பெங்கித் எட்லேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்கித் எட்லேன்
பிறப்பு2 நவம்பர் 1906
Gusum
இறப்பு10 பெப்பிரவரி 1993 (அகவை 86)
லுண்ட்
படித்த இடங்கள்உப்சாலா பல்கலைக்கழகம்
பணிஇயற்பியலறிஞர், வானியல் வல்லுநர், வானியற்பியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
விருதுகள்Howard N. Potts Medal, C.E.K. Mees Medal
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
சுவீடன் மன்னர் கசுதாஃப் அடோல்புடன் பெங்கித் எட்லேன் (வலப்புறம்).
பெங்கித் எடிலேனின் கல்லறை

பெங்கித் எட்லேன் (Bengt Edlén, 2 நவம்பர் 1906 – 10 பிப்ரவரி 1993) ஓர் இசுவீடிய இயற்பியல் பேராசிரியரும், வானியலாளரும் ஆவார். இவர் நிறமாலையியலில் வல்லுனர். இவர் சூரிய ஒளிமுகட்டுப் புதிருக்கான தீர்வைக் கண்டார். சூரியனின் நிறமாலைகள் கரோனியம் என்ற இனந்தெரியாத வேதித்தனிமத்தில் இருந்து வருவதாக முன்பு கருதியதை மறுத்து அவை பன்மடி இரும்பு மின்னணுக்களால் (Fe-XIV) உருவாகின்றன எனத் தெளிவுபடுத்தினார். இது உடனே ஏற்கப்படவில்லை. ஏனெனில் இம்மின்னணுக்கள் உருவாகப் பல மில்லியன் பாகைகள் வெப்பநிலை தேவைப்பட்டதாலேயே எனலாம். பின்னர் அவ்வளவிலான சூரிய ஒளிமுகட்டு வெப்பநிலைகள் நிலவல் நிறுவப்பட்டது.

இவர் தென்கிழக்கு சுவீடனில் உள்ள ஆசுத்தர்காட்லாந்து சார்ந்த கூசமில் பிறந்தார். நோர்க்கோப்பிங் உயர்நிலைப்பள்ளியில் 1926 இல் கல்விபைஇல, சுவீடன் உப்சாலா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1934இல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1936 இல் இயற்பியல் துணைப்பேராசிரியராக பணியில் சேர்ந்து, 1944 முதல் 1973 வரை உலண்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் 1947இல் சுவீடிய அரசு அறிவியற் புலங்களின் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[1]

எட்லேன் உல்ஃப்-இரேயத் விண்மீன்களின் கதிர்நிரலைப் பகுப்பாய்வு செய்து சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.[2][3]

விருதுகள்[தொகு]

பெங்கித் எட்லேன் 1945இல் சூரிய ஒளிமுகட்டு புதிர்த் தீர்வுக்காக சுவீடிய அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார்.[4] இவர் 1946இல் அப்பாலைப் புற ஊதாக்கதிர் ஆய்வுகளுக்காக ஓவார்டு என். போட்சு பதக்கத்தைப் பெற்றார்.[5] மேலும் 1968இல் தேசிய அறிவியற் புலங்களின் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கத்தைப் பெற்றார்.[6] in 1968.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58404.html. பார்த்த நாள்: ஆகத்து 22, 2012. 
  2. Beals, C. S. (1933). "Classification and temperatures of Wolf-Rayet stars". The Observatory 56: 196–197. Bibcode: 1933Obs....56..196B. 
  3. Swings, P. (1942). "The Spectra of Wolf-Rayet Stars and Related Objects". Astrophysical Journal 95: 112–133. doi:10.1086/144379. Bibcode: 1942ApJ....95..112S. https://archive.org/details/sim_astrophysical-journal_1942-01_95_1/page/112. 
  4. "Winners of the Gold Medal of the Royal Astronomical Society". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "The Franklin Institute Awards - Laureate Search". Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2015-05-24.
  6. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்கித்_எட்லேன்&oldid=3691292" இலிருந்து மீள்விக்கப்பட்டது