பெங்கூலு
பெங்கூலு | |
---|---|
Province of Bengkulu Provinsi Bengkulu | |
பெங்கூலு மாநகரம் | |
அடைபெயர்(கள்): பூமி ராபிள்சியா (Bumi Rafflesia) (Land of Rafflesia) | |
ஆள்கூறுகள்: 3°48′S 102°15′E / 3.800°S 102.250°E | |
பகுதி | சுமாத்திரா |
மாநிலம் | பெங்கூலு மாநிலம் |
தலைநகரம் | பெங்கூலு |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,130.21 km2 (7,772.32 sq mi) |
உயர் புள்ளி | 2,852 m (9,357 ft) |
மக்கள்தொகை (2023) | |
• மொத்தம் | 20,86,006 |
• அடர்த்தி | 100/km2 (270/sq mi) |
[1] | |
மக்கள் தொகை | |
• இனக்குழுக்கள் | 60% ரெஜாங்கியர் 22% ஜாவானியர் 18% லெம்பாக் 5% சீனர் 4.4% பசேமா 4.3% மினாங்கபாவு மக்கள் 8.6 வேறு[2] |
• சமயம் | 95% இசுலாம் 4% கிறிஸ்தவம் 1% வேறு |
• மொழிகள் | இந்தோனேசியம் ரெஜாங் மொழி, சாவகம் (மொழி), செரவாய் மொழி, லெம்பாக் மொழி |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +7 |
HDI (2024) | ![]() |
இணையதளம் | bengkuluprov |
பெங்கூலு அல்லது பென்கூலன்; (ஆங்கிலம்: Bengkulu; Province of Bengkulu; இந்தோனேசியம்: Bengkulu; Provinsi Bengkulu) என்பது இந்தோனேசியா, சுமாத்திரா தீவில் ஒரு மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தின் தலைநகரம் பெங்கூலு மாநகரம். வரலாற்று ரீதியாக பென்கூலன் என்று அழைக்கப்படுகிறது. இது சுமாத்திராவின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
இந்த மாநிலம், வடக்கில் மேற்கு சுமாத்திரா, வடகிழக்கில் ஜாம்பி மாநிலம், தென்கிழக்கில் லாம்புங், கிழக்கில் தெற்கு சுமாத்திரா மாகாணம், வடமேற்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கில் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பெங்குலு மாநிலம் பரப்பளவில் 28-ஆவது பெரிய மாநிலமாகும்; இது ஒன்பது ஆட்சிப் பகுதிகளாகவும், தலைநகரமும் ஒரே தன்னாட்சி நகரமுமான பெங்குலு மாநகரமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பெங்குலு மாநிலம், இந்தோனேசியாவின் மக்கள்தொகை அடிப்படையில் 26-ஆவது பெரிய மாநிலமாகும். 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,715,518 மக்களும்[4]; 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,010,670 மக்களும் வசித்தனர்;[5]] 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 2,086,006 (1,065,992 ஆண்கள் மற்றும் 1,020,014 பெண்கள்) ஆகும்.[1]
இந்தியப் பெருங்கடலில் உள்ள மெகா தீவு; மற்றும் எங்கானோ தீவு (Enggano Island) ஆகியவை பெங்குலு மாநிலத்தில் அடங்கும். இதன் மேற்குப் பகுதி, இந்தியப் பெருங்கடலில் 525 கிமீ. கடற்கரையைக் கொண்டுள்ளது.
பெங்குலுவில் நிலக்கரி மற்றும் தங்கம் போன்ற பல இயற்கை வளங்கள் உள்ளன. மேலும் பெரிய அளவில் சாத்தியமான புவிவெப்ப வளங்களும் உள்ளன.[6][7] இருப்பினும், இந்த மாநிலம் சுமாத்திராவின் பிற மாநிலங்களை விட குறைவாகவே வளர்ச்சி அடைந்துள்ளது.
பொது
[தொகு]ஒரு காலத்தில் பெங்கூலு மாநிலத்தின் பாடாங் சிபுசுக் (Padang Sibusuk) பகுதியை தருமசிராயா பேரரசு ஆட்சி செய்து உள்ளது. அதே இடத்தில், மயாபாகித்து பேரரசுக்கும் பகாருயோங் இராச்சியத்திற்கும் இடையில் ஒரு பெரிய போரும் நடந்துள்ளது. ஐரோப்பிய குடியேற்றவிய காலத்தில், இந்தப் பகுதி பென்கூலன் அல்லது பிரித்தானிய பென்கூலன் என்று அழைக்கப்பட்டது.[8][9]
வரலாறு
[தொகு]



8-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதி பௌத்த மத சிறீ விஜயப் பேரரசின் கீழ் இருந்தது. சிறீ விஜயத்தைத் தொடர்ந்து சைலேந்திர இராச்சியம் மற்றும் சிங்காசாரி இராச்சியம் ஆட்சிக்கு வந்தன. ஆனால் அவை பெங்குலுவில் தங்கள் செல்வாக்கை எந்த அளவிற்கு நிலைநிறுத்தின என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெங்குலுவில் மஜபாகித் அரசும் சிறிய அளவிலான செல்வாக்கைக் கொண்டிருந்தது.[10]
இந்த மாநிலம், 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், [10] மேற்கு ஜாவா பான்டென் சுல்தானகத்தின் (Banten Sultanate) ஓர் அடிமைப் பகுதியாக மாறியது;[10] மேலும் 17- ஆம் நூற்றாண்டிலிருந்து மினாங்கபாவு இந்திரபுரா சுல்தானகத்தால் ஆளப்பட்டது.
மார்ல்பரோ கோட்டை
[தொகு]இந்தப் பகுதிக்கு முதன்முதலில் வருகை தந்த ஐரோப்பியர்; போர்த்துகீசியர்கள் ஆவார்கள். அதைத் தொடர்ந்து 1596-இல் இடச்சுக்காரர்கள் வந்தனர். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1685-இல் பெங்கூலுவில் (பென்கூலன்) ஒரு மிளகு வர்த்தக மையத்தையும் காவற்படையையும் நிறுவியது.[11] 1714-இல் பிரித்தானியர் மார்ல்பரோ கோட்டையைக் (Fort Marlboroug) கட்டினார்கள். அந்தக் கோட்டை இன்னும் உள்ளது.[12]
அந்த மிளகுப் பொருட்கள், பென்கூலனுக்கு கிழக்கிந்திய நிறுவனத்தின் பாய்மரக் கப்பல்கள் மூலமாக அனுப்பப்பட்டன. இந்தப் போக்குவரத்து அமைப்பைப் பராமரிக்க அதிக செலவு பிடித்தது. பிரித்தானிய பென்கூலன், வருமானப் பற்றாக்குறையை எதிர்நோக்கியதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.[13][14]
முதலில் பிரித்தானிய பென்கூலன்; பிரித்தானிய இந்தியாவில் ஒரு ஆட்சிப் பகுதியாக (Presidency) இருந்தது. 1785-இல், அதே பிரித்தானிய பென்கூலன்; பென்கூலன் குறுமாநிலம் (Bencoolen Residency) என்று தரமிறக்கப்பட்டது; மற்றும் வங்காள மாநில நிர்வாகத்தின் (Bengal Presidency) கீழ் வைக்கப்பட்டது.[15]
இசுடாம்போர்டு இராபிள்சு
[தொகு]அக்டோபர் 1817-இல், இசுடாம்போர்டு இராஃபிள்சு பென்கூலனின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் துணை ஆளுநராக இருந்த காலத்தில், "நான் இதுவரை கண்டிராத மிகவும் கேவலமான இடம்" என்று அறிவித்தார்.[16] அவர் துணை ஆளுநராகப் பொறுப்பு ஏற்ற பின்னர், பென்கூலன் பகுதியில் வழக்கத்தில் இருந்த அடிமைத்தனத்தை அழித்தார். அதன் பின்னர் சிங்கப்பூரை நிறுவினார்.
1823-ஆம் ஆண்டில், பென்கூலன் கட்டுப்பாட்டில் இருந்து சிங்கப்பூர் அகற்றப்பட்டது.[17] 1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தத்தில் பிரித்தானியர் பென்கூலனை நெதர்லாந்திற்கு விட்டுக்கொடுத்தனர்.[18]
புவியியல்
[தொகு]பெங்கூலு மாந்லத்தின் மொத்த பரப்பளவு 20,130.21 கிமீ2 ஆகும். நிர்வாக நோக்கங்களுக்காக, இந்த மாநிலம் ஒன்பது ஆட்சிப் பகுதிகளாகவும்; ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து 93 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[19]
காலநிலை
[தொகு]பெங்கூலுவின் காலநிலை வெப்பமண்டல காலநிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெங்கூலுவில் ஆண்டு முழுவதும்; மிகவும் வறண்ட மாதத்திலும் கூட அதிக அளவு மழைப்பொழிவு உள்ளது. இங்குள்ள காலநிலை கோப்பன்-கீகர் அமைப்பின்படி Af என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு சராசரி வெப்பநிலை 26.8 °C ஆகும்; சராசரி ஆண்டு மழைப்பொழிவு 3360 மிமீ ஆகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், பெங்கூலு (பத்மாவதி சுகார்னோ வானூர்தி நிலையம், 1991–2020) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33.7 (92.7) |
35.2 (95.4) |
34.4 (93.9) |
34.8 (94.6) |
35.4 (95.7) |
34.9 (94.8) |
35.0 (95) |
33.9 (93) |
34.0 (93.2) |
33.9 (93) |
33.8 (92.8) |
34.0 (93.2) |
35.4 (95.7) |
உயர் சராசரி °C (°F) | 31.0 (87.8) |
31.3 (88.3) |
31.5 (88.7) |
31.5 (88.7) |
31.8 (89.2) |
31.6 (88.9) |
31.3 (88.3) |
31.2 (88.2) |
31.2 (88.2) |
31.1 (88) |
30.9 (87.6) |
30.6 (87.1) |
31.2 (88.2) |
தினசரி சராசரி °C (°F) | 25.6 (78.1) |
25.8 (78.4) |
26.0 (78.8) |
26.3 (79.3) |
26.3 (79.3) |
26.0 (78.8) |
25.6 (78.1) |
25.5 (77.9) |
25.6 (78.1) |
25.6 (78.1) |
25.6 (78.1) |
25.4 (77.7) |
25.8 (78.4) |
தாழ் சராசரி °C (°F) | 22.3 (72.1) |
22.3 (72.1) |
22.3 (72.1) |
22.5 (72.5) |
22.5 (72.5) |
22.3 (72.1) |
22.0 (71.6) |
22.0 (71.6) |
22.1 (71.8) |
22.3 (72.1) |
22.3 (72.1) |
22.3 (72.1) |
22.3 (72.1) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 20.5 (68.9) |
20.2 (68.4) |
20.4 (68.7) |
20.5 (68.9) |
20.3 (68.5) |
20.5 (68.9) |
19.8 (67.6) |
19.5 (67.1) |
18.1 (64.6) |
20.5 (68.9) |
20.3 (68.5) |
20.8 (69.4) |
18.1 (64.6) |
பொழிவு mm (inches) | 287.9 (11.335) |
222.8 (8.772) |
259.5 (10.217) |
241.1 (9.492) |
171.7 (6.76) |
133.9 (5.272) |
146.8 (5.78) |
155.4 (6.118) |
147.8 (5.819) |
210.7 (8.295) |
328.8 (12.945) |
359.9 (14.169) |
2,666.3 (104.972) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 16.5 | 13.7 | 15.4 | 13.9 | 10.7 | 9.2 | 8.6 | 9.1 | 9.3 | 13.1 | 17.0 | 19.3 | 155.8 |
சூரியஒளி நேரம் | 127.0 | 133.9 | 153.8 | 163.8 | 179.7 | 175.7 | 182.9 | 185.3 | 155.0 | 136.7 | 120.3 | 111.4 | 1,825.5 |
ஆதாரம்: உலக வானிலையியல் அமைப்பு[20] |
பொருளாதாரம்
[தொகு]இந்த மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள மூன்று நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் ஆண்டுக்கு 200,000 முதல் 400,000 டன் வரை நிலக்கரியை உற்பத்தி செய்கின்றன. அந்த நிலக்கரி, மலேசியா, சிங்கப்பூர், தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மீன்பிடித்தல், குறிப்பாக சூரைமீன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் பிடிப்பது, ஒரு முக்கியமான செயலாகும். இந்த மாநிலத்தால் ஏற்றுமதி செய்யப்படும் வேளாண்மைப் பொருட்களில் இஞ்சி, மூங்கில் தளிர்கள் மற்றும் ரப்பர் ஆகியவை அடங்கும்.
காட்சியகம்
[தொகு]- பெங்கூலு காட்சிப் படங்கள்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Bengkulu Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.17)
- ↑ Bengkulu Lumbung Nasionalis yang Cair. February 11, 2009.
- ↑ "Indeks Pembangunan Manusia 2024" (in இந்தோனேஷியன்). Statistics Indonesia. 2024. Retrieved 15 November 2024.
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ EJOLT. "Bengkulu Coal-fired Power Plant, Indonesia | EJAtlas". Environmental Justice Atlas (in ஆங்கிலம்). Retrieved 2023-04-26.
- ↑ Sari, Meri Maya (2017-04-21). "Kajian Efektivitas Pelaksanaan Amdal Bidang Energi Dan Sumber Daya Mineral Dalam Pelestarian Kawasan Lindung di Kabupaten Bengkulu Tengah". Jurnal Pengelolaan Sumberdaya Alam Dan Lingkungan (Journal of Natural Resources and Environmental Management) 7 (1): 61–71. doi:10.29244/jpsl.7.1.61-71. பன்னாட்டுத் தர தொடர் எண்:2086-4639. https://journal.ipb.ac.id/index.php/jpsl/article/view/13803.
- ↑ "A History on the Honourable East India Company's Garrison on the West Coast of Sumatra 1685–1825". Retrieved May 10, 2016.
- ↑ "Bencoolen (Bengkulen)". Retrieved May 10, 2016.
- ↑ 10.0 10.1 Schellinger, Paul; Salkin, Robert, eds. (1996). International Dictionary of Historic Places, Volume 5: Asia and Oceania. Chicago: Fitzroy Dearborn Publishers. p. 113. ISBN 1-884964-04-4.
- ↑ "Bencoolen, Fort Marlborough of the East India Company". wftw.nl. Retrieved 2023-04-26.
- ↑ John Keay, The Honourable Company - A History of the English East India Company, Macmillan Publishing Company, New York, 1994 (1991) p. 248.
- ↑ D. K. Bassett, "British Trade and Policy in Indonesia 1760–1772", Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde, Deel 120, 2de Afl. (1964), p. 199.
- ↑ F. C. Danvers, "The English Connection with Sumatra", in The Asiatic Quarterly Review, vol I, January–April 1886, p. 421-424.
- ↑ Bencoolen (Benkulen)
- ↑ John Keay, p. 447.
- ↑ Kevin YL Tan. The Singapore Legal System.
- ↑ Roberts, Edmund (1837). Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat. New York: Harper & Brothers. p. 34.
- ↑ "SEKILAS BENGKULU". PEMERINTAH PROVINSI BENGKULU (in இந்தோனேஷியன்). Retrieved 2023-04-26.
- ↑ "World Meteorological Organization Climate Normals for 1991–2020". World Meteorological Organization. Retrieved 19 October 2023.
சான்றுகள்
[தொகு]- Reid, Anthony (ed.). 1995. Witnesses to Sumatra: A traveller's anthology. Kuala Lumpur: Oxford University Press. pp. 125–133.
- Reprints of British-era primary source material
- Wilkinson, R.J. 1938. Bencoolen. Journal of the Malayan Branch Royal Asiatic Society. 16(1): 127–133.
- Overview of the British experience in Bencoolen
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் பெங்கூலு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.