பெங்கித் சுட்டிராங்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெங்கித் சுட்டிராம்கிரன்
Bengt Strömgren NYWTS.jpg
பெங்கித் சுட்டிராம்கிரன், 1957
பிறப்புசனவரி 21, 1908(1908-01-21)
கோத்தென்பர்கு, சுவீடன்
இறப்பு4 சூலை 1987(1987-07-04) (அகவை 78)
கோப்பெனேகன், டென்மார்க்
தேசியம்டேனிழ்சியர்
துறைஇயற்பியல், கணிதவியல், வானியல்
பணியிடங்கள்சிகாகோ பல்கலைக்கழகம், யெர்கேசு, மெக்டொனால்டு வான்காணகம், உயராய்வு நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்கோப்பெனேகன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசுட்டிராம்கிரன் கோளங்கள், சுட்டிராம்கிரன் ஒளியளவியல் அமைப்பு, உடுக்கண வேதியியல்
தாக்கம் 
செலுத்தியோர்
எலிசு சுட்டிராம்கிரன், நீல்சு போர், ஆட்டோ சுத்ரூவ
விருதுகள்புரூசு பதக்கம் (1959)
கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (1969)

பெங்கித் ஜார்ஜ் டேனியல் சுட்டிராம்கிரன் (Bengt Georg Daniel Strömgren) (21 ஜனவரி 1908 – 4 ஜூலை 1987) ஒரு டேனிழ்சிய வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார்.[1]

பெங்கித் சுட்டிராம்கிரன் கோத்தென்பர்கில் பிறந்தார். இவரது பெற்றோர் எட்விக் சுட்டிராம்கிரனும் எலிசு சுட்டிராம்கிரனும் ஆவர். எலிசு சுட்டிராம்கிரன் கோப்பெனேகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். இவர் கோப்பெனேகன் பலகலைக்கழக வான்காணக இயக்குநராகவும் விளங்கினார். பெங்கித் அறிவியலாளர்களும் நோக்கீட்டாளர்களும் அவர்களது விருந்தினர்களும் புடைசூழ இருந்த பேராசிரியர் மாளிகையில் அறிவியல் சூழலில் வளர்ந்தார். இவர் தன் 14 ஆம் அகவையிலேயே ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதி வெளியிட்டார். இவர் 1925 இல் தன் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து கோப்பெனேகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டாண்டுகளிலேயே இவர் வானியலிலும் வானியற்பியலிலும் பட்டம் பெற்றார். அடுத்த இரண்டாண்டுகளில் முனைவர் பட்டமும் பெற்றார். இவரது ஆய்வு 1929 இல் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றது. அப்போது இவரது அகவை 21.

தகைமைகள்[தொகு]

விருதுகள்

இவரது பெயரால் வழங்குபவை

மேற்கோள்கள்[தொகு]

தகவல் வாயில்கள்[தொகு]

  • Svend Cedergreen Bech (ed.): Dansk Biografisk Leksikon (1979-84), 3rd ed. Put on-line by Den Store Danske in 2011. (டேனிய மொழியில்)
  • Bengt Strömgrens life among the stars, Niels Bohr Institute
  • Bruce Medalist Bengt Strömgren
  • Autobiography in a celebrative commemorative published by University of Copenhagen November 1930 (176-78) (Berlingske Tidende id. 17.9.1962). (டேனிய மொழியில்)
  • Knude, Jens, Bengt Stromgren's Work in Photometry, in A.G.D. Philip, A.R. Upgren and K.A. Janes, eds., "Precision Photometry: Astrophysics of the Galaxy", Proceedings of the conference held 3-4 October 1990 at Union College, Schenectady, NY (Davis Press, Schenectady, NY, 1991).
  • Rebsdorf, Simon Olling (May 2003): Bengt Strömgren: growing up with astronomy, 1908 - 1932, Journal for the History of Astronomy (ISSN 0021-8286), Vol. 34, Part 2, No. 115, pp. 171 - 199 (2003)
  • Rebsdorf, Simon Olling (August 2004): The Father, the Son, and the Stars: Bengt Strömgren and the History of Twentieth Century Astronomy in Denmark and in the USA. Ph.D. dissertation, University of Aarhus.
  • Rebsdorf, Simon Olling (February 2007): Bengt Strömgren: Interstellar Glow, Helium Content, and Solar Life Supply, 1932–1940. Centaurus, Vol. 49, Issue 1, pages 56–79.
  • Gustafsson, Bengt (2009): Bengt Strömgren’s Approach to the Galaxy, in J. Andersen, J. Bland-Hawthorn & B. Nordström, eds., "The Galaxy Disk in Cosmological Context." Proceedings IAU Symposium No. 254 (Cambridge Univ. Press, 2009), pp. 3-16.

வெளி இணைப்புகள்[தொகு]