்டத்தில் சுகார்னோ இங்கு நாடு கடத்தப்பட்டு இந்த நகரத்தில் தங்க வைக்கப்பட்டார். 151.70 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ள இந்த நகரம், 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[3] 308,544 மக்கள்தொகையையும்; 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 373,591 மக்களையும் கொண்டிருந்தது;[4] 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 391,117 (197,489 ஆண்கள் மற்றும் 193,628 பெண்கள் உட்பட) ஆகும்.[1] இந்த நகரம் பெங்கூலு மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகக் கருதப்படுகிறது.
வரலாறு
[தொகு]பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1685-ஆம் ஆண்டில் பெங்கூலுவை ( ஆங்கிலேயர்களால் பென்கூலன் என்று பெயரிடப்பட்டது) இந்தப் பிராந்தியத்திற்கான புதிய வணிக மையமாக நிறுவியது. 17-ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தெற்கு சுமாத்திராவின் லாம்புங் பகுதியில் மசாலா வணிகத்தை அண்டை தீவான ஜாவாவின் வடமேற்கில் உள்ள பண்டெனில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து நடத்தி வந்தது.
1682 இல், இடச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு படை, பண்டெனைத் தாக்கியது. உள்ளூர் இளவரசர் இடச்சுக்காரர்களிடம் சரணைடந்தார். பின்னர் அவர் சுல்தான் என்று அங்கீகரிக்கப்பட்டார். இடச்சுக்காரர்கள் பண்டெனில் இருந்த மற்ற ஐரோப்பியர்கள் அனைவரையும் வெளியேற்றினர். மேலும் ஆங்கிலேயர்கள் பெங்கூலுவை நிறுவவும் வழிவகுத்தனர். 1714-ஆம் ஆண்டில், பிரித்தானியர்கள் பெங்கூலுவில் மார்ல்பரோ கோட்டையைக் (Fort Marlborough) கட்டினர்.
இங்கு மிளகு கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட சிரமம் மற்றும் அதன் தொலைவு காரணமாக, வர்த்தக மையம் அமைக்க, ஒருபோதும் நிதி ரீதியாக சாத்தியமில்லாமல் இருந்தது. இந்தச் சிரமங்கள் இருந்தபோதிலும், பிரித்தானியர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அங்கு இருந்தார்கள். மலாக்காவில் தங்கள் கவனத்தைச் செலுத்துவதற்காக 1824 ஆங்கிலோ-இடச்சு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இடச்சுக்காரர்களிடம் பெங்கூலுவை இடச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தனர்.
தூர கிழக்கிற்கான முதல் அமெரிக்க தூதர் எட்மண்ட் ராபர்ட்ஸ் 1832 இல் பெங்கூலுவுக்கு வருகை புரிந்தார்.[5] இன்றைய இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளைப் போலவே, பெங்கூலு இரண்டாம் உலகப் போர் வரை இடச்சு காலனியாகவே இருந்தது.
சுகார்னோ (பின்னர் இந்தோனேசியாவின் முதல் அதிபர்) இடச்சுக்காரர்களால் 1930 களில் பெங்கூலுவில் சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு அவர், ஒரு குறுகிய காலம் வரை இருந்தார். சுகார்னோ தனது வருங்கால மனைவி பத்மாவதியை (Fatmawati) பெங்கூலுவில் இருந்த காலத்தில் சந்தித்தார்.
நிலவியல்
[தொகு]பெங்கூலு நகரம் உயரம் குறைவான பகுதியாகும். மற்றும் சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ளது . 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மலேரியா மற்றும் தொடர்புடைய நோய்கள் இங்கு அதிகம் காணப்பட்டன.[6] பெங்கூலு நகரம் சுந்தா வளையத்திற்கு (Sunda Fault) அருகே அமைந்துள்ளது; அதனால் நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகளுக்கு ஆளாகிறது.
2000 சூன் மாதம் நிகழ்ந்த எங்கானோ நிலநடுக்கத்தில் (2000 Enggano earthquake) குறைந்தது 100 பேர்ர் இறந்தனர். சமீபத்திய அறிக்கை பெங்கூலு நகரம் "சுமாத்திரா கடற்கரையில் கணிக்கப்பட்ட கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பங்களிலிருந்து அடுத்த சில தசாப்தங்களில் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது" எனக் கூறுகிறது.[7] செப்டம்பர் 2007 இல் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் பெங்கூலுவைத் தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.[8]
பெங்கூலு நகரத்தின் பரப்பளவு 144.52 கிமீ ²ஆகும். இது, சுமாத்திரா தீவின் மேற்கு கடற்கரையில் 525 கி.மீ. தூரம் கொண்ட கடற்கரையுடன் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் பகுதி புக்கிட் பாரிசான் மலைகளுக்கு இணையாகவும், இந்தியப் பெருங்கடலுடன் நேருக்கு நேர் அமைந்துள்ளது.
புள்ளி விவரங்கள்
[தொகு]1832 ஆம் ஆண்டு நிலவரப்படி, பெங்கூலு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்த்து 18,000 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், இப்பகுதியில் மாறுபட்ட மக்கள் இருந்திருக்கின்றனர்: டச்சு, சீன, ஜாவானியர், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினர். சைனா டவுன் நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது.[6]
பொருளாதாரம்
[தொகு]இடச்சு ஆட்சியின் கீழ், பெங்கூலுவில் பெருந்தோட்டங்கள் இருந்தன. பார்சி மக்கள் சாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி ஆகியவற்றை அறுவடை செய்து பதப்படுத்தினர். சாதிக்காய் மிட்டாய் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும்.
மிளகு ஒரு பெரிய ஏற்றுமதியாகவும் இருந்தது. சிறிய அளவிலான காபி பயிரிடப்பட்டது, எனினும் மற்றும் அரிசியும் காபியும் பாடாங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பழம் மற்றும் விலங்கு உற்பத்தியும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.[6]
காட்சியகம்
[தொகு]- பெங்கூலு மாநகரக் காட்சிப் படங்கள்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Kota Bengkulu Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.1771)
- ↑ "Penduduk Menurut Wilayah dan Agama yang Dianut: Provinsi Bengkulu" [Population by Region and Religion Followed: Bengkulu Province]. Badan Pusat Statistik Republik Indonesia (in Indonesian). Archived from the original on 25 December 2021. Retrieved 25 December 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ Roberts, Edmund (1837). Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat. New York: Harper & Brothers. p. 34.
- ↑ 6.0 6.1 6.2 Roberts, Edmund (1837). Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat. New York: Harper & Brothers. pp. 38–40.
- ↑ Andrew C. Revkin. "Indonesian Cities Lie in Shadow Of Cyclical Tsunami".
- ↑ New York Times
சான்றுகள்
[தொகு]- Ricklefs, M. C., A History of Modern Indonesia since c. 1300 (2de édition), 1993
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் பெங்கூலு மாநகரம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பெங்கூலு மாநகரம்