பெங்கிசெர் ஒடுக்க வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெங்கிசெர் ஒடுக்க வினை ( Benkeser reduction reaction) என்பது பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன்களை ஐதரசனேற்றம் செய்யக்கூடிய ஒரு வினையாகும். குறிப்பாக நாப்தலீன்களை இலித்தியம் அல்லது கால்சியம் உலோகத்துடன் குறைந்த மூலக்கூற்று எடையுள்ள ஆல்க்கைல் அமீன்களைச் சேர்த்து இந்த ஐதரசனேற்ற வினை நிகழ்த்தப்படுகிறது. அமீன்கள் இவ்வினையில் கரைப்பானாகவும் புரோட்டான் வழங்கும் ஒரு மூலமாகவும் செயல்படுகின்றன. பிர்ச்சு ஒடுக்க வினையின் திருத்தப்பட்ட வடிவமே பெங்கிசெர் ஒடுக்க வினையாகும். அவ்வினையில் அமோனியா கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. அமோனியாவின் கொதிநிலைக்கு (−33 °செல்சியசு) மேற்பட்ட வெப்பநிலையிலும் பெங்கிசெர் ஒடுக்க வினையை நிகழ்த்தமுடியும் என்பது இவ்வினைக்கான கூடுதல் அனுகூலமாகும் [1].

கலப்பு எத்திலமீன்–டைமெத்திலமீன் கரைசலில் நாப்தலீனுடன் இலித்தியம் சேர்க்கப்பட்டால் பைசைக்ளோ[3,3.0]டெக்-(1,9)-யீன், பைசைக்ளோ[3,3.0]டெக்-(1,2)-யீன், பைசைக்ளோ[3,3.0]டெக்கேன் போன்ற சேர்மங்கள் விளைபொருள்களாகக் கிடைக்கின்றன [2][3]

பெங்கிசெர் ஒடுக்க வினை
.

மேற்கோள்கள்[தொகு]

  1. Institute of Chemistry, Skopje, Macedonia
  2. Edwin M. Kaiser and Robert A. Benkeser "Δ9,10-Octalin" Org. Synth. 1970, vol. 50, p. 88ff. எஆசு:10.15227/orgsyn.050.0088
  3. Merck Index, 13th Ed.

புற இணைப்புகள்[தொகு]