பெங்களூர் நாகரத்தினம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெங்களூர் நாகரத்தினம்மா
திருவையாறு தியாகராஜ சுவாமிகள் சன்னிதியில் உள்ள நாகரத்தினம்மா பெயர்பொறித்த கல்வெட்டு

பெங்களூர் நாகரத்தினம்மா (3 நவம்பர் 1878 – 19 மே 1952) என்கிற புகழ்பெற்ற கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் பண்பாட்டுச் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். தேவரடியார் மரபில் வந்த இவர் கலை வளர்ச்சிக்குதவும் புரவலராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கினார்.

Mukunda Mala stotra by Bengaluru Nagaratnamma

திருவையாற்றில் தியாகராஜர் சமாதியின் மீது ஒரு கோயிலை எழுப்பியவர். தியாகராஜ ஆராதனை விழா ஏற்பட உதவி அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர்[1]. முத்துப்பழனி என்ற பெண்கவிஞரின் ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்குக் காப்பியத்தை தேடிப்பிடித்து முந்தைய பதிப்பில் ஆபாசமாகக் கருதி வேண்டுமென்றே விடப்பட்ட பகுதிகளைச் சேர்த்து மறுபதிப்பு செய்தவர்[2]. மேலும் இவர் வெளிட்ட நூல்கள்: “மத்யா பானம்” (தெலுங்கு), சமசுகிருதத்தில் “ஸ்ரீதியாகராஜ அஷ்டோத்திட நாமாவளி” (சமசுகிருதம்) “பஞ்சகீரண பௌதீக” (தமிழ்)[3]

குறிப்புதவி[தொகு]

  1. தஞ்சை வெ.கோபாலன், "தேவதாசியும் மகானும் - புத்தக மதிப்புரை", பார்த்த நாள் மார்ச் 27, 2015
  2. கவிதா முரளிதரன், "மீண்டும் மீண்டும் காதல்", தி இந்து (தமிழ்), ஜூன் 7, 2014, பார்த்த நாள் மார்ச் 27, 2015
  3. பெங்களூர் நாகரத்தினம்மாள்

வெளியிணைப்புகள்[தொகு]